இடுகைகள்

பூமியில் உயிர்வாழ போராடும் லோரியன் கோள் இளைஞனின் போராட்டம் - ஐயம் நம்பர் 4

படம்
  ஐயம் நம்பர் 4 2011 இயக்கம் -டி.ஜே.காருசோ மூலம்- ஐயம் நம்பர்போர் -பிட்டாகஸ்லோர் ஒளிப்பதிவு கில்லர்மோ நவாரோ இசைடிரேவர்ராபின் லோரியன் என்ற உலகில் அந்நியர்கள் படையெடுத்து வர அங்கிருந்து ஒன்பது பேர் தப்பி பிழைத்து பூமிக்கு வருகிறார்கள் . இவர்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாவலர் உண்டு . அதாவது ஒன்பது குழந்தைகள் . இவர்களைக் கொல்ல எதிரிகள் தனியாக படை ஒன்றை அமைத்து பூமிக்கு வருகின்றனர் . அவர்கள் கையில் ஒன்பது பேரில் மூன்றுபேர் செத்துவிடுகிறார்கள் . இவர்கள் யார் இறந்தாலும் அடுத்து இறப்பவர்களின் உடலில் வடுக்கள் தோன்றும் . அவர்களின் சக்தி அபரிமிதமாக வெளிப்படும் . இப்படி சிக்கலில் சிக்கும் இளைஞனின் வாழ்க்கையும் , அவனது அன்பைத் தேடும் மனதும்தான் கதை . கடற்கரையில் தனது வகுப்பு தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கும் இளைஞனின் காலில் திடீரென ஆரஞ்சு நிற நெருப்பு பற்றி ஓர் அடையாள ம் ஏற்படுகிறது . இரு கைகளிலும் வெளிச்சம் ஆடி காரின் ஹெட்லைட்டில் வருவது போல வருகிறது . இதனால் அவனைச் சுற்றியுள்ள பெண்தோழி பயந்து ஓடுகிறாள் . இளைஞனின் பாதுகாவலர் அவனை ்உடனே அங்கிருந்து க

இந்திய சரணாலயங்களில் பரிதாபமாக பலியாகும் ஆசிய சிங்கம்! - அரசின் கவனக்குறைவு ஏற்படுத்திய அவலம்

படம்
    cc           மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்கங்

நீரிலுள்ள நச்சை நீக்கும் புதுமையான முறை! - நீர்நிலைகளில் நச்சு ஏற்படுத்தாத புதிய முறை!

படம்
      cc       நச்சை நீக்கலாம் எளிதாக ... பருவகாலங்களில் மழை நன்றாக பெய்தாலும் அதனை தேக்கி வைக்கும் ஆறு , குளங்கள் மாசுபட்டிருந்தால் அந்த நீரால் நமக்கு அணுவளவும் பயனில்லை . இதற்கு தீர்வாக நீர்நிலைகளிலுள்ள நச்சு வேதிப்பொருட்களை நீக்க உதவும் மேட்ரிக்ஸ் அசெம்பிளி கிளஸ்டர் சோர்ஸ் (MACS) என்ற கருவியை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரைச்சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . பொதுவாக இத்தகைய கருவிகளில் வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்ட கரைப்பான்களைப் பயன்படுத்துவார்கள் . இந்த கருவியில் அந்த அம்சம் இல்லை . ஸ்வனேசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் பால்மர் தலைமையிலான குழுவினர் மாக்ஸ் என்ற நச்சு நீக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர் . ” பொதுவாக நீரிலுள்ள நச்சுக்களை நீக்க ஓஸோன் போன்ற வேதிப்பொருட்களை தயாரிப்பார்கள் . இதன் தயாரிப்பு முறையே சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் . இதில் கழிவுப் பொருட்களும் வெளியேறும் என்பதால் நாங்கள் இம்முறையை முழுமையாக தவிர்த்து விட்டோம்” என்கிறார் ஆய்வாளர் பால்மர் . நச்சுகள் இல்லாத வினையூக்கியாக வெள்ளி அணுக்களைப் பயன்படுத்துகிறார்கள் . கரைப்பானா

ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நாயக்கர் பங்களாவில் பேய்! - நாயக்கர் பங்களா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
  நாய்க்கர் பங்களா இந்திரா சௌந்தர்ராஜன் விக்கிரம நாயக்கர் ஊரிலேயே பெரும் செலவு செய்து மாளிகை ஒன்றை எழுப்புகிறார் . இதனால் உள்ளூரில் ஜம்புலிங்கம் என்ற பணக்காரர் கொதித்தெழுகிறார் . விக்கிரம நாயக்கரை செங்கமலம் என்ற தாசி மூலம் சாய்க்கிறார் . இதனாகல் அவரின் முழு குடும்பமும் தற்கொலை செய்து அம்மாளிகையில் சாகிறது . இதனால் ஊரே மிரண்டு நிற்கிறது . யாரும் அந்த மாளிகையை வாங்க முன்வருவதில்லை . முப்பது ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் மாளிகையை யாருமே வாங்குவதில்லை . உண்மையில் அங்கு இருப்பது ஆவியா என கண்டறிய முற்படுகிறார் பரம நாயக்கர் . அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கதை . அமானுஷ்யமாக தொடங்கி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று முடித்து இறுதியில் ஆவிதாம்ப்பா என ஆச்சரியப்பட வைக்கும் கதை . இறுதியில் வரும் ட்விஸ்ட் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதுதான் வேதனை . மற்றபடி கதை மாளிகை உருவாவது , நாயக்கர் வாழ்க்கை வீழ்ச்சி வரை நன்றாக செல்கிறது . கோமாளிமேடை டீம் நூல் விமர்சனம், இந்திரா சௌந்தர்ராஜன்

சொத்தைக் கைப்பற்ற குடும்பத்திற்குள் நடக்கும் ரத்தக்களறி! - கணேஷ், வசந்த் துப்பறியும் கொலை அரங்கம்

படம்
                    கொலை அரங்கம் சுஜாதா கணேஷ் துப்பறியும் , வசந்த் ஏராளமான எசகுபிசகு நையாண்டி செய்யும் கதை . மௌபரி ரோடில் தொடக்கவிழா காணும் காம்ப்ளக்ஸ்தான் உத்தம்பீனா முத்தமிழ் மன்றம் . தொடங்கிய முதல்நாளே இலங்கை அமைப்புகள் பாம் வைக்கின்றன . அடுத்தடுத்த தாக்குதல்கள் பீனா , உத்தம்மை குறிவைத்து நடக்கின்றன . கட்டட தொடக்க விழாவிற்கு போன கணேஷ் - வசந்த் இந்த விவகாரங்களை அவர்களே சுயமாக எடுத்து விசாரிக்கின்றனர் . ஏராளமாக கிடைக்கும் சொத்துக்காக உத்தம் அல்லது பீனாதான் கொலைகளை செய்ய முயல்கிறார்கள் என நினைக்கிறார்கள் . ஆனால் அப்போது அமெரிக்காவிலிருந்து வரும் உத்தம் பீனாவின் உறவினர் ராஜேந்திரன் மீதும் சந்தேக நிழல் விழுகிறது . அவரை பின்தொடர்ந்து போகும்போது , ராஜேந்திரன் கொலையாகி லிப்டில் கிடக்கிறார் . உண்மையில் யார் கொலைகாரன் கணேஷ் அடிபட்டும் வசந்த் முதுகில் குத்துப்பட்டு கண்டுபிடிப்பதுதான் இறுதிக்காட்சி . கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சுஜாதாவின் நையாண்டி ரசிக்கவைக்கிறது . அதேநேரம் கொலையை யார் செய்திருப்பார்கள் என்று கணேஷை விட வாசகர்களை குழப்பிவிடுகிறார் . பிறருக்கு ஏற்ப

ஆங்கிலம் கற்பதை அரசு தடுக்கவில்லை! - டாக்டர் கஸ்தூரி ரங்கன்

படம்
                ஆங்கிலம் அறிவதை அரசு தடுக்கவில்லை ! டாக்டர் . கே . கஸ்தூரிரங்கன் முதலில் இருந்த கல்விக்கொள்கைக்கும் இப்போதைய கல்விக்கொள்கைக்கும் என்ன வேறுபாடு ? புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் பிரச்னைகளை தீர்ப்பது என்பது பற்றி தீர்க்கமாக கற்றுக்கொள்ள முடியும் . இதன்மூலம் புதிய பல்வேறு திறன்களை சுயமாகவே அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் . தொடக்க கல்வியில் மாணவர்கள் மொழிகளையும் , கணிதத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ளும் வசதி புதிய கல்விக்கொள்கையில் உள்ளது . உயர்கல்வியை பயில்வதில் இப்போது நிறைய சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது . இதனால் இந்தியாவில் நிறைய மாணவர்கள் ஆராய்ச்சித்துறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது . நீங்கள் சமர்பித்த அறிக்கைக்கும் இப்போதுள்ள கொள்கைக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா ? எங்களது அறிக்கையில் இருந்த பெரும்பான்மையான அம்சங்கள் , கொள்கையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன . தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் , அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவதாக நாங்கள் குறிப்பிட்ட 50 சதவீத உதவித்தொகை அம்சம் , மாற்ற ப்பட்டுள்ளது . இது உச்சநீதிமன்றத்தில் தலையீட்டினால்

மதிய உணவுத்திட்டம்! டேட்டா கார்னர்

மதிய உணவுத்திட்டம் டேட்டா கார்னர் ஒரு மாணவருக்கு 100 முதல் 150 கிராம் தானியங்கள் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது . ஒரு மாணவருக்கான சமையல் செலவு ரூ .4 முதல் 7 வரை ஆகிறது . 26 லட்சம் சத்துணவு பணியாளர்கள் நாடு முழுவதும் மதிய உணவுத்திட்டத்தை நாடெங்கும் சிறப்பாக செயல்பட உதவுகிறார்கள் . இவர்கள் மூலம் 11. 59 கோடி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் . இதற்கான செலவுகளை இந்திய அரசும் , மாநில அரசுகளும் 60-40 என்ற வகையில் பிரித்துக்கொள்கிறார்கள் . யூனியன்பிரதேசங்களுக்கு மத்திய அரசு முழுத்தொகையையும் செலுத்திவிடுகிறது . மலைப்பாங்கான நிலப்பரப்பு கொண்ட மாநிலங்களுக்கு 90 சதவீத தொகையை இந்திய அரசு வழங்குகிறது . கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இந்திய அரசு மாணவர்களுக்கான மதிய உணவிற்கு பதிலாக தானியங்களை வழங்க உத்தரவிட்டுவிட்டது . ஆனால் நிறைய மாநிலங்கள் அதனை பின்பற்றவில்லை . மத்தியப்பிரதேசம் , குஜராத் , ஒடிஷா ஆகிய மாநிலங்கள் உணவு தானியங்களையும் , சமைப்பதற்கான செலவையும் அளித்து வருகின்றன . ஆந்திர அரசு மட்டுமே மாணவர்களுக்கு முட்டையை வழங்கி வருகிறது . எப்போதும்போல

விண்வெளித்துறையில் கால்பதிக்கும் புதிய நிறுவனங்கள் இவைதான்! - தனியார் நிறுவனங்கள் படையெடுப்பு

விண்வெளித்துறையில் அரசின் பல்வேறு சீர்திருத்த செயல்பாடுகள் காரணமாக நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன . அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம் . அக்னிகுல் காஸ்மோஸ் ஶ்ரீநாத் ரவீந்திரன் மொய்ன் எஸ்பிஎம் சென்னையில் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது . சிறியளவிலான ராக்கெட்டுகளை தயாரிக்கும் நிறுவனம் . பிஐ வென்ச்சர்ஸ் முதலீடு - 3.1 மில்லியன் டாலர்கள் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நாக பாரத் டாகா , பவன்குமார் சந்தனா ஹைராபாத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . ராக்கெட்டுகளை வடிவமைத்து உருவாக்கும் பணி . முகேஷ் பன்சால் , அன்கிட் நகோரி , சோலார் துறை , வேதான்சு முதலீட்டு நிறுவனம் 4.3 மில்லியன் டாலர்கள் பெல்லாடிரிக்ஸ் ரோகன் கணபதி , விவேக் முருகேசன் , சாகர் மலைச்சாமி , யாஷ்காஸ் கரனம் பெங்களூருவில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது . செயற்கைக்கோள்களுக்கான புரோபல்ஷன் அமைப்புகளையும் , ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகின்றனர் . ஐடிஎஃப்சி பரம்பரா , கிட்வென் , தீபிகா படுகோன் , சுர்வம் பார

எங்களது அமைப்பு தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும். அவர்களோடு போட்டியிடாது! - ஜி. நாராயணன்

படம்
cc மொழிபெயர்ப்பு நேர்காணல் ஜி . நாராயணன் , நியூ ஸ்பேஸ் இந்தியா லிட் . நிறுவனத் தலைவர் . விண்வெளித்துறையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு திறந்துவிட்டுள்ளது . இதில் ஸ்பேஸ் இந்தியாவுக்கும் தனியார் நிறுவனங்களுக்குமான பங்கு என்ன ? மிகப்பெரிய திட்டம் இதன் பின்னால் உள்ளது . இனி இஸ்ரோ நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்து செயல்படும் . ஸ்பேஸ் இந்தியா அமைப்பு , வ ணிக ரீதியான ராக்கெட் ஏவுதல்கள் செயல்பாடுகளை செய்யவுள்ளது . இதன்மூலம் விண்வெளித்துறையில் இந்தியா புதிய சந்தையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது . உங்களுடையது அரசு அமைப்பு , தனியார் அமைப்புகளை வரவேற்பதாக கூறுகிறீர்களே எப்படி ? இஸ்ரோ அமைப்பு , அனைத்து பொருட்களையும் தானே தயாரித்துக்கொள்ளும் திறன் கொண்டதல்ல . இன்று வரை 60 சதவீத செயற்கைக்கோள்களையும் , 80 சதவீத ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தனியார் நிறுவனங்களிடம் தயாரித்து தரச்சொல்லி வாங்கி பயன்படுத்தி வருகிறது . எங்கள் அமைப்பின் நோக்கம் , தனியார் நிறுவனங்களை இத்துறையில் அதிகளவு ஈடுபடுத்துவதுதான் . ஐடி துறையில் இந்தியா பெற்ற வெற்றியை விண்வெளித்துறையில் அடைய இஸ்ரோ எண்ணுக

ஆன்லைன் விளையாட்டுகளில் விராட்கோலி! ஆதித்ய சாவந்த்

படம்
ஆதித்ய சாவந்த் -பப்ஜி விளையாட்டு வீரர் ஆதித்ய சாவந்த் ஆன்லைன் விளையாட்டில் சூப்பர்ஸ்டார் இவர்தான். பப்ஜி லைவாக விளையாடி ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்தார். கிரிக்கெட்டில் விராட்கோலியைப் போல என்று உங்களைச் சொல்லலாமா? சிரிக்கிறார். விராட்கோலியை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். நான் இணையம் மூலமாக இ விளையாட்டுகளை விளையாடி வருகிறேன். என்னிடம் இணைய இணைப்பும் போனும் உள்ளது. அதைப் பயன்படுத்தி புதிய விளையாட்டுக்களத்தைக் கண்டுபிடித்தேன். எனது அப்பா ஆசிரியர். அவர் என்னை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பி விளையாடச்சொல்லுவார். எனக்கு இணைய மையங்களில் விளையாட்டுகளை உற்சாகத்துடன் விளையாடுபவர்களைப் பார்த்து ஏக்கமாக இருந்தது. எனவே நானும் இணைய விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினேன். அதனை எப்படி ஒளிபரப்பும் யோசனை தோன்றியது? அப்போது ஒருவர் விளையாடுவதை அப்படியே ஒளிபரப்பினால் என்ன என்று யாரும் யோசித்திருக்க  மாட்டார்கள். அது பிறருக்கு ஆர்வமூட்டுவதாக அமையும என நினைத்தேன். அதனால்தான் யூடியூப் சேனல் தொடங்கி ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி அதனை ஒளிபரப்பத்தொடங்கினேன். நான் இதை தொடங்கும்போது இந்தியாவுக்கு இந்த பாணி புதிது. ஆ