இடுகைகள்

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

பெற்றோரை மீட்டு கொண்டு வர மந்திர நாற்காலியுடன் போராடும் சிறுவர்கள்! - தி மேஜிக் ட்ரீ 2009

படம்
      மேஜிக் ட்ரீ மந்திரசக்தி கொண்ட மரத்தை வெட்டி பல்வேறு பொருட்களை செய்கிறார்கள். அவற்றில் ஒரு துளி சக்தி மிஞ்சுகிறது. இதனால் சில பொருட்கள் தன்னிச்சையாக இயங்குகின்றன. ஆனால் அது எதனால என்று தெரியாமல் மனிதர்கள் அதனை வீடியோக்களாக எடுத்து பகிர்கிறார்கள். அப்போது முழு மந்திரசக்தியும் ஒரு நாற்காலிக்கு கிடைக்கிறது. அந்த நாற்காலி மூன்று சிறுவர்களைக்கொண்டு குடும்பத்திற்கு எதேச்சையாக கிடைக்கிறது. அவர்களுக்கு பெரிய பேராசை ஏதும் கிடையாது. பெற்றோர் தம்மிடம் பாசமாக இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். இதனை தான் அவர்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறார்கள். இந்த விஷயம் நிறைவேறும்போது ஏற்படும் பாதிப்புகள், பக்க விளைவுகள்தான் படம். குழந்தைகள் படம் என்பதால், அவர்களின் மனதில் உள்ள விஷயங்களை மீறிப்போகாமல் படம் எடுப்பது கடினம். இந்த படம் அந்தவகையில் குழந்தைகளின் மனதிற்கு நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. கொடுமைக்கார அத்தையை திட்டும்போது கூட அவள் சின்ன பெண்ணாக மாறிவிடவேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் அத்தையும் கூட அப்படியே இருப்பது நல்லது என நின

அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!

படம்
          அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை சாப்ட் பேங் டோக்கியோ ஜப்பான் 89.7 பில்லியன் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன். டிசிஎஸ் 100. 7 பில்லியன் மும்பை, இந்தியா இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா. ஏஎஸ்எம்எல் ஹோல்டிங் 124.5 பில்லியன் டாலர் வெல்தோவன், நெதர்லாந்து பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. உலகின்

எதிர்காலத்தில் புகழ்பெறவிருக்கும் ட்ரைவ் இன் விழாக்கள்!

படம்
            ட்ரைவ் இன் விழாக்கள் இங்கிலாந்தில் பெருந்தொற்று காரணமாக ட்ரைவ் இன் விழாக்கள் கொண்டாடப்பட தொடங்கியுள்ளன. ட்ரைவ் இன் விழாக்கள் என்றால், கார்களை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்தபடியே விழாவை ரசிப்பது, பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுவிட்டு அப்படியே காருக்குள் இருந்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி விடுவது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது. பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் விழா என்றால் மக்கள் ஒன்றுகூடி பேசுவது என்பது இதில் நடைபெற வாய்ப்பு இல்லை. கார்கள் இயங்கிக்கொண்டே இருந்தால் மாசுபாடு அதிகரிக்கும். விழாவில் நடனம் ஆடுவது கடினம். கார் இல்லாதவர்கள் விழாவுக்கு வரமுடியாது ஆகிய சிக்கல்கள் உள்ளன. பிளஸ் என்றால், உங்கள் இஷ்டம் போல இருக்கலாம். டிஜே பாடல் பிடிக்கவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள பாடலை இயக்கி ரசிக்கலாம். இவை எல்லாம் பெருந்தொற்று கால வரவு என்பதை புரிந்துகொண்டால் சரி. தி வீக் ஜூனியர்  

இங்கிலாந்து ராணி வழங்கும் பெருமைக்குரிய விருதுகள்! - நடப்பு ஆண்டில் பரிசு பெற்றவர்கள் யார்?

படம்
          இங்கிலாந்து ராணி அளிக்கும் பெருமைமிக்க விருதுகள் ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஜூன் மாதம் மக்களுக்கு சாதனை செய்த  மனிதர்களுக்கு இங்கிலாந்து ராணி விருதுகளை வழங்குவார்.நடப்பு ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பால் விருதுகளை வழங்கும் பணி தாமதமாகியுள்ளது. ஆனால் விருது பெறுபவர்களுக்கான 414 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருதுக்கு யாரும் யாரையும் பரிந்துரைக்கலாம். இவர்களை இதற்கான கமிட்டி ஒன்று தேர்ந்தெடுக்கும். இப்பட்டியலை இங்கிலாந்து பிரதமரும், ராணியும் பார்வையிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள் இப்பட்டியலில் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றிய பெலிகா குவாகு என்ற நர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முகத்திற்கான மாஸ்க் தயாரித்த தியோடர் ரைட் என்ற பதினாறு வயதான சிறுவன் பிரிட்டிஸ் எம்பயர் மெடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கிய மார்க்கஸ் ராஸ்போர்டு என்பவர் விருதுப்பட்டியலில் உள்ளார். ஜோ விக்ஸ் என்பவர், பொதுமுடக்க காலத்தில் சிறுவர்களுக்கான உடற்பயிற்சியை சொல்லித்தந்து பெருமை மிக்க விருதை பெறவிருக்கிறார்.   the week junior

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறிய

சமூக வலைதளங்களில் எதிர்மறையான விஷயங்கள் அதிகம் வருகின்றன! - பங்கஜ் திரிபாதி, இந்தி நடிகர்

படம்
        பங்கஜ் திரிபாதி இந்தி நடிகர் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதற்கும், அதன் பட்ஜெட்டிற்கும் தொடர்பு உள்ளதா? ஒரு படத்தை அதன் வருமானம், பட்ஜெட் வைத்து திட்டமிடக்கூடாது என்று நினைக்கிறேன். ஓடிடியைப் பொறுத்தவரை வார இறுதியில் வருமானம் கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். இல்லையெனில் அதனை புறக்கணித்து விடுவார்கள். நாம் கதை சொல்லுவதில் இன்னும் கவனமாக இருப்பதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டீர்களே ஏன்? அதில் நிறைய எதிர்மறை விஷயங்கள், அரசியல் வருகின்றன. நான் இரு நாட்களுக்கு ஒருமுறை எனது சமூக வலைத்தள கணக்குகளை சோதிப்பேன். மொபைல் போன்களையும் சமூக வலைத்தளங்களையும் குறைவாக பயன்படுத்துவது நமக்கு நல்லது. அவை நம்மை பயன்படுத்திக்கொள்வதை நாம் எப்போதுமே அனுமதிக்க கூடாது. மிர்ஷாபூர் வெப் தொடரில் வன்முறை அதிகமாக உள்ளதே? இதன் இரண்டாவது பகுதியும் அப்படித்தானா? நான் வன்முறையின் ரசிகன் அல்ல. கடந்த ஏப்ரல் பொதுமுடக்க காலத்தில்தான் நான் முழு தொடரையும் பார்த்தேன். இரண்டாவது பகுதியில் வன்முறை குறைவாகவே இருக்கும். புதிய கதாபாத்திரங்கள