இடுகைகள்

இனவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டம்! - மாந்தருள் தெய்வம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

படம்
                  மாந்தருள் தெய்வம் கல்கி கிருஷ்ணமூர்த்தி காந்தியின் வாழ்க்கையை அவர் பிறந்தது முதல் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெல்வது வரையிலான அவரது வாழ்க்கையைப் பேசுகிறது நூல் இது . நூலின் சிறப்பு என்னவென்றால் , இது பள்ளிக்குழ்ந்தைகளுக்கு காந்தியை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் . பனியா என்ற இனத்தில் பிறப்பது , அவரது குடும்ப வாழ்க்கை . தொழில்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . சமூக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கும் யாவரும் புரிந்துகொள்ளமுடியும் . இதனால் கஸ்தூரிபாய் காந்தி , மணிலால் காந்தி , ஹரிலால் காந்தி ஆகியோர் பற்றிய பகுதிகள் இதில் குறைவாகவே உள்ளன . அதனால் நூலைப் படிக்கும் எவருக்கும் பெரிய குறைபாடாக தோன்றாது . அந்தளவுக்கு பொதுநலனுக்கு காந்தி என்னென்ன விஷயங்களை யோசித்துள்ளார் என்பது வாசகர்களை ரசிக்க வைக்கிறது . லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்கும் பகுதி காந்தியின் வாழ்க்கையில் முக்கியமானது . இங்குதான் அவருக்கு உணவு , கலாசாரம் சார்ந்த

தம்பியின் டீம் ஜெயிக்க ஆவியாகி வந்து உதவும் அண்ணன்! - சிக்ஸ்த் மேன் 1997

படம்
            சிக்ஸ்த்மேன் 1997   Director: Randall Miller Produced by: David Hoberman Writer(s): Christopher Reed, Cynthia Carle Music by Marcus Miller Cinematography Mike Ozier பேஸ்கட் பால் விளையாட்டுதான் வாழ்க்கை . அதற்குப்பிறகுதான் பிற விஷயங்கள் என்று நினைக்கும் குடும்பம் . அதில் ஆண்டன் , கெனி என இரு சகோதர ர்கள் . இதில் அண்ணன் வெகு சாமர்த்தியசாலி . இவர்களுக்கு கோச் வேறு யாருமில்லை . அவர்களது தந்தைதான் . இந்த நிலையில் சிறப்பாக விளையாடி ஆண்டன் புகழ்பெற நினைக்கிறான் . ஆனால் ஒரு விளையாட்டில் கோல் போடும்போது மாரடைப்பு வந்து சடக்கென இறந்துவிடுகிறான் . அவன் நினைத்தபடி அவனது டீம் சாம்பியன் பட்டம் வென்றார்களா இல்லையா என்பதுதான் படம் .    படம் முழுக்க காதல் , தூக்கலாக காமெடி , கொஞ்சம் நெகிழ்ச்சி நிரம்பியுள்ளது . முழுக்க பேஸ்கட்பால் கோர்ட் , ஸ்கோர்போர்டு என்று நடைபெறுகிற படம் என்பதால் சிலருக்கு சலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது . அதற்குத்தான் பேன்டசி சமாச்சாரத்தை சேர்த்திருக்கிறார்கள் . ஆண்டனைத் தவிர பிறருக்கு அவ்வளவு சமர்த்து பத்தாது . அல்லது அவர்களுக்கு ஊக்கம் கொடுக

காட்டு விலங்குகளை வேட்டையாடி வரும் செல்லப்பிராணிகள்! - காட்டுயிர் காணாமல் போகும் அவலம்

படம்
                    காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்ப

தானியங்கி கார்களின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் சுணக்கம் ஏன்? முக்கியமான காரணங்கள் இவைதான்!

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன ? தானியங்கி

தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்

படம்
              தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . என

உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது கார்பன் அளவல்ல, மக்களின் பெருக்கம்தான்! - உடைத்துப் பேசிய ஆஸ்திரேலிய சூழலியலாளர்

படம்
            மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இன்றைய அவசர தேவை ! கார்பன் வெளியீடு , வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைவிட மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசிய தேவை என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . 2100 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . பல சூழலியலாளர்கள் இதுபற்றி பேசாமல் இருக்கும்போது , அதிரடியாக வெளிப்பட்டுள்ள இக்கருத்து தீர்க்கமாக யோசிக்கவேண்டியது ஆகும் . ‘’ இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தீர்ந்துவருகின்றன . அதனால்தான் தினசரி நாம் எழும்போது பல்வேறு விலங்குகளின் அழிவு , காடுகள் சுருங்கி வருவது , மீன்கள் குறைவது ஆகிய செய்திகளை கேட்கிறோம்’’ என்று நாளிதழில் பேசியிருந்தார் பாப் ப்ரௌன் . பெருந்தொற்றுகளால் மக்கள் இறப்பது அதிகரித்தாலும் , உலகளவில் பிறப்பு சதவீதத்தோடு ஒப்பிட்டால் அது சிறிய அளவுதான் . 1900 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை நூறு கோடிக்கும் சற்றே அதிகம் . ஆனால் 2023 இல் இந்த எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிக்கும் . 2