இடுகைகள்

ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

படம்
      ரியலா ? ரீலா ?   1. ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள் , காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும் . ரியல் : மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன . ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் . போப் கிரிகோரி ( கிரிகோரி தி கிரேட் ), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் . எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார் . அடுத்து , தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது . எனவே அதைத் தடுக்கவும் , வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு . 2. வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும் ரியல் : மண் , சுண்ணாம்பு , கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர் . பின்னாளில் சிமெண்ட் , மணல் , செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன . இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று . உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீட

குரங்கு வளர்க்கும் பெண்ணை நேசிக்கும் காதலனின் காதல் கதை! - குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன்

படம்
                      குரங்கு வளர்க்கும் பெண் தமிழில் மோகனரங்கன் லியனோர்டு மைக்கேல்ஸ் எழுதியுள்ள கதைதான் நூலின் தலைப்பாக உள்ளது . இந்த அமெரிக்க சிறுகதையாளரின் கதையில் உள்ள காதலும் , காமமும் பித்தேறிய நிலையில் உள்ளது . வேலை காரணமாக நகருக்கு வரும் பியர்டு , விலைமாது ஒருவளின் மீது காதல் கொள்வதுதான் கதை . அந்த காதலும் , இதயத்துடிப்பு போல அதனூடே பரவி வதைக்கும் காமமும் அவனை நெருப்பாக சுடுகிறது . இதற்காக அவன் செய்யும் விஷயங்கள்தான் கதையை நடத்திச்செல்கின்றன . காதலும் இரு பாலினத்தவருக்கான உறவுமுறைச்சிக்கலும் உரையாடலில் வெளிப்படுகிறது . மயக்கத்தில் இருப்பதுபோலான ஒன்றாக இருக்கும்போது தெரியாத வேறுபாடுகள் அவர்கள் உறவு கொண்டபின் வெளியாகின்றன . அது இருவருக்கும் கசப்பு ஏற்படுத்த பிரிகிறார்கள் . ஆனால் பியர்டுவினால் இங்கரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை . இந்த மயக்கம் அவனை என்ன செய்யத் தூண்டுகிறது என்பதுதான் கதையின் மையம் . யுவான் சுய்ங் சுய்ங் எழுதிய காதலனின் காது என்ற கதை பெண்களின் மனதைப் பேசியவகையில் முக்கியமான கதை . தாய்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் யுவான் . உறவு கொள்ளும்

நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020

படம்
                    ஏகே விஸ் ஏகே விக்ரமாதித்ய மோட்வானே இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது . படம் முழுக்க அனுராக் காஷ்யப் , அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல் , நக்கல் விரவிக் கிடக்கிறது . அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது . அனில் கபூர் , அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள் . அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது . அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார் . அனில் கபூர் , மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார் . அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார் . நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார் . இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார் . அவர் நடிக்க மாட்ட

சிப்கோ இயக்கதில் பங்கு பெற்றதுதான் சூழல் பற்றிய எனது முதல் அனுபவம்! - சுனிதா நரைன், சூழலியலாளர்

படம்
          சுனிதா நரைன்       சுனிதா நரைன் சூழல் மற்றும் அறிவியல் மையத்தைச் சேர்ந்த சுனிதா நரைன் , பூச்சிக்கொல்லிகள் , தேன் கலப்படம் என பல்வேறு விஷயங்களுக்கு எதிராக போராடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார் . 2002 ஆம்ஆண்டு அனில் அகர்வால் இறந்தபிறகு , அவர் தொடங்கிய நிறுவனத்தை ஆராய்ச்சி மற்றும் போராட்டங்களில் பங்கேற்க கூடியதாக சுனிதா மாற்றியிருக்கிறார் . இவருக்கு சூழல் மீது ஆர்வம் கொள்வதற்கான சூழல் தற்செயலாக ஏற்பட்டது . 1979 ஆம்ஆண்டு பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார் . அப்போது சூழல் தொடர்பான பயிற்சி பட்டறையை காந்தி அமைதி அறக்கட்டளை நடத்தியது . அதில் பங்கேற்றவருக்கு சிப்கோ இயக்கம் பற்றி தெரிய வந்தது . 1973 இல் உத்தர்காண்டில் தொடங்கிய இயக்கம் அது . இதனை உருவாக்கியவர் சுந்தர்லால் பகுகுணா . கார்த்திகேய சாராபாயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் . இவர்கள் அகமதாபாத்தில் உருவாக்கிய விக்ரம் சாராபாய் டெவலப்மெண்ட் இன்ட்ராக்சன் என்ற நிறுவனம் உலகளவில் முக்கியமானது . 1981 இல் அனில் அகர்வாலை சுனிதா சந்தித்தார் . பினாங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மலேசியா அரசுக்கு சூழல் தொடர்

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில்

2020 இல் கற்றுக்கொண்டதை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்! ஆலியா பட், இந்தி நடிகை

படம்
                ஆலியாபட் இந்தி நடிகை 2020 ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம் . இக்காலகட்டத்தை எப்படி சமாளித்தீர்கள் ? நான் பெருந்தொற்று காலத்தை எழுதுவதில் செலவிட்டேன் . இது மனிதர்களுக்கும் பூமிக்கும் கூட எளிதான கால கட்டம் அல்ல என்பது உண்மை . இந்த ஆண்டில் கற்ற விஷயங்களை அடுத்த ஆண்டில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை . 2021 இல் நீங்கள் நடித்த பிரம்மாஸ்திரா , கங்குபாய் கதியாவடி என்ற இரு முக்கியமான படங்கள் வெளிவரவிருக்கின்றன . ஆர்ஆர்ஆர் என்ற படம் 2022 இல் வெளியாகவிருக்கிறது . பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? நான் படத்தை தேர்நெதடுப்பது கதை மற்றும் எனது கேரக்டர் சார்ந்து மட்டும்தான் . இவற்றோடு இயக்குநரின் படங்கள் பேசும்படியாக இருந்தால் படம் பெரிதாக தோன்றும் . படங்கள் என்பது முழுக்க இயக்குநரின் தோளில்தான் உள்ளது . அவர் எப்படி கதையை சொல்லவேண்டும் என நினைக்கிறாரோ அதைப்பொறுத்து படம் பெரியதாகவே பட்ஜெட்டிலோ அமையும் . ஆடைகளுக்கான பிராண்டு எப்படி உருவாக்கவேண்டும் என்று தோன்றியது ? நாம் பயன்படுத்த

அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்

படம்
                  லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா பிரன்ட்லைன் திவ்யா திரிவேதி லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள் ? உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள் . இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும் . அதில் வரும் செய்திகள் எப்படி , யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா ? அதுபோலதான் இதுவும் . என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை . திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர் . வழக்கு , சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது . ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர் . புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன . இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் தூண்டுதல்தான் .   அப்போது இந்துகள் ஆபத்த

மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்

படம்
                  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது நிகில் தே அனுபமா கடகம் பிரன்ட்லைன்    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது . ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது . ஏராளமான போராட்டங்கள் , பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது . இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம் . எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது . இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன . முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது . இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக