இடுகைகள்

மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

படம்
        1. உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும் . ரியல் : 1980 களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள் , காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள் . உண்மையில் பனி , வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது . உயர் ரத்த அழுத்தம் , மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது . சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும் . இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர் . ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் . உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை . 2 . பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு . ரியல் : சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது . இந்த ஒலிகள் இரண்டு , மூன்று நாட்கள் ஒலித்திருப்பதை தேசிய தட்பவெப

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!

படம்
              உண்மையும் உடான்ஸூம்! ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள் ரியல் : ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை . ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை . ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது . தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442 ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர் . பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர் . அங்கு அடிமைகள் விற்பனையோடு , தங்கம் , யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன . 1619 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் . நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன ரியல் : நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்பிக்கை இது . ஆனால் இது உண்மையல்ல .

ஜோபைடன் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே வாய்ப்பு அதிகம்! - மைக்கேல் குஜெல்மேன்

படம்
              மைக்கேல் குஜெல்மேன் தெற்காசியாவுக்கான வில்சன் சென்டர் துணை இயக்குநர் அமெரிக்க அதிபராகியுள்ள ஜோ பைடனுக்கு அடுத்துள்ள சவால்கள் என்ன ? அவர் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் ? பைடன் இப்போதைக்கு உள்நாட்டில் உள்ள அவசரகால நிலைமையை கவனிக்க வேண்டும் . இப்போது பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விஷயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன . அவை , பெருந்தொற்று , பொருளாதாரம் , இனவெறி , பருவச்சூழல் ஆகியவையாகும் . இவற்றை எக்சிகியூட்டிவ் ஆர்டராக பைடன் கையெழுத்திட்டு செயல்படுத்த உள்ளார் . அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டம் , பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குடியேறுவதற்கான தடை ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார் . இதனால் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவில் உருவாக்கப்படாமல் போகவில்லை . அவர்கள் விரைவில் பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் இணைய உள்ளனர் . அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் மேலும் பல்வேறு ஆணைகள் செயல்பாட்டிற்கு வரும் . உள்நாட்டுப் பாதுகாப்பு , குவான்டினாமோ சிறை மூடல் ஆகியவற்றையும் இதில் இணைப்பார்கள் . ஆப்கானிஸ்தானில் படைகள

விக் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியா! - ஏற்றுமதி செய்யப்பட்டு சீனாவில் தயாராகிறது விக்

படம்
              கோவில்களிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தலைமுடி ! ஆந்திர மாநிலத்தில் கோவில் பக்தர்களால் வேண்டுதலுக்காக இறக்கப்படும் தலைமுடி , ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது . இம்முடியை வாங்கும் நிறுவனங்கள் அதனை தூய்மைப்படுத்தி விக் தயாரிக்க ஏற்றது போல மாற்றி சீனா , ஹாங்காங் நாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர் . ஆந்திரத்தில் பிரபலமான வெங்கடேஸ்வரா கோவிலை , திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது . இங்கு வரும் பக்தர்கள் தங்களது ஆசைகள் , விருப்பங்களை பூர்த்தி செய்தால் முடியை இறக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர் . தினசரி 90 ஆயிரம் பேருக்கு மேல் கோவிலுக்கு வரும் பக்தர்களில் , 30-50 சதவீதம் பேர் தங்கள் தலைமுடியை இறைவனுக்கு காணிக்கையாக்குகின்றனர் . இதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் . இங்கு ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்துக்கொள்கின்றனர் . முடியை இறக்குவதற்கு பதிலாக பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது . 2013 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது . இங்கு காணிக்கையாகப் பெறப்படும் முடியை