இடுகைகள்

தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!

படம்
            காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர் ! கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி , அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது . இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் . இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு , தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார் . அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார் . இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர் , இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் . இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர் . இவரது தோட்டத்தில் மிளகு , பீன்ஸ் , ஏலக்காய் , பீர்க்கை , கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார் . பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான

கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

படம்
      வாடகை வேண்டாம் ! இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான் . கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது . வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு . அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள் . சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது . நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர் . பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார் . இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ .12 லட்சத்தை இழந்துள்ளார் . இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை , அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது . ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார் . 1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்த

மத்திய பட்ஜெட் 2021-22 டேட்டா கார்னர்

படம்
            மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது . இதன் விசேஷன் அதன் அம்சங்களை விட தாக்கல் செய்யப்பட்ட முறையில் உள்ளது . இதுதான் இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் . நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி மூலமே பெற முடியும் . பட்ஜெட்டை அச்சிடுவது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் நிர்மலா சீதாராமன் கூட டேப்லெட்டில் பட்ஜெட்டை வைத்திருந்தார் . இதிலுள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இப்போது பார்ப்போம் . சுகாதாரம் 2,23, 846 கோடி நீர் , சுகாதாரத் திட்டங்களுக்காக இத்தொகை செலவிடப்படுகிறது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் . சந்தையில் பெறும் நிதி 9,67,708 சந்தையில் பற்றாக்குறைக்காக பெறவிருப்பதாக அரசு சொன்ன தொகை இது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் இத்தொகை அதிகரித்துள்ளது . பணப்பற்றாக்குறை சதவீதம் 6.8 சதவீதம் நடப்பு ஆண்டில் பணப்பற்றாக்குறை சதவீதம் 9.5 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது . காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 74 சதவீதமாக உள்ளது . சிறுகுறு தொழில்துறைக்கான ஒதுக்கீடு 15,7

மக்களின் வாழ்க்கையிலிருந்து சுகாதாரத்தை தனியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
              நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஜவுளிபூங்கா பற்றி அறிவித்திருக்கிறீர்கள் , இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஜவுளிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் திறன் கொண்ட நாடாக உள்ளோம் . ஆனாலும் கூட இத்துறையில் நாம் பலவீனமாக இருக்கிறோம் . அதில் நாம் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஜவுளி பூங்காவை அறிவித்திருக்கிறோம் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான நிறைய முயற்சிகள் உள்ளன . ஆனால் , வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இதில் கூறப்படவில்லை . பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போய்விட்டன . நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவப் போகிறீர்கள் ? ஆத்மாநிர்மார் பாரத் திட்டத்தை அறிவித்தபோது , நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திரும்ப வேலையில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களின் பிஎப் பணத்தை கட்டும் என்று கூறினேன் . இந்த தொகையை அரசு இரண்டு ஆண்டுகள் செலுத்தும் . ஜப்பான் , ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம் . இந்திய மக்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் . நாம் பல்வேறு நாடுகள

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டனர் . இங்கு அதிக அறைகள் இல

வட இந்திய தொழிலாளர்களுக்கு உதவிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன்!

படம்
              டாக்டர் விஜய் கார்த்திகேயன் திருப்பூர் ஏராளமான வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நகரமாக திருப்பூர் மாறியுள்ளது . இதனால் அங்கு பொதுமுடக்கத்தின்போது தேவையான உதவிகளை கவனமாக வழங்கும் தேவை இருந்தது . இதனை கச்சிதமாக நிறைவேற்றினார் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் . விஜய் கார்த்திகேயன் மருத்துவராக இருந்து குடிமைப்பணித்தேர்வு எழுதி ஆட்சியரானரர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து பல்வேறு உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார் . இவர் மட்டுமே 62,744 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார் . இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்றைத் தொடங்கி அதில் பல்வேறு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் . இதன்மூலம் தேவைப்படும் உதவிகளை களத்தில் வழங்க மட்டுமே நகரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தயாராக இருந்தனர் என்பது விஜய்யின் திட்டமிடலுக்கு சரியான உதாரணமாக இருக்கும் . திருப்பூர் கொரோனா போராளிகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிப்புற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர் . இதற்கு பல்வேறு அரசு அதிகாரிகளும்

சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

படம்
                  சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி ! கடந்த ஆண்டு மார்ச் 24 இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது . அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம் , வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே . இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார் . ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர் . அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர் . கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது . பல்வேறு சிறு , குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது . நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது . இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா , முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை , பருப்பு , மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர் . கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து

சூனியக்காரி என்று தூற்றப்பட்ட பெண்களின் உயிரைக் காப்பாற்றிய அசாதாரணப் பெண்மணி!

படம்
                உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி ! அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா . இவர் 2010 ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார் . ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன . '' இப்போது , அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது . என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது . நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன் . ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான் . அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் '’ என்றார் ராபா . கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா . இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார் . அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை . '' எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான் . ஆனால் இதுபற்றி

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

படம்
              ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர் ! கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று , சிவ்பால் சிங் , தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார் . விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் , மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது . இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங் , ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார் . மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் . சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார் . இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும் , இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் . ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும் . ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால்