இடுகைகள்

தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க பக்தர்களின் வேண்டுகோள்தான் காரணம்! - முதல்வர் பழனிசாமி

படம்
  நேர்காணல் முதல்வர் பழனிசாமி நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி அரசியலைப் பின்பற்றுகிறீர்களா? அதிமுகவின் பொதுசெயலாளராக விளங்கிய அம்மா யாருடனும் ஒப்பிட முடியாதவர். நாங்கள் அவர் வகுத்த நலத்திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். அவரைப் போல சிறந்த தலைவரை நாங்கள் கண்டதில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும்.  ஜெயலலிதாவை உங்கள் வழிகாட்டி என்று சொல்லுகிறீர்களா? கண்டிப்பாக. அவரின் தலைமைத்துவ வழிகாட்டலில் நான் நிறைய ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் காரணமாகவே நான் இன்று முதல்வராகி மக்களுக்காக அவரது வழியிலேயே செயல்பட்டு வருகிறேன். அவரது ஆளுமை பிரமாண்டமானது. நான் அவரை எனது வழிகாட்டி என பெருமையுடன் கூறிக்கொள்ளுகிறேன்.  நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமருவோம் என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் அது அதிமுகவில் சாத்தியமாகிற ஒன்றுதான். இங்கு கீழ்நிலையில் உள்ளவராக இருந்தாலும் கூட எம்எல்ஏ, எம்பி, முதல்வர் என்று படிநிலையை எட்டிப்பிடிக்க முடியும். இது மன்னர் பரம்பரை சார்ந்த கட்சி கிடையாது.  பிற முதல்வர்கள் செய்யாத

சீனப்பெயர் உள்ள பழங்களின் பெயர்களைச் சொல்லுங்கள்! - விஜய் ரூபானி, குஜராத் முதல்வர்

படம்
நேர்காணல்  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு குஜராத் முதல்வரானபோது, அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கே விஜய் ரூபானி தொடர்ச்சியாக இருக்கையில் இருப்பாரா என்று தெரிவில்லை. ஆனால் அமித் ஷாவின் அருளாசியைப் பெற்றவரை இதுவரை யாரும் அசைக்க முடியவில்லை. கோவிட்- 19 பிரச்னையை படுமோசமாக கையாண்ட முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவரிடம் பேசினோம் அடுத்துவரவிருக்கும் தேர்தலில் ஜெயிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரண்டையும் சமாளிக்க திட்டங்களுடன் உள்ளோம். காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட அளவில் என எதிலும் வெல்லுவதற்கான திறனின்றி உள்ளது. குஜராத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். இதற்கு வட்டி கிடையாது. 1.6 லட்சம் பேருக்கு நாங்கள் வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். மோடியில் ராமர்கோவில் கட்டும் திட்டம், இன்னும் பல்வேறு திட்டங்கள் காரணமாக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். எங்கள் மாநிலத்தில் வேலையின்மை அளவு 3.4 சதவீதமாக உள்ளது.  குஜராத்தில் உங்கள் கட்சி 25 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. எதிர்ப்புகள் வரவில்லையா? இல்லவே இல்லை. நாங்கள் மக்களுக்கான வளர

காற்று மாசைத் தீர்க்க ஹைட்ரஜன் உதவுமா?

படம்
  காற்று மாசைத் தீர்க்குமா ஹைட்ரஜன்? டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் குறைக்க, ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம், அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.  இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கும், ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கும், கரிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இதில் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு இயற்கை எரிவாயு பயன்படுகிறது. மின்சார உருவாக்கத்திற்கு நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய இயற்கை வள ஆதாரங்கள் உதவுகின்றன. ஹைட்ரஜன் வாகனங்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, கரிம எரிபொருட்களை விட குறைவு. இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகளை இயக்கும் யோசனையை முன்னர் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உலக நாடுகள் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜப்பானும், தென்கொரியாவும் ஹைட்ரஜன் வாகனங்களை ஆதரித்து, உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவும், சீனாவும் மின் வாகனங்களை உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களாக மோட்டார் சைக்கிள் முதல் பேருந்துகள் வரை இயக்கப்படவும் தொடங்கிவிட்டன.  ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் (HV), மின் வாகனங்

மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

படம்
  தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி! டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது?  டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங்.  இங்குள்

ஆசிரியர்களின் கல்விச்சிந்தனைகளை வளர்க்கும் திட்டம்!

படம்
 கல்வித்துறையில் கண்டுபிடிப்புகளின் தேவை!  ஆசிரியர்களிடையே புதிய சிந்தனைகளை வளர்த்து கல்வித்திறனை அதிகரிக்க, மத்திய அரசு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் இன்னோவேஷன்ஸ் ஆப் எஜூகேஷன் இனிஷியேட்டிவ்ஸ் (ZIIEI) திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் குறைவாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசு, புதிய முயற்சிகளை நடைமுறைக்கு கொண்டு வர முயன்று வருகிறது.  பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவர ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களின் ஆதரவின்றி மாணவர்களை ஊக்கப்படுத்துவது கடினம். இதனால் அவர்களுக்காகவே அரசு, அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து கல்வி மாற்றச் சிந்தனைகளை உருவாக்கி வருகிறது.  இதற்காக 2015ஆம் ஆண்டு உருவான (ZIIE)இத்திட்டத்தில் இந்தியா முழுக்க உள்ள திறமையான 65 ஆசிரியர்களை இணைத்துள்ளனர். இவர்களின் கல்வி பயிற்றுவிக்கும் யோசனைகளை அரசுப்பள்ளிகளில் செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.  கல்வித்துறையில் பிற துறைகளைப் போல அதனை கற்பிக்கும் முறை தொடங்கி பாடங்கள், தேர்வு, மதிப்பெண் என பல்

சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் நாளிதழ்களை படிக்கும்போது சில அரசு நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நிறுவனத்தின் பெயருக்கு கீழே நவரத்னா விருது பெற்றது என்று அச்சிட்டிருப்பார்கள். பல்வேறு நிறுவனங்கள், தங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அப்படி விருது பெற்றது என்று குறிப்பிடுவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா? பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு மூன்று பிரிவாக பிரிக்கிறது. மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா.  இவற்றை அவற்றின் மதிப்பு, வருமானம், பங்குச்சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில், செபி அமைப்பின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். மினிரத்னா மினி ரத்னா நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரிவு 1 இல் உள்ள நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான லாபத்தைப் பெற்று இருக்கவேண்டும். அவை சார்ந்த தொழில்துறையில்  500 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கவேண்டும்.  பிரிவு 2 இல், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்கிலான லாபத்தை பெற்றிருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் மினி

தாய்மொழியில் அறிவியல் கற்கலாம்!

படம்
   இந்தியாவிலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்கிலம் தவிர்த்த உள்ளூர் மொழிகளில் அறிவியல் தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ஆங்கில மொழி அறிந்தவர்கள் எளிமையாக உலகில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியும். ஆனால் அம்மொழியை அறியாதவர்களுக்கு அது கடினம். அறிவியல் விஷயங்களை,  ஆங்கிலத்தில் கற்பதை விட தாய்மொழி வழியாக கற்பது இன்னும் எளிதாக இருக்குமே! இந்த எண்ணத்தில்தான் இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்கள் தனியாகவும், குழுவாகவும் இணைந்து  அறிவியல் தகவல்களை உள்ளூர் மொழிகளில் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இத்தகவல்கள் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கானவை.  இம்முறையில் மன்றம் என்ற அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்றும்  அறிவியல் வல்லுநர்கள், அறிவியல் தொடர்பான செய்திகளை எளிமையாக விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கன்னடம், வங்காளம் என பல்வேறு மொழி சார்ந்த தன்னார்வலர்கள் அறிவியல் செய்திகளை தொழில்நுட்பம் சார்ந்த பகிர்ந்து வருகின்றனர். அறிவியல் செய்திகளை நீங்கள் வீடியோவாக பார்க்கவேண்டும் என்பதில்லை. ஒலிக்கோப்பாக கேட்