இடுகைகள்

ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!

படம்
                  ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும் ! ப . சிதம்பரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி , 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது . கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன . இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது . அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம் . உணவு , பாதுகாப்பு , வேலை , வீடு , சுகாதாரம் , கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும் . உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு , தானியங்கள் , பால் , காய்கறிகள் , மீன்களை உற்பத்தி செய்கிறது . அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது . ஆனால் அப்படி கிடைக்கவில்லை . 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர் . இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது . 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து

கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

படம்
            நேர்காணல் பேராசிரியர் பிராமர் முகர்ஜி உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது . இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள் . இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா ? இல்லை . உத்தரப்பிரதேசம் , மேற்குவங்கம் , பீகார் , டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன . இதற்குப்பிறகு ஆந்திரா , ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் . கேரளா , குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன . கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது . கேரளா , மேற்கு வங்கம் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம் . அசாம் , ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது . இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் . பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது . மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம் . 5,500 என இறப்பு எண்

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்

இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

படம்
              இயற்கையும் பழக்கத்தை தடுக்கும் ! தினசரி செய்யும் உடற்பயிற்சி , வாசிப்பு , வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு . வெயில் , மழை , புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது . அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது . அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது . 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது . அதற்குப்பிறகு நியூஜெர்சி , நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது . அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர் . புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது . ஏறத்தாழ 17 சதவீதம் . இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது .. தினசரி வாழ்க்கையை பல்வேறு மாற்றங்களு

மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ

படம்
            நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது , மக்க

கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்

படம்
                  போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் சேட்டன் பகத் நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன் . கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன் . இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன் . நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன் . ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே . பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர் . இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர் . அமெரிக்கா , சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது . அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது . இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன் . 1. நான் அனைத்து இந்துக்களையும் அறிவியல் மீது அவநம்ப

அதீத தேசியவாதம் உலக நாடுகளிடையே உள்ள கூட்டுறவைக் குலைக்கிறது!- சிவசங்கர் மேனன்

படம்
            சிவசங்கர் மேனன் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் இவர் தற்போது சாய்சஸ் இன்சைட் தி மேக்கிங் ஆப் இந்தியன் பாரீன் பாலிசி என்ற நூலை எழுதியுள்ளார் . இந்த நூலைப்பற்றியும் தற்போது உள்ள அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம் . வரலாற்றில் நிலப்பரப்பு என்பதை ஏன் முக்கியமாக நினைக்கிறீர்கள் ? நாம் உலக அரசியல் நடப்புகளில் பங்கேற்றுள்ளோம் . இதில் வலிமை வாய்ந்த நாடுகள் , அணிசேரா நாடுகள் ஆகியவை உள்ளடங்கும் . இந்தியா - அமெரிக்கா , இந்தியா - ரஷ்யா , இந்தியா - சீனா ஆகிய கூட்டணிகள் வரலாற்றில் உள்ளன . நாம் எப்படி உருவாகினோம் . எந்த இடத்தில் உருவாகினோம் என்பதை இன்று மறந்துவிட்டோம் . நிலப்பரப்புரீதியான அரசியல் என்பதில் வரலாறு , ஆதாரங்கள் , நிலப்பரப்பு ஆகியவை முக்கியமானது . நீண்டகால நோக்கில் பயனளிக்கும் விஷயங்களை செய்யவேண்டும் . சீனா இப்போது வளர்ந்து வரும் முக்கியமான நாடாக உள்ளது . ஆனால் அதிலும் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது . இந்தியாவில் கூட இதே விதமாக தேசியவாதம் ஆதிக்கத்தில் உள்ளது . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? தேசியவாதம் என்பது ் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோ