இடுகைகள்

குற்றம் செய்யும் சாகச உணர்வை அழுத்தி வைக்க முடியாது!

படம்
                  குற்றவாளிகள் ஒரே விதமான குற்றங்களை திரும்ப செய்கிறார்கள் ? இதனை குடிநோய் போல குணப்படுத்த முடியுமா ? தொடர்ச்சியாக குற்றங்களைச் செய்பவர்கள் , குறிப்பிட்ட விதிகளுக்குள் அடங்குவதில்லை . இவர்களுக்கு பணம் , அதிகாரம் கட்டுப்பாடு ஆகியவை தேவைப்படுகிறது . எனவே கொலை , கொள்ளை , வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள் . குடிநோய் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கும் உண்டு . இவர்களும் பிறர் போலவே வாழ விரும்புவர்கள்தான் . கொலைக்குற்றம் செயதவர்களை அதிலிருந்து மீ்ட்க வாழ்க்கைக்கல்வியை அளிக்கலாம் . சீரியல் கொலைகாரர்கள் , குற்றத்திற்கு அடிமையானவர்களா ? ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறி வருகிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் . கொலை செய்தவர்களை ஆராயும்போது முன்னர் அவர்கள் கொள்ளை அடித்தவர்களாக இருக்கிறார்கள் . அல்லது குழந்தைகளை வல்லுறவு செய்தவர்கள் , ஆபாச புகைப்படங்களை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் . எனவே இவர்களை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூட ஒருவகையில் குறிப்பிடலாம்தான் . இந்த குற்றவாளிக்கு இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா ? பெரும்பாலான குற்றவாளிகளுக்கு

நாட்டைக் காப்பாற்ற போரத் செய்யும் காமெடி களேபரங்கள்! போரத் 2

படம்
            போரத் கஜக்ஸ்தான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டு குவாரியில் வேலை செய்யும் போரத் இம்முறை சர்வாதிகார அரசின் அனுமதி பெற்று , அமெரிக்காவிற்கு அனுப்ப ப்படுகிறார் . அங்கு அவர் அதிபருக்கு பரிசு ஒன்றை வழங்கி நாட்டின் மீதான தடைகளை நீ்க்கவேண்டும் . எப்போதும் போல போரத் தனது கோமாளித்தனங்களோடு அமெரிக்கா செல்கிறார் . புத்திசாலித்தனம் கொண்ட குரங்கை பரிசாக கொடுக்க நினைக்கிறார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கூண்டில் அவரது மகள்தான் இருக்கிறாள் . ஆம் குரங்கை கொன்று தின்றுவிட்டு அவள்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள் . அதுவும் தனது மரப்பெட்டியில் . இதனால் அரசின் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க தனது மகளை பரிசாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறார் . மகளை கூண்டில் அடைத்து அழைத்துச்செல்கிறார் . உண்மையில் அவர் செய்யும் விஷயம் பற்றி அவருக்குத் தெரிந்ததா ? உண்மையில் பரிசை டிரம்புக்கு தர முடிந்த்தா அல்லது குறைந்தபட்சம் அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு அளிக்க முடிந்ததா ? என்பதுதான் இறுதிப்பகுதி .. அமெரிக்கா மற்றும் முஸ்லீம் நாடுகளை மையப்படுத்திய காமெடிதான் . ஆனால் நடப்பு நிகழ்வுகள் , ஆணா

மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

படம்
          குற்றமும் மனமும் டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள் . அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர் . குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர் . முதல் குற்றம் , இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது . டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம் , செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான் . 1978 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார் . அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார் . 1976 ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது . அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார் . ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை . பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர் . இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கா

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப

குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்

படம்
                  மார்ஷியல் யுனிவர்ஸ் சீன தொலைக்காட்சி தொடர் 42 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார் , உலகை காப்பாற்றினார் என்பதே கதை . இந்த தொடரின் முக்கியமான பலம் , லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும் , அபாரமான நடிப்பும் , சண்டையும்தான் . இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது . சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது . லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது . அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது . அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங் . நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான் . இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன் . அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்

குற்றவாளிகளின் கொலைப்பழக்கம் எப்படி தொடர்கிறது?

படம்
    நிகழ்ச்சிகள் பழக்கம் இன்று நெட்பிளிக்ஸ் , அமேசான் , எம்எக்ஸ்பிளேயர் வலைத்தளங்களில் வெப் சீரிஸ்களை பா்ர்க்க வைக்கும் நுணுக்கமான அல்காரிதம்களை பயன்படுத்துகின்றனர் . இதன்படி ஒருவர் என்ன விஷயங்களைத் தேடுகிறார் . என்ன படங்களைப் பார்க்கிறார் என்பது பற்றிய தகவல்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இத்னை வைத்து 90 நொடிகளில் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும்படியான விஷயங்களை தொகுக்கின்றனர் . இதனால் ஒருவர் பார்க்கும் அனுபவத்தை வைத்து அவருக்கேற்றபடி நிகழ்ச்சிகளை தொகுக்கின்றனர் . மேலும் படங்களின் வெப்சீரிஸ்களின் முகப்பு படங்களை பிறரது கவனத்தை ஈர்க்கும்படி வடிவமைக்கின்றனர் . இதனை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கின்றனர் . ஒரு வெப்சீரியசில் சில கேரக்டர்களை வைத்து கவர் ஆர்ட் செய்திருப்பார்கள் . ஆனால் அது அனைவருக்குமே பிடித்திருக்காது . எனவே மாற்றி அமைத்தால் தனிப்பட்ட விருப்பத்தின்படி அனைவரும் ரசிப்பார்கள் . நெட்பிளிக்ஸ் இம்முறையை பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது . உபர் நிறுவனம் , தனது வாகன ஓட்டுநர்களை ஊக்குவிக்க நெட்பிளிக்ஸின் முறையைத்தான் காப்பியடிக்கிறது . பிஸியான டைமிலும் ஓட்டுநர்களை வேலைவ

தொழில்நுட்பம், தகவல்பாதுகாப்பு, வங்கித்துறை, சமூக செயல்பாடு ஆகியவற்றில் சாதனை செய்யும் பெண்கள்!

படம்
                சாதனைப் பெண்கள் புருகல்ப சங்கர் துணை நிறுவனர் , அட்லான் இவர் பெரு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து வருகிறார் . சிங்கப்பூரிலுள்ள நான்யாங் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்றவர் இவர் . அங்கே இவரோடு படித்த வருண் பங்கா என்பவரோடு இணைந்து சோசியல் காப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் . அதன் மூலம் அரசு , தனியார் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாக்க விரும்பினார் . பல்வேறு நாடுகளில் இதுதொடர்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்டுள்ளனர் . இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்கான தகவல் தளமான திஷா என்பதை உருவாக்கியது இவர்கள்தான் . இதனை அட்லான் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினர் . இவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான அமைப்பை உருவாக்கியதுதான் முக்கியமானது . இப்போது கிட்அப் , மைக்ரோசாப்ட் அசூர் , அமேசான் வெப் சர்வீஸ் ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர் . சோனல் சிங் இயக்குநர் , துணை நிறுவனர் ஃபிட்டர் ஆப் கையில் இருநூறு பவுண்டுகள்தான் இருக்கி்ன