இடுகைகள்

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ

விலை பேசப்பட்ட கடவுள்- கட்டுரைகள்(அறிவியல், சமூகம், பொருளாதாரம், இயற்கை, தொழில்நுட்பம்) - மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுகின்றன. முடிந்தளவு ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை ஆதாரமாக கொண்டவை. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்திகளை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கும் யாரொருவரும் உணர முடியும். எழுதப்பட்டும் கட்டுரைகளை எப்படி இருக்கவேண்டுமென பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதன் காரணமாகவே கட்டுரைகளின் நோக்கம் பிடிபட்டது. அதற்கேற்ப நிறைய மாற்றங்களை செய்ய முடிந்தது. இதனை வெளியிட்டு உதவிய தினமலர்  நிறுவனத்திற்கும் நன்றிகள் கோடி.  நூலை வாசிக்கவும், வாங்கவும்..... https://www.amazon.in/dp/B095KTXV9X

வாளின் முனையால் விதியுடன் போரிட்டு காதலனை வெல்லும் வீராங்கனை! - லெஜெண்ட் ஆப் ஃபெய்

படம்
                      லெஜண்ட் ஆப் ஃபெய் சீன தொடர் 51 எபிசோடுகள் யூட்யூப் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட தனது முன்னோர்களுக்காக தற்காப்புக்கலையைக் கற்று துரோகிகளை வீழ்த்தும் மாபெரு்ம் வீரப்பெண்ணின் கதை . 48 ஸ்ட்ராங்ஹோல்ட் என்ற வம்சத்திற்கும் அதன் பரம எதிரியான திஷா மேனர் என்ற வம்சத்திற்கும் எப்போதும் பகை நிலவி வருகிறது . இதற்கு முக்கியமான காரணம் , திஷாவைச் சேர்ந்த ஷென் தியான்சு என்ற பழுப்பு ஓநாய் தலைவர் , சில பொக்கிஷங்களை அபகரிக்க தந்திரமாக விஷத்தைப் பயன்படுத்தி 48 ஸ்ட்ராங்ஹோல்டைச் சேர்ந்த லீ செங் , அவரது நண்பரான யின் குலத்தைச் சேர்ந்த யின் வெனலான் ஆகியோரையும் வீழ்த்துகிறார் . இதனால் அந்த வம்சங்களில் திஷாவைச் சேர்ந்த ஆட்கள் என்றாலே கத்தியை எடுத்து தொண்டையில் செருகும் ஆத்திரமும் வன்மமும் உள்ளது . இப்போது அனைத்து பொறுப்புகளும் இளைய தலைவர்களிடம் வருகிறது . 48 ஸ்ட்ராங்ஹோல்டை மூத்த தலைவர்களுடன் சேர்ந்து வழிநடத்துவது பெண் தலைவரான லீ . இவரது மகள்தான் தற்காப்புக்கலையைக் கற்கும் வேட்கை கொண்ட ஸூ ஃபெய் . பிடிவாதமும் , கோபமும் , துன்பம் என்றால் உடனே கரைந்தழும் இயல்

குழுவாக பழக்கங்களை கையாண்டு வெற்றி பெறுவது எப்படி? - பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள்

படம்
                  குழுவாக வெற்றி பெறுவது எப்படி ? குழுவின் தலைவராக இருப்பவரின் பல்வேறு விதிகள் அந்த குழுவினரின் மீது தாக்கம் ஏற்படுத்தும் . குறிப்பிட்ட நேர வரையறையில் வேலைகளை முடித்தல் , எதற்கு முன்னுரிமை கொடுப்பது . அலுவலக கலாசாரம் , காதலை அனுமதிப்பது என இதில் நிறைய விவகாரங்கள் உள்ளன . அடிப்படையில் பழக்கங்கள் என்பது தனிநபரிலிருந்துதான் தொடங்குகிறது . அப்பழக்கம் அவருக்கு வெற்றியைத் தந்தால் அது பிறருக்கு அப்படியே காப்பிகேட் செய்யப்படுகிறது . இதில் என்ன தவறு இருக்கிறது ? வெற்றி பெற்ற பார்முலாதானே ? பல்வேறு நிறுவனங்களிலுள்ள குழுக்கள் சிறப்பான பழக்கங்களை கடைபிடிப்பதால்தான் வெற்றி பெற்று நிறுவனத்தையும் உயரத்திற்கு கொண்டு செல்கின்றன . சிறிய பழக்கங்களாக இருந்தாலும் கூட பெரிய மாற்றங்களை இவை ஏற்படுத்துகின்றன . வணிக உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேலை செய்வதைப் பொறுத்தவரை சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன . பல்வேறு கொள்கைகள் , நோக்கங்கள் , துறைகள் என்றாலும் பழக்கங்கள்தான் நிறுவனங்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன . வணிக வட்டாரங்களில் தோல்வியை நேர்மறையாகவே ஏற்று

நான் கடினமாக உழைக்கிறேன் என்று கூற விரும்பியதில்லை! - கிரிக்கெட் வீர ர் ரவீந்திர ஜடேஜா

படம்
          ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட் வீர ர் முன்னர் நீங்கள் தேர்வு செய்யும் பந்துகள் , அடிக்கும் முறை விமர்சனத்திற்கு உள்ளானது . கேப்டன் தோனியே இதனை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும ன்று கூறியிருந்தார் . 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பவுன்சர்களை எதிர்கொண்டு ரன்களை சேகரிப்பது பற்றி இப்படி பேசப்பட்டது . இப்போது நீங்கள் முன்னேறியிருக்கிறீர்களா ? முதலில் பந்துகளை எதிர்கொண்டு அடிப்பது பற்றி இரண்டு வித கருத்துகள் இருந்தன . ஷார்ட் பால்களையும் பவுன்சர்களையும் ஷாட் அடிக்கலாமா என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன் . பின்னர் , பவுன்சர்களை எதிர்கொண்டு சிக்ஸ் அடிக்கத் தொடங்கியதும் மனதில் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிவிட்டது . ரன்களையும் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன் . தற்போதைக்கு உங்கள் அளவுக்கு வேகமாக பீல்டிங் செய்து ரன் அவுட் செய்யும்வீரர் உலகில் யாருமே இல்லை . உங்களது பீல்டிங் பற்றிய சீக்ரெட்டை சொல்லுங்கள் . இதற்கு பதிலை என் அப்பாதான் சொல்ல வேண்டும் . அவரின் ஜீன்தான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும் . பதிமூன்று ஆண்டுகளாக தோள்பட்டைக்கு பயிற்சிகளை செய்து வருகிறேன் . ஜிம்

விலங்குகளின் ஹார்மோன்களை மனிதர்களின் உடலில் செலுத்தி வினோத ஆராய்ச்சி!

படம்
              ஹார்மோன் மாயாஜாலம் ! உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்கள் , தனக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் ஏற்பது , பெண்களின் கூட்டத்தை ஆர்வமாக கவனிப்பது , குரல் உடைவது , நடவடிக்கையில் துணிச்சல் வருவது என கூறிக்கொண்டே போகலாம் . இன்று ஹார்மோன் என்றால் பெரும்பாலானோர்க்கு என்ன விஷயம் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது . நீரிழிவு அல்லது கருவுறுதலை தடுப்பதற்கு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தொடங்கியுள்ளது . எண்டோகிரைன் சுரப்பி மூலம் ரத்தத்தில் இணையும் இந்த வேதிப்பொருள் , உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் , மனநிலை என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது . இருபதாம் நூற்றாண்டு வரை ஹார்மோன்கள் இருக்கிறதா இல்லையா எப்படிவேலை செய்கிறது என்பது பற்றிய எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமல்தான் இருந்தது . மண்டையோடு , உடல் உறுப்புகள் , தசைகள் ஆகியவற்றில் உள்ளதாக தொடக்கத்தில் நம்பினர் . பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹார்மோன்களை எண்டோகிரைன் சுரப்பி சுரக்கிறது என்பதை கண்டறிந்தனர் . ஆனாலும் கூட அதன் செயல்பாடு பற்றி முழுமை யாருக்கும் தெரியவில்லை . ஹார்மோன்களிடையே வேறுபாடு தெரிய