இடுகைகள்

மாற்றுப்பாலினத்தவரை மனிதர்களாக காட்ட திரைப்படங்கள் தவறுகின்றன!

படம்
                மாற்றுப்பாலினத்தவர்களுக்கான மாதம் இது . முதலில் மாற்றுப்பாலினத்தவர்களை மோசமாக திரைப்படங்கள் சித்தரித்தாலும் கூட இப்போது ஓடிடி தளங்களில் கூட தைரியமாக ஓரினச்சேர்க்கை பற்றிய தொடர்களை தயாரித்து பல்வேறு மொழிகளில் வெளியிடும் அளவு துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் . தொடர்கள் மட்டுமல்லாது நிறைய படங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன . கோவா படத்தில் வெங்கட்பிரபு , ஓரினச்சேர்க்கையாளர்களை முக்கியமான பாத்திரங்களாகவே காண்பித்திருந்தார் . நகைச்சுவைப்படமாக இருந்தாலும் இப்படியான முயற்சிகள் முக்கியமானவை . ஆண்டுதோறும் மும்பையில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு வருகிறார்கள் . இதில் 30 படங்கள் திரையிடப்படுகின்றன . இந்த திரைப்படங்களை இந்த விழாவில் தவிர்த்து வேறு எங்கும் பார்க்க முடியாது . என்ன காரணம் என்றால் இந்தியாவிலுள்ள சென்சார் அமைப்புகள் இத்தகைய படங்களை திரையிட அனுமதி தருவதில்லை . நான் மாற்றுப்பாலினத்தவர்களைப் பற்றிய படங்களை உருவாக்கியபோது , அதனை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை என்றார் ஶ்ரீதர் ரங்கையன் . இவர் 2002 இல் உருவாக்கிய பிங்க் மிரர் எ

பிரிட்டிஷாரை பிற நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்! - எழுத்தாளர் வில்லியம் டால்ரைம்பிள்

படம்
            வில்லியம் டால்ரைம்பிள் இவர் company quartet என்ற பெயரில் நான்கு நூல்களை பாக்ஸ் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் . அடுத்தும் பெட்டி பெட்டியாக நூல்களை எழுதும் ஆராய்ச்சி செய்து வருகிறார் . அவரிடம் பேசினோம் .    ஜேஎல்எப் பார்முலா வேலைகளை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் . மக்கள் இப்போது படிப்பதை விட பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாலா ? எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளைப் பற்றி பேசவேண்டுமென இந்தியர்கள் விரும்புகிறார்கள் . மேலும் நாங்கள் எழுதும் நூல்கள் பத்து லட்சம் பேரில் ஒரு பகுதிப்பேர் மட்டுமே படிக்கவேண்டுமென உருவாக்குவதில்லை . நீங்கள் கூறுவதும் சரிதான் . நிறையப் பேர் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு குளிர் கண்ணாடிகளை அணிந்துகொண்டுதான் வாசிப்பு விழாக்களுக்கு வருகிறார் . ஆனால் இதிலும் கூட இளைஞர்கள் ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களில் பங்கெடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர் .    காலனித்துவ காலத்தை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம் இங்கிலாந்தில் அமைக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள் . ஆனால் தங்களது மூதாதையர்கள் செய்த பாவங்களை மக்கள் மறக்க விரும்பி அத

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது

பிராங்கென்ஸ்டைன் பரம்பரை வாரிசாக மாறும் வெல்மா! - ஸ்கூபி டூ எதிர்கொள்ளும் புதிய சவால்

படம்
              ஸ்கூபி டூ பிராங்கன் க்ரீப்பி அனிமேஷன் படம் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் வெல்மாவின் சொந்தங்களை தேடி மிஸ்டரி மெஷின் குழு செல்கிறது . அங்கு வெல்மாவுக்கு சொந்தமான மூதாதையரின் நிலம் , சொத்துக்கள் உள்ளன . அதனை அவளுக்கு சொத்துரிமைப்படி வழங்குவதாக வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார் . அப்புறம் என்ன ? ஆகா சொத்து என அங்கு கிளம்பி செல்லும் குழு , அங்கு நடக்கும் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து மீள்கிறார்கள் . உண்மையில் வெல்மாவுக்கு சொத்து கிடைத்ததா , பிராங்கன்ஸ்டைன் வம்சாவளி வாரிசு வெல்மாதானா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதா என்பதுதான் இறுதிக்காட்சி . இந்த தொடரில் மிஸ்டரி மெஷின் குழுவினரால் பித்தலாட்டங்கள் வெளிப்பட்ட அனைத்து எதிரிகளும் அவர்களுக்கு எதிராக கைகோக்கிறார்கள் . குழுவிலுள்ளவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் உளவியலை அடித்து நொறுக்கி டி 20 ஆட முழு குழுவுமே பீதிக்குள்ளாகிறது . இதில் முதலில் கண்விழிப்பது ஃபிரெட் மற்றும் வெல்மாதான் . அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களைச் சுற்றி நடக்கும் சதிவலைகளை அறுக்கிறார்கள்

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்

படம்
              பொறியாளர் அனு ராமசாமி நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் . இதுபற்றிய தங்களது கருத்து ? பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள் . இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன் . உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது . இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம் . நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன . குற்றச்செயல்கள் கூடுவது , காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம் . எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது . அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது ? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும் .    சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள் . இதைப்பற்றி விளக்குங்களேன் . மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது , அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம் , மக்களின் விருப்பம் , அரசின் கொள்கைகள்

அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்

படம்
            ரீபார்ன் சீனத்தொடர் 28 எபிசோடுகள் நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார் . உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை . பொதுவாக உடலில் நோய் , ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும் . இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது . தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன . ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை . முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது . என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர் . அதில் உரையாற்ற சொல்லும்போது , தனது விருதை து

தசைகளுக்கு எப்போதும் பயிற்சி அவசியம்!

படம்
            தசை அமைப்புகள்தான் எலும்புகளில் பொருந்தி நாம் உடலை அசைக்கவும் எழுந்து நிற்கவும் பல்வேறு வேலைகளை செய்யவும் உதவுகின்றன . வயிற்றுக்குள் உணவு செல்லவும் , நுரையீரலுக்கு காற்று செல்லவும் , ரத்தம் உடலெங்கும் செல்லவும் உதவுகின்றன . ஆனால் சரியான பயிற்சி இல்லாதபோது தசைகள் தங்கள் பலத்தை இழந்துவிடுகின்றன . புவியீர்ப்பு விசையும் தசைகளின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தன்மையை ஏற்படுத்துகின்றன . ஒருவரின் உடல் எடையில் தசைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது . விபத்துக்குள்ளாகி அல்லது நோயில் ஒருவர் படுத்த படுக்கையாகி மீண்டும் எழும்போது உடலில் வித்தியாசத்தை உணரலாம் . அதாவது , உடல் நடக்கவும் , நிற்கவும் தடுமாறும் . இதற்குக் காரணம் , தசைகளுக்கு சிறிது காலம் எந்த பயிற்சியும் கொடுக்காமல் இருப்பதே . இதனை தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும் . இல்லையென்றால் அதனை இழந்துவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள் மருத்துவர்கள் . ஒருவர் வெய்ட் லிப்டிங் பயிற்சி செய்யும்போது அதில் 700 சிறு தசைகள் இணைகின்றன என்கின்றனர் . உடல் பல்வேறு வேலைகளை செய்யும்போது அதில் தசைகள் மு