இடுகைகள்

பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன்.  வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம்.  எலிஸா பே எழுதிய இந்தி

காமத்தைப் பற்றி பேசும் நூல்கள்! - எழுதியவர்கள் அனைவரும் பெண்கள்தான்!

படம்
  காமத்தைப் பேசும் நூல்களில் சில... தி ஆர்ட்ஸ் ஆப் செடக்ஷன் சீமா ஆனந்த் ஆலெப் சீதாஸ் கர்ஸ் ஸ்ரீமோயி பியு குண்டு ப்ளூம்ஸ்பரி லாஸிங் மை வர்ஜினிட்டி அண்ட் அதர் டம்ப் ஐடியாஸ் மாதுரி பானர்ஜி பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  எரோடிக்  ஸ்டோரிஸ் ஃபார் பஞ்சாபி  விடோஸ் பலி கௌர் ஜஸ்வால் வில்லியம் மோரோ செக்ஸ் ஈஸ் மெமோர் ஆப் எ வுமன்ஸ் செக்சுவாலிட்டி பல்லவி பர்ன்வால் ப்ளூம்ஸ்பரி பாலஸ்  கல்ச்சுரல் ஹிஸ்டரி டாக்டர் அல்கா பாண்டே ஹார்பர் கோலின்ஸ் தி எல் வேர்ட் லவ், லஸ்ட் அண்ட் எவ்ரிதிங்க் இன் பெட்வீன் ஆஸ்தா அட்ரே பனான் ஹார்பர்கோலின்ஸ் இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவருமே பெண்கள் என்பதை நம்புங்கள். அதுதான் உண்மை. 

காமத்தைக் கொண்டாடிய இந்தி திரைப்படங்கள்!

படம்
  ஒருவர் பொது வாழ்க்கைக்கு வர பயப்படுவதன் காரணமே, அவரது தனி வாழ்க்கையையும் நடுத்தெருவுக்கு இழுத்து வரவேண்டும் என்பதுதான். காந்தி தன்னுடைய வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்து அதனை நூலாக எழுதினார். அதன் பிரதிபலனாக அவரது நோக்கத்திற்கு நிறைய சீடர்கள் கிடைத்தனர். அதோடு எதிரிகளும் உருவானார்கள். காந்தியின் செயல்பாடு பற்றி பேசும்போது, அவரின் செக்ஸ் பரிசோதனைகளைப் பற்றி பேசாதவர்கள் குறைவு. ஒருவகையில் மனதில் ஏற்படும் பாலியல் வறட்சி இதற்கு காரணம் என்று கூறலாம்.  பாலியல் விஷயங்களைப் பேசுவது என்பது இந்தியாவில் அவமானகரமான ஒன்றாக படுகிறது. காமசூத்திரா நூல்களை எரிப்பது, காதலர்களை அடிப்பது என மனநோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் பற்றிய செய்திகளை நாம் தந்தியில் எப்போதும் படித்துதானே வருகிறோம். இதையெல்லாம் தாண்டி பாலியல் சமாச்சாரங்களை மக்களுக்கு சொல்ல படங்களும் வந்துள்ளன. நூல்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.  காம சூத்ரா எ டேல் ஆப் லவ் (1996) இயக்கம் மீரா நாயர் நடிப்பு நவீன் ஆண்ட்ரூஸ், சரிதா சௌத்ரி சத்யம் சிவம் சுந்தரம்  1978 இயக்கம்  ராஜ் கபூர் நடிப்பு சஷிகபூர் ஜீனத் அமன் உத்சவ் 1984 இயக்கம்  கிரிஷ் கர்னாட்

நிலப்பரப்பு ரீதியான அரசியலைப் பேசும் நூல்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  போஸ்ட் கொரானா ஸ்காட் காலோவே பெங்குவின்  599 பெருந்தொற்று காரணமாக நாம் என்ன விஷயங்களை இழந்தோம், என்ன விஷயங்களை கற்றோம், தொழில்நுட்பம் முழுக்க நம்மை ஆட்சி செய்த காலம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் ஸ்காட் விவரித்துள்ளார்.  தி வேர்ல்ட் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் உபிந்தர்சிங் ஆக்ஸ்போர்ட் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் இந்தியாவின் முதல் தொல்பொருள் ஆய்வாளர். இவர் 1871ஆம் ஆண்டு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.  இந்த நூலில் 1871 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸ் எழுதிய 193 கடிதங்களைக் கொண்டுள்ளது.  இந்த கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கப்படுகின்றன. இவை அலெக்ஸின் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க உதவுகின்றன.  தி அன்ஃபார்கிவ்விங் சிட்டி அண்ட் அதர் ஸ்டோரிஸ் வாசுதேந்திரா பெங்குவின் 599 கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேந்திரா, கர்நாடக சாகித்திய அகாதெமி பரிசு வென்றவர். நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நட்பு, துரோகம், நேர்மை, விசுவாசம், அதிர்ச்சி என பல்வேறு விஷயங்களை கதைகளின் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  ட்ரில்லியன் ரா

நச்சுப்பொருட்களைக் கொண்ட பட்டாசுகளை கைவிடலாமா?

படம்
தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது என்பது கூடினாலும் குறைவதில்லை. வெடிப்பது மகிழ்ச்சிக்கான விஷயமாக இருந்தாலும் இதிலுள்ள வேதிப்பொருட்கள் காற்றை தொடர்ச்சியாக மாசுபடுத்தி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், காற்றை  மாசுபடுத்தும் பேரியம் உப்புகளைக் கொண்டு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றன. மேலும் இதனை தயாரிப்பவர்களின் பெயர்களும் பட்டாசுகளில் இடம்பெயர வேண்டும் என்று கூறியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. மேலும் காற்று மாசுபடுதல் காரணமாக குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து வருகிறது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம், பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது. குறைந்த மாசுபாடுகளைக் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என பரிந்துரைத்தது. இதுதொடர்பான வழக்கை அர்ஜூன் கோபால்தாஸ் மற்றும் சிலர், அரசியலமைப்புச்சட்டம் 21 யைச் சுட்டிக்காட்டி தொடுத்தனர். பட்டாசுகள் வெடிப்பதால் பல்வேறு வேதித்துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன. இதில் கடும் வெடிச்சத்தமும், பல்வேறு வண்ண ஒளியும

சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

படம்
  அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது.  இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம்.  மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார்.  சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் ந

நல்ல படத்தை வசூலிக்கும் தொகை தீர்மானிப்பதில்லை - ஹர்ஷ்வர்த்தன் கபூர்

படம்
            ஹர்ஷ்வர்த்தன் கபூர் இந்தி நடிகர் இரண்டு பொதுமுடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரைத்துறை சார்ந்த வேலைகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.  நான் அப்பாவுடன் இணைந்து டிஜிட்டல் வெளியீட்டிற்காக தயாராக உள்ள படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். வாசன் பாலா எடுக்கவிருக்கும் படத்தில் நானும் அப்பாவும் நடிக்கிறோம். எனவே ஒருசில மாதங்கள் தவிர பிற நாட்களில் எனக்கு வேலை இருந்தது.  நீங்கள் அறிமுகமான படம் மிர்சயா வெற்றிபெறவில் லை. அடுத்து வெளியான பவேஷ் ஜோஷி படத்தில் உங்களுடைய நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அந்தப்படம் கூட சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது? பவேஷ் ஜோஷி படம் பலராலும் சரியாக கவனிக்கப்படாத படமாக போய்விட்டது. அதற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள், இன்றும் கூட அதன் அடுத்த பாகத்தை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைத்தளம் வழியாக இதுபோல கோரிக்கைகள் வருகின்றன. அந்தப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல  படத்தை வசூல் தீர்மானிப்

சாதனைப் பெண்கள்- ஆட்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களித்த பெண்கள்

படம்
        மரியா க்யுட்டெரா டி ஜீசஸ் பிரேசில் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த துணிச்சல் நாயகி மரியா , அவருடைய அப்பாவின் பண்ணையில்தான் வளர்க்கப்பட்டார் . இதனால் அவருக்கு குதிரை சவாரி , விலங்குகளை வேட்டையாடுவது எளிதாக கைவரப்பெற்றது . மேலும் ஆயுதப்பயிற்சியும் எடுத்தார் . பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் . இப்போராட்டம் 1822 – 1824 ஆம் ஆண்டு நடைபெற்றது . அன்றைய காலத்தில் ராணுவத்தில் இணைந்து போரிட்ட முதல் பெண் இவர்தான் . போர்ச்சூகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர் , அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து துணிச்சலாக தாக்கினார் . இவரை பிரேசிலின் ஜோன் ஆப் ஆர்க் என்று அழைத்தனர் . ஆண்களைப்போலவே ஆடை அணிவது இவரது பாணி . இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் ராணுவத்தில் மரியா பெயரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது . ராணுவ சேவைக்காக இம்பீரியல் ஆர்டர் எனும் விருது வழங்கப்பட்டது . 1825 ஆம் ஆண்டு பிரிட்டன் , போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளும் இணைந்து பிரேசிலுக்கு சுதந்திரத்தை வழங்கின . 2   டோலரெஸ் இபாருரி சமூக செயல்பாட்டாளர் அனைவர

மக்களுக்காக போராடி அவர்களின் தலைவரான பெண்மணி! - கடிதங்கள்

படம்
  newslaundry அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? மம்தா பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன்.  மம்தா பிறந்து வளர்ந்த சூழல், கல்லூரி கால மாணவி, பின்னாளில் தலைவராவது, போராட்டங்கள், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்  என பல்வேறு விஷயங்களை புள்ளிவிவரங்களோடு நூலாசிரியர் எழுதியுள்ளார். மம்தாவே தனது பணிகளைப் பற்றி எழுதியுள்ள நூலை வாங்கியிருக்கலாம் என தாமதமாக நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தால் அதனை ஆன்லைனில் தான் வாங்க வேண்டும். அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அதிமுக கட்சியை ஒத்துள்ளதாக படுகிறது. இளமைப் பருவம், அரசியலுக்குள் மம்தா நுழைவது, அரசுக்கு எதிரான போராட்டம் ஆகிய பகுதிகள் படிக்க சுவாரசியமாக இருந்தன. உணர்ச்சிகரமாக மக்களுக்காக போராடியவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானது பெரிய சாதனைதான். தாயிடம் குழந்தை கவன ஈர்ப்பிற்காக சில விஷயங்களை செய்யும் இல்லையா? அதுபோல குணம் கொண்டவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் கூறியபடி அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வது எனக்கு சாத்தியமாக தோன்றவில்லை. காலையில் குட்மார்னிங் சொல்லவில்லை என்று எனது அலுவலக சகா கோபப்படு

மனிதர்கள் இறந்துவிடுவார்கள் ஆனால் பணம் சாசுவதமானது! - கடிதங்கள்

படம்
  15.2.2021 அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன். ஊரில் இருக்கும்போது சொந்தக்காரர்களின் வீட்டுக்குச் சென்றேன்.  கிடையில் விழுந்துவிட்ட டெய்லர் மாமா, சித்தப்பா வீட்டு ஆத்தா ஆகிய இருவரையும் நேரில் சென்று பார்த்தேன்.  ஆத்தாவுக்கு இடுப்பில் வலுவில்லை. கால்கள் வலுவில்லாத நிலையில் கண்களில் மட்டும் ஒளி தெரிந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்கள் மிகவும் பிரயத்தனம் செய்து அடையாளம் கண்டனர். கிளம்பும்போது கையெடுத்து கும்பிட்டதை மறக்கவே முடியாது. திரும்ப அவர்களது இறப்பிற்கு நான் ஊருக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன்.  நினைவுகள் மங்கி, யாரென்றே தெரியாத நிலையில் ஒருவரைப் பார்த்து இறைஞ்சுவது போல கையெடுத்து கும்பிடும் நிலை பரிதாபமாக இருக்கிறது. இன்னொரு மரணத்தைப் பற்றி சொல்லவேண்டும். பெரிய மாமன் கந்தசாமி, பிரஷர் கூடி மாரடைப்பு வந்து செத்துப்போனார். ஆடு மேய்க்கப்போனபோது நெஞ்சுவலி வந்து இறந்துபோயிருக்கிறார். அவரது வீட்டிலுள்ள மனைவி, மகன்கள் என எல்லோருக்குமே தேவையானதை செய்துவிட்டார். எனவே, அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.  25 ஆண்டுகளாக அவரது தங்கையான எனது அம்மாவிடம் ஒருவ

எழுதுவதில் வேகத்தோடு தரமும் முக்கியம்! - கடிதங்கள் 2021

படம்
  13.2.2021 அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? 14ஆம் தேதி சந்திப்பிற்காக பலகாரம் வாங்கி வைத்திருந்தேன். உங்களுக்கு முன்னமே குறுஞ்செய்தி அனுப்பியது நல்லதாகிவிட்டது. ஆபீசில் வேலைக்கு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. திரும்ப மென்பொருட்கள் பிரச்னை, பாஸ்வேர்டுகள், கட்டுரைகளை எழுதுவது, டெட்லைன் சிக்கல்கள் என வந்துகொண்டிருக்கின்றன. கோ ஆர்டினேட்டராக வேலைகளை ஒருங்கிணைத்தபோதும் எழுதவே நினைத்திருக்கிறேன். இறை அருளால் பத்து மாதத்திற்குப் பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது நிம்மதியாக இருக்கிறது. இனி எழுத்தை கவனிக்கலாம். கட்டுரை எழுதுவதை விட அதனை செம்மையாக்குவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளேன். பாலபாரதி சார், உன்னுடைய எழுத்து இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார். எனவே தற்போது எழுதிவரும் கட்டுரைகளில் பத்திகளுக்கு இடையில் தொடர்பிருக்கிறதா என்று சரிபார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் எழுதிய அரைகுறை ஐடியாக்களைக் கொண்ட கட்டுரைகளை பதிப்பித்த உங்கள் நினைவுகூர்கிறேன். நன்றி சார்.  என