இடுகைகள்

லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.  மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.  குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.  சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில் பொருந்தால் வந்து ப

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர

நம்பிக்கை தரும் மொபைல் நிறுவனத்தின் கதை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? சீன மொபைல் நிறுவனமான ஹூவெய் பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன். பீடிஎப் நூலை முழுக்க போனிலேயே படித்துவிட்டேன். நூலின் பக்கங்கள் 300. ஹூவெய் நிறுவனம் எப்படி உருவானது, அதன் நிறுவனர் என்ன நோக்கத்திற்காக நிறுவனத்தை உருவாக்கினர், அதற்கும் பிற நிறுவனங்களுக்குமான வேறுபாடு, சந்தையில் எப்படி தாக்குபிடித்தனர், அதன் கொள்கைகள் என ஏராளமான விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார்கள். நம்பிக்கை தரும் நூல் எனலாம்.  அடுத்து தொழில்நுட்பம் சார்ந்த நூலை படிக்க நினைக்கிறேன். நாகரிகங்களின் பண்பாடு ஏராளமான மேற்கொள்களுடன் எழுதப்பட்டு உள்ளது. வேகமாக படிப்பதில் சிரமம் உள்ளது. ஏராளமான சம்பவங்களை குறிப்பிட்டு நூலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.  டிஸ்கோ ராஜா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். அறிவியல் சமாச்சாரங்களைக் கொண்ட கேங்க்ஸ்டர் படமாக வந்திருக்கிறது. தமிழ் வசனங்களும் உண்டு. கதையில் வரும் பாத்திரங்களோடு கிளைமேக்ஸ் சுவாரசியமாக உள்ளது. தமனின் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம்.  எங்கள் பத்திரிகையில் வேலை பார்க்கும் பலரும் இதுவரை எழுதிய நூல்களை கிண்டிலில் பதிவு செய்யத்

எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.  அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்வி. திகைக்

இந்தியாவில் நடைபெற்ற முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள்!

படம்
  மும்பை தாக்குதல் 2008 இந்தியாவில் நடைபெற்ற முக்கியமான தீவிரவாத தாக்குதல்கள் நாடாளுமன்ற தாக்குதல் டிசம்பர் 13, 2001 இறப்பு 9 காயம் 15 லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். நுழைந்தவுடனே பார்த்த ஆட்களையெல்லாம் சுடத் தொடங்கினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் துப்பாக்கிக் காயம் படவில்லை. இந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான உறவை பாதித்தது.  டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள் அக்.29, 2005 காயம் 200க்கும் அதிகம்.  இறப்பு 67 தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்னதாக தொடர் குண்டுவெடிப்புகள் தொடங்கின. இரண்டு குண்டுகள் மார்க்கெட்டுகளிலும் ஒன்று பஸ்சிலும் வெடித்தது. இஸ்லாமிய புரட்சிகர முன்னணி இயக்கம் இதற்கான பொறுப்பை ஏற்றது. இந்திய அரசு, லஷ்கர் இ தொய்பா இயக்கம் இதன் பின்னணியில் உள்ளது என கூறியது.  மும்பை ரயில் குண்டுவெடிப்பு ஜூலை 7, 2006 இறப்பு 200 காயம் 700 மும்பை நகரத்தில் ஓடும் லோக்கல் ரயில்களில் பிரஷர் குக்கர்களில் வெடிகுண்டுகள் செட்டப் செய்து வெடிக்கவைக்கப்பட்டன. இதில் இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பும், லஷ்கர

டி20 அணியில் இடம்பெறாத சிறந்த வீரர்கள்!

படம்
  டிவென்டி 20  போட்டியில் விளையாடும் வீர ர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.  இதில் விளையாடுவார்கள் என சில வீர ர்களை எதிர்பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் விளையாடும் அணியில் இருக்கமாட்டார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.  ஷிகார் தவான் ஐபிஎல் சீசனை மிகவும் மெல்லத் தொடங்கிய வீர ர் தவான்.  இந்த சீசனில் 587 ரன்களை எடுத்திருக்கிறார். இவரளவு பிறரை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் முதல், இரண்டு, மூன்றாவது இடத்தில் களமிறங்கவிருக்கிறார்கள்.  தமிம் இக்பால் 2016ஆம் ஆண்டு நான்கு ஆட்டங்களில் 295 ரன்களை விளாசியவர் இக்பால். ஆடும் அணியில் வீர ர்கள் நிறைந்துவிட்டதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. விளையாட்டு நேரம் இவருக்கு சரிவர கிடைக்காத காரணத்தால், அணியில் வெளியே வைக்கப்பட்டு இருக்கிறார்.  ஃபேப் டு பிளெசிஸ் சென்னை நான்காவது முறையாக ஐபிஎல் பட்டம் வெல்ல பிளெசிஸ் முக்கியமான காரணம். டெஸ்ட் போட்டியில், இரண்டாவதாக அதிக ரன்களை எடுத்தவர் இவர். ஆனாலும் கூட ட்வென்டி 20 போட்டியில் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை

உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

படம்
  ஆவோகிகாகரா, ஜப்பான் வினோதமான காடுகள் விஸ்ட்மேன்ஸ் வுட் இங்கிலாந்து டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு.  தி ஸ்வார்ஸ்வால்ட் ஜெர்மனி இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள்.  தி ஹோயா பசியு காடு ரோமானியா வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிர