இடுகைகள்

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெ

கண்ணாடி மூலமே வீடியோக்களை எடுக்க வழி செய்யும் பேஸ்புக் கண்ணாடி! - ஸ்டோரிஸ் கண்ணாடி

படம்
  கடந்த செப்டம்பர் 2021 அன்று பேஸ்புக்கும், ரேபான் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த கண்ணாடியை அணிந்து படம் எடுக்க, பாடல்களை பதிவு செய்ய, வீடியோக்களை எடுக்க பாடல்களை கேட்க முடியும்.  ஸ்டோரிஸ் என்ற கண்ணாடி வெளியானபோது, அதன் தகவல் பாதுகாப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பயனர்களின் விருப்பப்படி வீடியோக்களை படங்களை எடுக்கலாமா, இதனை கட்டுப்படுத்துவது யார், இதனை பிற சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்துவார்களா என நிறைய கேள்விகள் உருவாயின.  இந்த கண்ணாடியில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஸ்பீக்கர்கள் இருக்கும். மூன்று மைக்குகளும் கூட. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹலோ பேஸ்புக் சடாரென வீடியோ எடு என்றால் கண்ணாடி இயங்கத் தொடங்கும். நன்றாக சார்ஜ் செய்த கண்ணாடி மூலம் 30 நொடி நீளமுள்ள 50 வீடியோக்களை எடுக்கலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.  இதில் எடுக்கும் படங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை விட குறைந்த தரமே கொண்டவை. வீடியோக்களை எடுத்தபிறகு அதனை எடிட் செய்து பேஸ்புக்கில் போடலாம். மெட்டாவின் பிற கம்பெனி தளங்களிலும் பதிவு செய்யலாம். கண்ணாடியை ஸ்ட

பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

படம்
  திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்.  இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

சிறந்த முறையில் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு- இந்தியா டுடே ஆய்வு!

படம்
  தொழில்துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே, அனைத்து இந்திய மாநிலங்களையும் முந்தி ஆல்ரவுண்டர் மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது.  உள்மாநில உற்பத்தி மதிப்பு 21.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை இன்னும் மேம்படுத்தி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார்.  மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பொருளாதார கௌன்சில் ஒன்றை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். அதில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். 28,508  கோடி ரூபாய்க்கான 49 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு 83 ஆயிரம் பேருக்கு கிடைக்கும்.  மாநில அரசு விவசாயத்திற்கு உதவும் வகையில், தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை மெல்ல மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலைமை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கூறப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியை குறை சொல்லி பேசினாலும் இப்போதைய

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக