இடுகைகள்

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷ

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்

2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள்!

படம்
நாம் இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சிகள் என்று பட்டியல் போட்டாலும் இவை நடக்கும் என்பது வானிலை மையம் மழை வரும் என்று சொல்வது போலத்தான். வரலாம், வராமலே போகலாம். அனைத்து சம்பவங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இது பொதுவான நிகழ்ச்சிபற்றிய தொகுப்புதான். எனவே, நிகழ்ச்சிகள் நடந்தே ஆகவேண்டும் என மனதிற்குள் ஃபிக்ஸ் ஆகாதீர்கள். ஜனவரி 1 இனிமேல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இல்லை. எனவே, இங்கிலாந்திற்குள் வரும் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனின் கண்காணிப்புக்கு உட்பட்டே வரும். இதனால் நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் உணவுத்தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். நடக்குமா இல்லையா என்று தெரியாது. இனிமேல் இங்கிலாந்து தனித்தே செயல்படவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நிறைய சோதனைகளை எதிர்கொள்ளும்படி சூழல் அமையலாம். ஜனவரி 17-30 தேதி வரையில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தியாவில் குடியரசுத்தலைவரின் மாளிகை, இந்தியாவின் கேட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் சென்ட்ரல் விஸ்டா கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை குடிய

கணிதவியலாளர்கள் 6 பேர் பற்றிய அறிமுகம்!

ஆபிரஹாம் டி மொய்வ்ரே (Abraham De Moivre) பிரெஞ்சு கணிதமேதை ஆபிரஹாம் 1667 ஆம்ஆண்டு மே 26 ஆம் தேதி பிரான்சின் சாம்பக்னே நகரில் பிறந்தார். கணிதத்தில் முறையான பட்டம் பெறாத ஆபிரஹாம், செடானில் கிரேக்க மொழி கற்க புரோடெஸ்டன்ட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார். கணிதத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்ற ஆபிரஹாம், 1684 ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்று மேல்நிலைக்கல்வியைக் கற்றார். கணிதம் மீது வேட்கை கொண்டதால், அதில் தலைசிறந்த அறிஞரானார். பின்னர் நியூட்டனின் பிரின்சிபியா (Principia) என்ற நூலைப் படித்து ஊக்கம் கொண்டார். ராயல் சொசைட்டியின் அறிமுகம் கிடைக்க, நியூட்டன், எட்மண்ட் ஹாலே ஆகியோரின் நட்பும் கிடைத்தது. மாணவர்களுக்கு கணித வகுப்பு மட்டுமே வருமான ஆதாரம். நியூட்டன் உள்ளிட்ட முன்னோடிகளின் தியரிகளை விரிவுபடுத்தியதோடு டி மொய்வ்ரே சூத்திரம் (De Moivre’s Formula’), பெரிய எண்களின் செயல்பாடுகள் பற்றிய நூல் டாக்ட்ரின் ஆஃப் சான்சஸ் (‘Doctrine of Chances) ஆகியவை கணித துறையில் இவரின் பங்களிப்பு. நன்றி:https://famous-mathematicians.com/abraham-de-moivre/ 2 அடா லவ்லேஸ் (Ada Lovelace) புகழ்பெற்ற கவிஞர் பைரனின்

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

படம்
உடனே தலைப்பை படித்தவுடனே சந்தோஷப்படவேண்டாம். இதற்கு காரணம், பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புதான். பலருக்கும் சம்பள வெட்டு, வேலையிழப்பு, தொழில் பாதிப்பு என அனைத்தும் இந்த தலைப்பின் பின்னால் உள்ளது. அதை நாம் விளக்கமாக பேசுவோம். மேற்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்ற ஆய்வை 2021ஆம் ஆண்டிற்கான ஏஎஸ்இஆர் அறிக்கைதான் கூறியது. ஆறிலிருந்து 14 வயது வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே குறைந்துள்ளது. 2018இல் 32.5 சதவீதமாக இருந்த தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 24.4 (2021) சதவீதமாக குறைந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சதவீதம் 64.3 சதவீதமாக இருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது புதிதானது அல்ல. இருந்தாலும் அதன் சதவீதம் பெருமளவு வேறுபடுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? தனியார் பள்ளிகளில் பெருந்தொற்று காலங்களில் படிப்பு ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை இப்படி சொல்பவர்களின் அளவு 40 சதவீதம். 62 சதவீதம் பேர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுப் பள்ளிக்கு மாறியிருக்கிறார

பார்வையற்றவர்களுக்கு லூயிஸ் ப்ரெய்லியின் பங்களிப்பு!

படம்
இன்றிலிருந்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வோம். அங்கு கூப்ரே என்ற சிறுநகரத்தில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தார். அவன் பெயர் லூயிஸ் ப்ரெய்லி. இவரது அப்பா தோல் பொருட்களை தயாரித்து வந்தார். லூயிஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்பாவின் ஊசியை தவறுதலாக எடுத்து கண்ணில் குத்திக்கொண்டான். கண்ணில் தொற்று வேகமாக பரவ, விரைவில் பார்வையை இழந்தான். புத்திசாலி என்பதால் கண்பார்வை குறைவை சமாளித்து பாடங்களை சிறப்பாக படித்தான். பின்னாளில் பார்வையற்றோருக்காக ராயல் சொசைட்டியில் உதவித்தொகை பெற்று படித்தான். இங்கு இருந்த நூல்களை எளிதாக லூயிஸ் படிக்க முடிந்தது. இதுபோல அனைவரும் படிக்கும்படி நூல்களை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். இதனால் அதற்கெனவேஏ ப்ரெய்லி முறையை உருவாக்கினார். நூல்களை எழுதினார். ப்ரெய்லி முறைக்காக இவர் பயன்படுத்திய கருவி, தனது கண்களை எதைக்கொண்டு தவறுதலாக குத்திக்கொண்டாரோ அதுதான் என்பதை நகைமுரணானது. ஆனால் காலம் அவரை அப்படித்தான் செய்ய வைத்தது. லூயிஸ் பாடுபட்டு இம்முறையை உருவாக்கினாலும் கூட இதனை பலரும் கண்டுகொள்ளவே இல்லை. லூயிஸ் இறந்தபிறகு அவரது மு

ஜனவரி 3 ஆம் தேதி ஏன் முக்கியமானதாகிறது?

படம்
நேரத்தைப் பொறுத்தவரை ஜனவரி 3 முக்கியமாகிறது. காரணம், இதே நாளில் 1957ஆம் ஆண்டுதான் முதன்முதலில் எலக்ட்ரானிக் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிறது. ஹாமில்டன் என்ற வாட்ச் கம்பெனிதான் இதனை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை வாட்ச் என்பது சாவி கொடுத்தால் ஓடும். இல்லையென்றால் உடலின் வெப்பம் காரணமாக ஓடும். அதுவரை வாட்ச் நின்றிருக்கும். இதனையெல்லாம் ஹாமில்டனின் எலக்ட்ரானிக் வாட்ச் மாற்றியது. நவீன குவார்ட்ஸ் புரட்சியின் தொடக்கமாக ஹாமில்டன் நிறுவனம் உருவாக்கிய கைக்கடிகாரத்தை கூறலாம். 1946ஆம் ஆண்டு ஹாமில்டன் டைம்பீஸ் ஒன்றை உருவாக்கியது. இதனை சாதாரணமாக உருவாக்கிவிடவில்லை. இதனை தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஹாமில்டன் எலக்ட்ரிக் 500 என்ற வாட்ச் அனைவரையும் ஈர்த்தது. பாடகர் எல்விஸ் ப்ரெஸ்ட்லி இதனை அணிந்து ப்ளூ ஹவாய் என்ற படத்தில் தோன்றினார். அப்போது உருவாகிய வாட்சுகளில் வென்சுரா முக்கியமானது. இதனை ரிச்சர்ட் அர்பிப் என்பவர் வடிவமைத்தார். எப்போதும் பார்க்கும் வடிவமைப்பில் இல்லாத வாட்ச் இது. டிரையாங்குலர் வடி

குடியுரிமை சட்டத்தின் அவலத்தை புகைப்படமாக்கியவருக்கு விருது!- ஜிஸான் ஏ லத்தீப்புக்கு ராம்நாத் கோயங்கா விருது

படம்
கேரவன் மாத இதழில் என்ஆர்சி பற்றிய புகைப்படத்தை வெளியிட்ட ஜிஸான் ஏ லத்தீப் என்ற புகைப்படக்காரருக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான புகைப்பட கட்டுரை அது. என்ஆர்சி பட்டியல் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருந்தபோது அசாமில் நான்கு மாவட்டங்களில் லத்தீப் புகைப்படங்களை எடுத்தார். இதில் ஏழை, வறுமை நிலையில் உள்ள முஸ்லீம்கள் இரண்டு பட்டியல்களிலும் இல்லை என்று தகவல் வர துயரமுற்றனர். என்ஆர்சி என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோனார்கள். அரசின் விடுபட்டோர் அறிக்கை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் வெளியானது. இதில் ஆதாரங்களைக் காட்டி தங்களது முன்னோர் இந்தியர் என நிரூபிக்காதபோது அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது ஏறத்தாழ நாஜி ஜெர்மனியின் கெட்டோ எனும் வதை முகாம்களை ஒத்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து லத்தீப் அசாமில் பயணித்து வருகிறார். அங்கு மண் அரிப்பு தொடர்பான பணிக்கு முதலில் சென்றார். பிறகு 2019இல் அங்கு நிறைவேற்றப்பட்ட என்ஆர்சி சட்டம் பற்றி அறிந்ததும் அதனை பதிவு செய்திருக்கிறார். நான் முஸ்லீம் என்பதால் எனக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்னை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ

சுயநினைவு எங்கே போனது - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
பொதுவாக நாம் தினசரி நிறைய நினைவுகளால் அலைகழிக்கப்பட்டு வருகிறோம். அதில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து வேலைகளை செய்யும்போது, அது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். நெடுநாள் பார்க்காத நண்பர், அவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் படித்திருப்பார். போனில் பேசிவிட்டு உடனே தன்னை அடையாளம் கண்டுபிடி என மோசமாக விளையாடுவார். இதெல்லாம் சத்திய சோதனை என்றாலும் வேறு வகை. நான் மயிலாப்பூரில் உள்ள நெருக்கடியான தெரு ஒன்றில் உள்ள மேன்ஷனில் குடியிருக்கிறேன். அங்கு புதிதாக வலம்புரி பிள்ளையார் கோவிலுக்கு பூஜை செய்யும் குழு ஒன்று வந்தது. வாடகைக்கு வந்தது ஒருவர் என்றாலும் அவருக்கு உதவி செய்ய வந்த பரிசாரகர்கள் குழு அதிகம். இவர்கள் அடிக்கடி தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருப்பார்கள். ஒருநாள் இரவு ஆபீசிலிருந்து ரூமுக்கு சென்றேன். சென்றபிறகு குளிக்கலாமே என்று தோன்றியது. நேரமே குளிக்கவில்லையென்றால் பக்கத்தில் உள்ள ஜவ்வாது மனிதர், குளியலறையை கடுப்பேற்றும் ஜவ்வாது மணம் கொண்ட பாத்டப்பாக மாற்றிவிடுவார். தலையே வலிக்கும் அளவு உடம்பில் ஜவ்வாது பூசிக்கொள்வத

பத்ம விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை விருது என்பதே அப்ளிகேஷன் போட்டு வாங்குவது என்று மாறிவிட்டது. அரசு தனக்கென தனி குழுவை வைத்து சமூகத்திற்கு உழைப்பவர்கள், அதன் பாரத்தை தனது தோளில் சும்பபவர்களை பரிசளித்து கௌரவித்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அரசுக்கு விழா கொண்டாடுவது முக்கியமே ஒழிய, அதற்கான உழைப்பை போட எப்போதும் சோம்பல் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சில மனிதர்களை அதிகாரிகள் குழு எப்படியோ தேர்ந்தெடுத்து கௌரவம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அப்படி பத்ம விருது வென்ற சில மனிதர்களைப் பற்றி பார்க்கலாம். நந்தா கிஷோர் ப்ரஸ்டி கைவிளக்கு ஏற்றிய ஆசிரியர் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பரிசு வழங்கப்பட்ட மனிதர். கடந்த ஆண்டு டிசம்பரில் காலமாகிவிட்டார். ஆனால் இவர் கற்பித்த கல்வி பலரது வாழ்க்கையில் இருளை விலக்கியிருக்கிறது. அறிவு விளக்கை மனதில் ஏற்றியிருக்கிறது. ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர், எழுபது ஆண்டுகாலம் கல்வியை குழந்தைகள் முதல் வயது வந்தோருக்கும் கற்பித்து வந்திருக்கிறார். இச்ச