இடுகைகள்

நீரெல்லாம் கங்கை - கடிதங்கள்- அன்பரசு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்த வலைத்தளத்தில் வெளியான பல்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுள்ள தொகுப்பு. இப்போது மின்னூலாக அமேசானில் வெளியாகியுள்ளது. உங்களுக்கு அமேசானில் கணக்கு இருந்தால், நூலை எளிதாக விலையின்றி வாசிக்க முடியும்.  நூலை வாசிக்க கிளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B09QZR2NRT புகைப்படம் - வினோத் பாலுச்சாமி -Yaa studio அட்டை வடிவமைப்பு -WWW.Canva.com

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

படம்
  பிப்ரவரி 3 1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன.  ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள்.  ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின.  சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த

என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! -- வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.12.2021 அன்புள்ள வினோத் அண்ணனுக்கு வணக்கம்.  இன்று வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மனமும் அப்படித்தான் இருக்கிறது. திருவண்ணாமலை வர நினைத்தேன். சூழல் இசைவாக இல்லை. சிவனின் அனுகிரகம் கிடைத்தால்தான் அங்கு வர முடியும் என நினைக்கிறேன். புஷ்பக விமானம் என்று தெலுங்குப் படம் பார்த்தேன்.  தாமோதர் என்பவர் இயக்கி ஓடிடியில் வெளியான படம். திருமணமாகி சில நாட்களில் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். மனைவி போனதை வெளியில் சொல்ல முடியாமல் அரசு பள்ளி ஆசிரியரான கணவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார் என்பதே கதை.  படத்தின் கதை, அதிலுள்ள விஷயம் என்று பார்த்தால் சீரியசான விஷயம்தான். ஆனால் இயக்குநர் நகைச்சுவையை படம் நெடுக சேர்த்திருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டா சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக குறும்பட நடிகையாக வந்து போலி மனைவியாக நடித்து கலக்கியிருக்கிறார் ஷான்வி மேகனா.  இன்று காலையில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இப்போது மழை பெய்துகொண்டு இருக்கிறது. மோகன் ராஜ் அண்ணா போன் செய்தார். மழை பெய்கிறது அடுத்தவாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.  அன்பரசு  12.12.2021

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 ------------------------------------------------------

மொழிச்சோதனைகளை தொடர்ச்சியாக செய்த நாவலாசிரியர்! - ஜேம்ஸ் ஜாய்ஸ்

படம்
  இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். 1941ஆம் ஆண்டு குடல் புண் காரணமாக மறைந்தார்.  ஐரிஷ் நாட்டு நாவல் ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ், நாவலை வழக்கமான முறையில் அல்லாமல் பல்வேறு பரிசோதனை பயன்படுத்தி எழுதுவதற்கு பிரபலமானவர்.  இவரின் மிகச்சிறந்த படைப்பு உலிசஸ். படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படியான அங்கத நடை கொண்ட படைப்பு இது. ஒருநாளில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதை. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. 1914ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் என்ற தலைப்பில்  சிறுகதைகளை எழுதினார்.  1916ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நாவல் உள்ளது. அதன் பெயர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஏஸ் எ யங் மேன். ஜாய்ஸ் எழுதிய கடைசி நாவல்,  ஃபின்னகென்ஸ் வேக். 1939ஆம் ஆண்டு வெளியான இந்த நூலும் கூட மொழிச்சோதனைகள் நிறைய கொண்டதுதான். எழுதியவருக்கு அல்லது படிப்பவருக்கா யாருக்கு அதிக சோதனைகள் இருக்கும் என்று கேட்க கூடாது.  இப்படி எழுதியவருக்கு தொடக்க கல்வி என்பது சிறப்பாக அமையவில்லை. பொருளாதார பிரச்னைகளால் பத்து வயதில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. கல்லூரிக்கு செல்வதைக் கூட ஓராண்டு ஒத்திவைத்தார்

சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!

படம்
  pixabay 1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும்.  பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.  தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.  இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.  பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.  2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தலைப்பில் நூல்கள் விற்பனையில் இருந்த

பேரிடரின்போது வெளியே வரும் நமது பொறுப்புணர்வு - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி vinodh balusamy மழை பெய்தால் வெளியே வரும் நம் பொறுப்புணர்வு!  புகைப்படம் - வினோத் பாலுச்சாமி  26.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு வணக்கம்.  நலமா?  இந்த கடிதம் எழுதும்போது மயிலாப்பூர் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் எளிதாக வடியமாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கடல் வந்துவிடும். நிலைமையைப் புரிந்துகொண்ட பணியாளர்கள் பாதாளச்சாக்கடை அடைப்புகளை குச்சி வைத்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையை முடித்தவர்கள் வேறு இடங்களுக்கு போகும்போது நீரை காலால் கையால் வீசியபடியும், செல்ஃபி எடுத்து வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தபடியும் சென்றனர்.  ராதாகிருஷ்ணன் சாலை வழியாகவே நான் ராயப்பேட்டை அஜந்தா அருகிலுள்ள நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். இதை விட தினசரி சட்டமன்றத்திற்கு விடியல் முதல்வர் செல்லும் சாலையும் இதுதான். இங்கேயே இப்படிப்பட்ட நிலைமை. நான் நடந்துசெல்லும்போது தேங்கிய நீரில் தனது வீட்டிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து எறிந்தார். துப்புறவு பணியாளர்

பலவந்தப்படுத்தினால் பாசம் வருமா? - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வினோத் பாலுச்சாமி/Vinodh Balusamy லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது!  29.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று லேப்டாப் திடீரென பிரச்னை செய்தது. இதுவரை எழுதித் தொகுத்து வைத்த நூல்கள் எதையும் திருத்த முடியவில்லை. லிப்ரே ஆபீஸ் ரைட்டர் கோப்பில், கர்சர் தானாகவே எழுதிய வரிகளை அழித்துக்கொண்டே சென்றது. இதை தடுத்து நிறுத்த அடிக்கடி எஸ்கேப் பட்டனை அழுத்திக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் முடியல சாமி என்று ஆகிவிட்டது. லினக்ஸிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்து, கணினியை அணைத்துவிட்டேன்.  ஜோம்பிலேண்ட் - டபுள்டேப் என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வணிகரீதியான படம். எப்போதும் போல ஜோம்பிகளின் மண்டையை சிதறடித்துக் கொல்லும் படம்தான். உங்களுக்கும் கோபத்தில் யாரையாவது அடித்துக் கொல்லும் உக்கிரம் இருந்தால், படத்தைப் பார்க்கலாம். தமிழ் டப்தான். உறுதியாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.  ஷோபாடே எழுதிய கட்டுரைகளில் பணம், அதன் மதிப்பு, கடன் வாங்குவது பற்றி படித்தேன். அதற்கு மேல் அதில் மனம் செல்லவில்லை. படம் பார்க்கத் தொடங்கி விட்டேன். இன்று வானில் சூரியனே வரவில்லை. இணையம் தான் எனத

புனைவு ஏற்படுத்திய வலி! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
எ மிராக்கிள் - துருக்கி தொடர் தமிழில்   புனைவு ஏற்படுத்திய வலி!  25.11.2021 அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் அறைக்கு வரும்போது மழை பிடித்துக்கொண்டது. இப்போது வரை பெய்துகொண்டே இருக்கிறது. அதன் பின்னணி இசையுடன்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இன்றுதான் எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரின் இறுதி அத்தியாயத்தைப் பார்த்தேன். இந்த தொடர், தென்கொரியாவில் வெளியான குட் டாக்டர் என்ற டிவி தொடரைத் தழுவியது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவக்கல்வி கற்ற இளைஞர், அறுவை சிகிச்சை வல்லுநராக மாற முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.  ஆட்டிசம் பாதிப்பு, இவர்களை எப்படி கையாள்வது, பெற்றோர் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், இவர்களின் அறிவுத்திறன், பிறருடன் உரையாடும்போது இவர்களை புரிந்துகொள்வது எப்படி என நிறைய விஷயங்களை காட்சிகளுக்கு இடையில் புரிந்துகொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற டிவி தொடர்களில் விருப்பமிருக்காது. முழுக்க வெளிவயமானவர். உள்வயமான எனக்கு கொரியத் தொடரை ரீமேக் செய்த துருக்கி தொடர் பிடித்திருந்தது. டாக்டர் அலி வெஃபா என்

நான்சென்ஸ் இலக்கிய எழுத்தாளர் லூயிஸ் கரோல்- 190qsa

படம்
  ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நாவல் எழுதிய எழுத்தாளர்தான் லூயிஸ் கரோல். இவர் தன்னுடைய இலக்கியப் படைப்பை நான்சென்ஸ் இலக்கியம் என்றுதான் கூறினார். 1832ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று சேஷையர் நகரில் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.  படிப்பு, வகுப்பில் முதலிடம் என்ற விஷயங்கள் எல்லாம் லூயிஸ் கரோலுக்கு இயல்பாகவே கைவந்த திறன். இவரின் இயற்பெயர், சார்லஸ் லுட்விட்ஜ் டாட்ஜ்சன். இலக்கியப் படைப்புகளை எழுத தேர்ந்தெடுத்த புனைப்பெயர்தான் லூயிஸ் கரோல்.  1852ஆம் ஆண்டு கணிதப் படிப்பில் பட்டம் பெற்றார். அதிலும் கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்காரர், கண்டுபிடிப்பாளர் என பல்வேறு விஷயங்கள் சார்லஸிடம் உண்டு.  1862ஆம் ஆண்டு ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதைகளை தனது நண்பர்களிடமும், குழந்தைகளிடமும் சொல்லி சந்தோஷப்படுத்தினார் சார்லஸ். பலருக்கும் அக்கதைகள் பிடித்திருக்க அக்கதைகளை தொகுத்து நூலாக எழுதினார். எழுதிய ஆண்டு 1865. உடனே இக்கதைகள் மக்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டன. எழுத்தாளர் லூயிசும் பிரபலமானார். இக்கதைகளை இங்கிலாந்து ராணி விக்டோரியாவும் படித்து பரவசப்பட்டார்.  வெற்றி பெற்றாலும் கூட