இடுகைகள்

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதரகள்  கலை சிமு லியூ சீன கனட நடிகர் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள்.  சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது.  வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.   சாண்ட்ரா ஓ  2 ஜோ கிராவிட்ஸ்  அமெரிக்க திரைப்பட நடிகை ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவ

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான

தொழிலை அறிய அதை தொடங்கிவிடுங்கள் - கனிகா குப்தா ஷோரி, ஸ்கொயர் யார்ட்ஸ்

படம்
  கனிகா குப்தா ஷோரி  நிறுவனர், செயல்பாட்டு இயக்குநர் ஸ்கொயர் யார்ட்ஸ்  வார்ட்டன் வணிகப்பள்ளியில் படித்தவர் கனிகா. தற்போது ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  தனது தொழில் சாதனைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கனிகா. இளம் சாதனையாளர், வுமன் ஐகான், நாற்பது வயதுக்குள் உள்ள நாற்பது தொழிலதிபர்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்று சாதித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.  வணிகத்திற்குள் எப்படி உள்ளே வந்தீர்கள். உங்களால் ரியல் எஸ்டேட் வணிகத்தில் சாதிக்கமுடியும் என்று தோன்றியதா? குழந்தை பிறப்புக்குப் பிறகு நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தோம். இத்துறையில் எந்த பாகுபாடுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் நிறுவனங்களும் ஆட்களும் குறைவு.  இதற்காகவே நாங்கள் 2014இல் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழிலை தொடங்கும் முன்னரே வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்தேன். தைரியம் வந்ததும் தொழிலைத் தொடங்கினேன். இவைதான் எனக்கு இப்போதும் தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவுகிறது.  உங்களின் ரோல்மாடல் யார்? பெப்சி குழ

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

நிழலின் சிறகு! - மொழிபெயர்ப்பு அறிவியல் நேர்காணல் - மின்னூல் வெளியீடு

படம்
  அறிவியல் நேர்காணல் நூல் என்ற வகையில் ஆராபிரஸ் - கோமாளிமேடை தனது இரண்டாவது நூலை வெளியிடுகிறது. இந்த நூலில் உள்ள மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் அனைத்துமே உலக அளவில் முக்கியமான நியூ சயின்டிஸ்ட், பிபிசி சயின்ஸ்ஃபோகஸ் ஆகிய இதழ்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இந்தியாவில் அறிவியல் பார்வை குறைந்து மூடநம்பிக்கைகள் தலைதூக்கும் நேரத்தில் ஆய்வுகள், அதுபற்றிய கருத்து பகிர்தல் நிறைய நடக்கவேண்டும். அந்த நோக்கில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள் அனைவருமே சமூகம் செல்லும் பாதையில் நடப்பவர்களல்ல.  தாங்கள் விரும்பிய பாதையில் நடந்து அதனால் புகழ்பெற்றவர்கள். வானியல், உளவியல், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, பெண்களின் நலன், காட்டுயிர் வளம், காலநிலை மாற்றம் என நிறைய விஷயங்களை மனதில் பட்டபடியே அறிவியலாளர்கள் பேசியுள்ளனர். அதனை நான் படித்து உள்வாங்கி தமிழில் எழுத முயன்றுள்ளேன். நூலை இணையத்தில் வாசிக்க... https://www.amazon.in/dp/B0B4PQJ6KQ

பால் புதுமையினர் பற்றிய பயம் திரைப்படத்துறையினருக்கு உள்ளது! - இயக்குநர் ஒனீர்

படம்
  2005ஆம் ஆண்டு ஓனீரின் மை பிரதர் நிகில் என்ற படம் வெளியானது. இது, இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளியான டொமினிக் டி சூசா என்பவரின் வாழ்க்கையை தழுவியது. பிறகு ஒனீர் எடுத்த படம், ஐ யம் -2010. இந்த படம் இந்திப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்களை ஒலிக்கும் இயக்குநர் ஓனீர் தனது சுயசரிதையை ஐ யம் ஓனீர் அண்ட் ஐ யம் கே என்ற நூலை எழுதியுள்ளார்.  திரைப்பட இயக்குநராக உங்களது பயணம், இத்துறையில் வெளியில் உள்ள நபராக அனுபவங்கள் என இரு பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம்.  திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர், எனது பாலின அடையாளம் என இரண்டுமே எனக்கு முக்கியமாக உள்ளது. நான் வாழும் காலத்தில் தன் பாலினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு பிறகு அக்குற்றம் குற்றமல்ல என மாறியது. பொது இடத்தில் நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். இளைஞர்களுக்கு அவர்களை வெளிப்படுத்த குரல் தேவைப்படுகிறது. என்னுடைய கதை அவர்களுக்கு உதவும்.  பள்ளி, கல்லூரி என பார்த்தாலும் எனக்கான முன்மாதிரிகள் வேறுபட்டவை.  நீங்கள் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மை பியூட்டிபுல் லாண்ட்ரெட

நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

படம்
  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா சபாநாயகராக உங்களது சாதனை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.  மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே? என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.  முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா? நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்திறன் தொடர்ச்சியாக

புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

படம்
  ஆஃப்டர் ஸ்டீவ் டிரிப் மிக்கில் ஹார்ப்பர் கோலின்ஸ் 599 ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார்.  புதின்  பிலிப் ஷார்ட்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல்.  தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின் ஜேமி பார்ட்லெட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை. இவர் ஹார்வர்டில் படித்தவர்.

துரத்தும் துரோக சதிவலையில் மாட்டிக்கொள்ளும் இளவரசன் பால்! - டுயூன் 2021

படம்
  டுயூன் ஆங்கிலம் ஆங்கிலத் திரைப்படம். ஹாலிவுட்டில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படம். இதனை நவீன தொழில்நுட்பத்தில் வினோதமான பல்வேறு பொருட்களை வைத்து பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.  என்ன கதை? இதுவேறுவகையான உலகம். இப்போது உலகம் என்பது விண்வெளியில் தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு உலகங்களை கட்டுப்படுத்துவது பேரரசர். அவருக்கு கீழே உள்ள கப்பம் கட்டும் சிற்றரசர்கள் பலர் உண்டு. அதில் புகழ்பெற்றது, அட்ரெய்டஸ். இதற்கு எதிரி பாரோன்.  பாரோன், பல்வேறு ஆண்டுகளாக அதாவது எண்பது ஆண்டுகளாக அராக்கிஸ் எனும் பாலைவனத்தை கைக்குள் வைத்து ஆள்கிறார்கள். அங்குள்ள ஸ்பைஸ் எனும் கனிம வளமே முக்கியமான காரணம். ஆனால் திடீரென பேரரசர், அந்த பாலைவனம் இனி அட்ரெய்டஸிற்கு சொந்தம். பாரோன் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கூறிவிடுகிறார். இதனால் அங்கு அட்ரெய்டஸ் அரச குடும்பமும், ராணுவமும் செல்கிறது. ஆனால் அது அட்ரெய்டஸ் குடும்பத்தை அழிக்க பேரரசர் விரிக்கும் வலை. சதித்திட்டம் என்பதை அட்ரெய்டஸ் அரசர் டியூக் அறிவதில்லை. அறிந்தாலும் சொல்லாமல் இருக்கிறார் என கொள்ளலாம்.  அவருக்கு ஒரே நம்பிக்கை அவரது மகன் பால் அட்ரெய்டஸ் தான். வ

புத்தகம் புதுசு - சாபம் கொண்ட வைரத்தின் கதை

படம்
  தி கிங் ஹூ டர்ன்டு இன்டு எ செர்பன்ட் அண்ட் அதர் திரில்லிங் டேல்ஸ்  ஆஃப் ராயல்டி ஃபிரம் இண்டியன் மித்தாலஜி சுதா மாதவன் ஹாசெட் 399 நூலில் மொத்தம் 15 ஆர்வமூட்டும் கதைகள் உள்ளன. நூலில் உள்ள ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரலாற்றில் உள்ள மன்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.  லேடிஸ் டெய்லர் பிரியா ஹஜேலா ஹார்ப்பர் கோலின்ஸ்  399 பெண்களுக்கான உடைகளை உருவாக்கி தைப்பவர் குருதேவ். பிரிவினைக்கு பிறகான காலத்தில் நடைபெறும் கதை. அப்போது, குருதேவ் பாகிஸ்தானின் கிழக்குப்புறம் பிழைக்க செல்கிறார். அங்கு சென்று தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதே இந்த நாவலின் கதை.  தி டெத் ஆஃப் கீர்த்தி கடக்கியா மீட்டி ஷெராப் ஷா ப்ளூம்ஸ்பரி இந்தியா 499 இது ஒரு மர்ம நாவல். ரதி ஜாவேரியின் தோழி சஞ்சனா. இவள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறாள். சஞ்சனா அப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிற நேரமும் அதுதான். சஞ்சனாவை பயமுறுத்தும் விஷயங்களை நடைபெற, அவளுக்கு உதவியாக ரதி வந்து மர்மங்களை கண்டறிகிறாள். இதுதான் கதை.  ஆஸ்மா ஐ நூர் - தி கர்ஸ்டு ஜூவல் சுதிப்தா சென் குப்தா ரூபா 395 ஆஸ்மா ஐ நூர் என்பது பிரிட்டிஷ் கால இந்தியாவி