இடுகைகள்

சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

படம்
  சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை! பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார்.  உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது? வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல்

90 நொடியில் மண்ணில் இயல்பை அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில

பழமரங்களைத் தேடி பசியில் அலைந்து தவிக்கும் யானைகள்! - ஆப்பிரிக்க சூழல் அவலக் கதை

படம்
  பசியோ பசி! - ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது, காபோன் நாடு. இங்குள்ள லோப் தேசியப்பூங்கா  4,921 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதி, 1946ஆம் ஆண்டு நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள பருவ மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் வாழ்கின்றன.  காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருவதால், யானையின் முக்கிய உணவான பழங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதனால், வேறுவழியில்லாத யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொள்கின்றன.  உலகளவில், ஆப்பிரிக்காவில், மட்டுமே 70 சதவீத யானைகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சாவன்னா யானைகளை விட, காபோன் பருவ மழைக்காடுகளில் வாழும் யானைகள் அளவில் சிறியவை. இந்த யானைகளின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் வேட்டைகளால் குறைந்து வருகிறது. இம்மழைக்காடுகளில் உள்ள பெரும்பாலான மரங்கள், யானைகளின் சாணத்தினால் முளைத்தவைதான். காடுகளிலுள்ள சிலவகை பழங்களை யானைகளை தவிர  பிற விலங்கினங்கள் உண்டு செரிமானம் செய்யமுடியாது. இயற்கையாகவே பழங்கள் அவ்வாறு அமைந்துள்ளன.

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா? உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள்.  சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்  உள்ளது.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன? பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.    https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/ https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867 https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை  அதிக பயன்

மனிதனின் நல்லியல்புகளை மறுக்கும் உலகம்! - லியோடால்ஸ்டாயின் ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு

படம்
  லியோ டால்ஸ்டாய் கதைகள் - மூன்று கேள்விகள், ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு ரேவதி கேசவமணி  இதில், மூன்று கேள்விகள் என்பது குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் போன்றது. ஆனால் எழுப்பும் கேள்வியும் அதன் தாக்கமும் அபாரமானது. ஒரு விஷயத்தை செய்வதற்கான சரியான நேரம், அதை அடையாளம் காண்பது எப்படி, சரியான மனிதனுக்கு உதவி  செய்வது எப்படி என்பதை மன்னர் அடையாளம் காண்பதுதான் கதை.  நூலின் பக்கம் மொத்தம் 25 தான். மன்னர் பலரிடமும் கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் இறுதியில் அவருக்கான விடை எங்கு யாரிடம் கேட்கிறது என்பதே முக்கியமான இறுதிப்பகுதி.  நாம் எப்போதுமே பல்வேறு விஷயங்களை யோசிக்கிறோம். ஆனால் இதனால் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். இதைப்பற்றி துறவி தனது செயல்பாட்டின் வழியாக மன்னனுக்கு சொல்லித் தருகிறார்.  ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு, ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்து வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது.  நல்ல செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவரின் வாழ்க்கையும் அவரை விட கீழான நிலையில் உள்ளவர்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து கதை நகர்கிறது.  இயற்கை