இடுகைகள்

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்ஷன் 2 - சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - விரைவில் கூகுள் பிளே புக்ஸ் தளத்தில்....

படம்
 

மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

படம்
  கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இசை ஏ ஆர் ஆர் ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை.  மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம்.  விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான்.  ஆனால் படத்தில் ஆர்வம் தரும்

திருமண உறவுகளைக் காப்பாற்ற பேச வேண்டிய காதலின் மொழிகள் !

படம்
  காதல் மொழிகள் ஐந்து  கிரேக் சேப்மன்  தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல் ஒருவர் திருமண வாழ்க்கை, நட்பு, உறவுகளைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமென கிரேக் சேப்மன் சொல்லித் தருகிறார். முக்கியமாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை. பரிசு, பாராட்டு, பிரத்யேக நேரம், ஸ்பரிசம், பணிவிடை ஆகியவற்றை முதல் அத்தியாயத்தில் எழுத்தாளர் சொல்லிவிடுகிறார்.  அடுத்து வரும் அத்தியாயங்களில் இந்த ஐந்து விஷயங்களுக்குமான எடுத்துக்காட்டுக்களை சொல்லி விளக்குகிறார். பெரும்பாலும் எழுத்தாளர் வாழ்க்கை பயிற்சிக்கான பயிலரங்கு நடத்துபவர் என்பதால் அதில் கண்ட அனுபவங்களைத்தான் பகிர்கிறார்.  இதில் சில அனுபவங்களை அவர் பார்த்து, அதன் காரணம் என்ன என்பதை அறிகிறார். குறிப்பாக, அதிசயம் என யாராவது ஒரு தம்பதியினர் சொல்லிவிட்டால், அந்த அதிசயத்தை அறியாமல் சேப்மன் விடமாட்டார். அதை வைத்து பயிலரங்கு நடத்தலாமே? பிறகு அனுபவங்களைத் திரட்டி நூலாகவும் எழுதி விற்கலாம்.  மனித உறவுகள் எளிதாக உடையும் இயல்பு கொண்டவை. அதை எப்படி காப்பாற்றுவது என்பதற்கு தனது சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் எழுத்தாளர் சொல்லுகிறார். அதுதான் நூலில் முக்கியமானது. அதை

டைம் 100 - சாதித்த மனிதர்கள் - பார்க்கர், சோனியா, கிரிகோரி, பன்செல்

படம்
  சோனியா கிரிகோரி  பார்க்கர் பன்செல் கான்டாஸ் பார்க்கர்  விழிப்புணர்வோடு இயங்கும் விளையாட்டு வீரர் கான்டாஸ் பார்க்கர் கதை அடுத்த தலைமுறை வீரர்களை பெரும் உற்சாகப்படுத்தக்கூடியது. அவர் இரண்டாவது முறையாக டபிள்யூ என்பிஏ சாம்பியன்ஷிப்பை வென்றது மறக்க முடியாத தருணம். இதனை அவர் சிகாகோ ஸ்கை என்ற அணியில் இடம்பெற்று சாதித்தார். தான் விளையாடிய விளையாட்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் எனலாம். நான் அவரது சக விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரின் ஆற்றலை உணர்ந்துள்ளேன். அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். அவர் தான் விளையாடும் இடங்களுக்கு தன் மகளைக் கூட்டிச்செல்வார்.  பாலின சமத்துவம் பற்றி வெளியாகியிருக்கும் டைட்டில் 9 என்ற ஆவணப்படத்தையும் கான்டாஸ் தயாரித்திருக்கிறார். தனது செயல்பாடுகள் மூலமாக தொடர்ந்து அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். தனது வாழ்க்கையை வெளிப்படையாக முன்வைப்பது எளிதானதல்ல.  டிவைன் வேட்  2 சோனியா குவாஜாஜாரா sonia guajajara அமேஸானின் பாதுகாவலர்  சோனியாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள். எனவே சோனியா தனது பத்தாவது வயதில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறினார். புள்ளியியலில் பட்டம் பெற்றார். 500 ஆண்டுகள்

10 ஆயிரம் கோடி ரூபாயை டிராமா ஆடி கொள்ளையடிக்கும் டுபாக்கூர் கில்லாடி - கில்லாடி - ரவிதேஜா, டிம்பிள், மீனாட்சி

படம்
  கில்லாடி  ரவி தேஜா, டிம்பிள் ஹயாதி, மீனாட்சி சௌத்ரி, முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், அனுசுயா பணம் மட்டுமே முக்கியம் என நம்பும் கில்லாடி ஒருவன், இந்தியாவில் பத்தாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் கதை.  இந்திய அரசியல்வாதி ஒருவர், எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து மாநில முதல் அமைச்சர் ஆக நினைக்கிறார். இதற்காக அவர் பத்தாயிரம் கோடியை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருகிறார். அதை கார்ப்பரேட் நிறுவனம் மூலம் அரசியல்வாதிகளுக்கு விநியோகிக்க நினைக்கிறார். இதை தடுக்கும் வரிவருவாய்துறை, பிற அரசியல்வாதிகளின் குழு, கில்லாடி திருடன் மோகன் காந்தி. இவர்களில் யார் பணத்தை கொள்ளையடித்தார்கள், வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  படத்தில் மோகன் காந்தியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் பணம் அதை எப்படியாவது திறமை காட்டி கொள்ளையடிக்கவேண்டும் என ஆர்வத்தோடு திரியும் பாத்திரத்தில் ரவி தேஜா அசத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்து உடல் வளைத்து உழைத்திருக்கிறவர் வேறு யார் டிம்பிள் ஹயாத்திதான்.  பணத்தை கொள்ளையடிப்பது பற்றி கில்லாடி பாடலில் நெடுக சொல்லிவிடுகிறார்கள். இதில் மோகன் காந்தியின் குழுவில் உள்ளவர்கள் தனியா

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து