இடுகைகள்

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

விளம்பர இடைவேளை - கூகுள் பிளே புக்ஸில் ஆராபிரஸ் நூல்கள் வெளியீடு

படம்
 

சைக்கோபாத்களிடம் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

படம்
  அசுரகுலம் 5 சைக்கோபாத்களிடம் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக இருப்பது பற்றிய வழிமுறைகளைப் பார்த்து வருகிறோம். மேலும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறதென காணலாம். ராபர்ட் ஹரே எழுதி கட்டுரைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கியபோது, அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வரத் தொடங்கின. அவையெல்லாமே எனது கணவர், காதலர் சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் இருந்தன. இதில் அவருக்கு போன் செய்த பெண்மணியின் கதை வித்தியாசமானது. அந்த பெண்மணி தன் கணவர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரை முறையாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது ஆகியவற்றை மனைவி செய்திருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கணவர், தனது வசீகரமான பேச்சால் நடத்தையால் ஆழ்மனதில் உள்ளதை மறைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் அவர் நார்மல் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இப்படி அறிக்கைகள் கிடைக்க மனைவி, தான் கணவரைப் பற்றி நினைப்பதுதான் தவறு. தனக்குத்தான் பிரச்னை என நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.   சைக்கோபதி பற்றித் தெரிந்தவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் பயன் இருக்கும். இல்லாதப

காதலியின் லட்சியக் கனவுக்காக காதலை ஒத்திவைக்கும் காதலன்! - தொலி பிரேமா - ஏ.கருணாகரன்

படம்
  தொலி பிரேமா 1998 பாலு, அனுவை முதல் முறையாக பார்க்கும் காட்சி தொலி பிரேமா 1998 - இறுதிக்காட்சி  தொலி பிரேமா பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி, அலி, வேணு, நாகேஷ் இயக்கம் ஏ.கருணாகரன் இசை தேவா பாலு என்ற படிப்பில் தேறாத இளைஞன் ஹார்வர்ட் பல்கலையில் சேரும் லட்சியத்துடன் படிக்கும் இளம்பெண்ணை காதலிக்கிறான். அவன் காதல் நிறைவேறியதா என்பதே கதை. படம், வெளிவந்த காலத்தில் அன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த கோக், பைக் என பல்வேறு விஷயங்களை அடையாளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அதனால் படம் பார்க்கும்போது நிறைய பேருக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வரலாம். காதலே லட்சியம் என நினைக்கும் இளைஞர், ஆராய்ச்சிப் படிப்பே லட்சியம் என வாழும் இளம்பெண். இதுதான் இருவருக்குமான முரண்பாடு. பாலு, படத்தில் நாயகி சொன்னது போல உருப்பட்டு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காதலை இளம்பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். அவரின் பெரியப்பாவான நாகேஷ் எப்படி நிம்மதி அடைகிறாரோ அதே திருப்தியை படத்தை பார்க்கும் பார்வையாளர்களும் அடைகிறோம்.   காதலித்தால் கூட கல்யாணம் செய்துகொள்ள விரும்பினால் கூட பெண்ணின் கனவுக்கு குறுக்கே

இரு அதிநாயகர்களை ஆட்டுவிக்கும் புத்திசாலி! - தி கிளாஸ் - மனோஜ் நைட் சியாமளன்

படம்
  தி கிளாஸ் இயக்கம் - மனோஜ் நைட் சியாமளன் நடிப்பு – சாமுவேல் ஜாக்சன், ப்ரூஸ் வில்லிஸ், ஜேம்ஸ் மெக் அவோய், அன்யா டெய்லர் ஜாய் எழுத்து, இயக்கம், தயாரிப்பு – எம்.நைட் சியாமளன்   கிளாஸ் படம் பார்க்கும் முன்னர் அன்பிரேக்கபிள், ஸ்பிளிட் ஆகிய படங்களைப் பார்ப்பது நல்லது. அப்போதுதான் படத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். தி கிளாஸ் படத்தில் மூன்று பாத்திரங்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் யார், இவர்களில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதற்கான போட்டி நடைபெறுகிறது. கெவின் என்ற நபர் நான்கு கல்லூரி மாணவிகளை கடத்தி வைத்திருக்கிறார். இதை காவல்துறை அறிந்தாலும் யார் கடத்தியது என்பதை  அறியமுடியவில்லை. இதற்கு இடையில் பாதுகாப்பு உபகரணங்களை விற்கும் கடையை நடத்தும் டுன் என்பவர், இந்த விவகாரத்தில் உள்ளே வருகிறார். இவர் தனது உள்ளுணர்வு மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை அடி வெளுக்கிறார். காவல்துறையில் பிடித்துக் கொடுக்கிறார். ஆனால் காவல்துறை டுன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் அவரை பல்வேறு பட்டப் பெயர்கள் வைத்து ஊடகங்கள் அழைக்கின்றன. காவல்துறைக்கு உள்ள நல்லப்பெயர், மரியாதை அனைத்துமே

ஊரே மிரளும் கனி, பாலுவாக மாறுவதற்கு காரணமான மருத்துவக் காதலி! - பாலு - கருணாகரன்

படம்
  பாலு இயக்கம் கருணாகரன் இசை பவன், ஷிரியா சரண், சுனில், ஜெயசுதா, பிரம்மானந்தம்   டெல்லியில் நீங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க என கேட்கும் டான் டைப் கதை. ஹைதராபாத்தில் பூக்கடை வைத்து ஹோட்டல்களுக்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பாலுவைக் கொல்ல டெல்லியில் இருந்து வரும் மாஃபியா டான் கான் பாய் முயல்கிறார். அவரும், உள்ளூர் தாதா நாயுடம்மா என்பவரும் இணைந்து பாலுவை கொல்ல நினைக்கிறார்கள். ஏன் இந்த வன்மம், பழிவாங்க நினைக்கிறார்கள் என்பதே முக்கியக் கதை. அவன் வீட்டிலுள்ளவர்கள் யார் என்பதையும் இயக்குநர் நிதானமாக கூறுகிறார். படத்தின் காட்சிகளை மணிசர்மா இசையால் தாங்கியிருக்கிறார்.  கனி, பாலு என இரண்டு பாத்திரம் இரண்டிலும் பிஎஸ்பிகே கலக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சுனிலுடன் பண்டு பாத்திரங்களுடன் வரும்போதே வசீகரிக்கிறார். பிறகுதான், அங்குள்ள தாஸ் என்பவரின் அம்மா போட்டோவை கடையில் வைத்து தண்டல் வசூலிப்பதை தடுக்கிறான். அனைத்தையும் நுட்பமாக செய்து நாயுடம்மா குழுவை ஏமாற்றுகிறான். ஏமாற்றும் பணத்தை அங்குள்ள சந்தை ஆட்களுக்கே கொடுக்கிறான். அந்த சந்தைப்பகுதி யாருடையது, ஏன் அங்கு ரவுடிக்கள் தண்டல் வசூலித

உண்மையான காதலை அறிந்துகொள்ளாத காசனோவா சமையல் கலைஞர்! - தீன்மார் - பவன் கல்யாண், திரிஷா

படம்
  தீன்மார் 2011 பவன் கல்யாண், த்ரிஷா இயக்கம் - ஜெயந்த் சி பானர்ஜி Based on love aaj kal - hindi movie - Imtias ali வெளிநாட்டில் சமையல்காரராக இருக்கும் மைக்கேல் வேலாயுதம், பெண்களுடன் ஜாலியாக பழகி வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனதில் உண்மையாக காதல் உருவாகும்போது அதை அவர் வெளிப்படுத்த முயன்றாரா, அதில் வென்றாரா என்பதுதான் கதை. படத்தில் இரண்டு பவன் கல்யாண்கள் உண்டு. ஒருவர் பீரியட் கதையில் வருகிறார். இன்னொருவர் நவீன கால காசனோவாவாக சுற்றி வருகிறார். இதில் நவீன கால நாயகனான மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திற்கு அதிக காட்சிகள் உள்ளன. பீரியட் கதையில் வரும் பவனுக்கு ஜோடியாக வசுமதி (கீர்த்தி கர்பண்டா)   வருகிறார். இந்த கதையில் ஒருவருக்கொருவர் மனதை பேசாமலேயே புரிந்துகொள்கிறார்கள். வசுமதியை பவன் கரம்பிடித்தாரா இல்லையா அதற்கு வந்த சவால்கள் என்ன என்பதை நடப்பு கதையினூடே சொல்கிறார்கள். படத்தின் காதலை சொல்வதில் இயக்குநரை விட இசையமைப்பாளர் மணி சர்மாவே முந்துகிறார். படத்தில் காமெடிக்கு வேறு நடிகர்கள் கிடையாது. அதையும் பவனே செய்கிறார். அதாவது மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திலிருந்து…