இடுகைகள்

லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

படம்
  மோட்டார் சைக்கிள் டைரிஸ் சேகுவேரா நன்றி புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,   பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,   அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள். இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூ

முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

படம்
  கட்கம் தெலுங்கு இயக்குநர் – கிருஷ்ண வம்சி இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத் ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம். படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி. கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியா

சூரமொக்கை செக்ஸ் காமெடி - வரலாறு முக்கியம் - சந்தோஷ் ராஜன்- ஜீவா, காஷ்மீரா, விடிவி கணேஷ்

படம்
  வரலாறு முக்கியம் இயக்கம், பாடல்கள்  சந்தோஷ் ராஜன்  இசை ஷான் ரஹ்மான்  மில்லினிய கால இளைஞனின் காதல் லட்சியப் பயணமும், அதற்கு ஏணியாக இருந்து உதவும் அரசியல்வாதியும்…. படத்தின் கதை என்பது இந்தளவுதான். சந்தோஷ் ராஜன் படத்தை செக்ஸ் காமெடியாக எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் படம் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் வந்திருக்கிறது. படத்தை ஒருவர் பார்க்க இரண்டு காரணங்கள இருக்கலாம். ஒன்று, ஜீவா. அடுத்து இசை அமைப்பாளர் ஷான் ரஹ்மான். பாடல்களை இயக்குநரே எழுதியிருக்கிறார். வேலை இல்லாம் சுற்றும் கார்த்திக், தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவரும் மலையாள குடும்பத்தின் இளைய பெண்ணை  - ஜமுனா (பிரக்யா நாக்ரா) காதலிக்கிறார். பிறகுதான் தெரிகிறது. எடுப்பான மார்புடன் ஒட்டி உரசி உசுப்பேற்றினாலும் கூட தங்கையை விட அக்கா அழகாக, இன்னும் அம்சமாக இருக்கிறார் என. உடனே தனது முதல் காதலை தூக்கிப்போட்டுவிட்டு, யமுனா என்ற அந்த பெண்ணைத் துரத்தி டார்ச்சர் செய்கிறார். அந்தப் பெண்ணின் உடல் அழகுதான் காதலுக்கு காரணம், அதுதான் தன்னை தாக்கி காயப்படுத்துகிறது என்கிறார். அந்த லூசுப் பெண்ணும் அதை ஏதோ மத்திய அரசு கொடுக்கும் வீரதீர  வ

குற்றம் செய்பவர்களை அடையாளமறியும் உளவியல் கோட்பாடு!- டிப்ரசன்ஷியல் அசோசியேஷன் தியரி

படம்
  டிஃப்ரன்சியல் அசோஷியேஷன் தியரி   என்ற கோட்பாட்டை சூதர்லாந்த் என்பவர் உருவாக்கினார். 1939இல் எழுதப்பட்ட இக்கோட்பாடு, பின்னாளில் சற்றே மாறியது. இதன் வழியாக குற்றம் நடைபெறுவதற்கான காரணம், எப்படி குற்றம் என்பது நடக்கிறது, அதை செய்பவர் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். குற்ற இயல்பு என்பது கற்றுக்கொள்ளக் கூடியது. குற்றச்செயல்பாடுகளை அதை செய்பவர்களிடமிருந்து எளிதாக கற்கலாம். இப்படி கற்கும் செயல்பாடு நெருங்கிய நண்பர்கள் குழுவில்தான் தொடங்குகிறது குற்றங்களை செய்வதற்கான நுட்பங்கள், பாணிகள், காரணங்கள் மாறுபடக்கூடியவை. குற்றத்தின் காரணங்களைப் பொறுத்து அதற்கான தண்டனை என்பது சட்டத்தின் கீழ் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக அமையலாம். இது, சட்டத்தின் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. ஒருவர் தரும் வாக்குமூலப்படி அவர் சட்டத்தை மீறிய குற்றவாளியாக கருதலாம் அல்லது அவர் கூறும் கூற்றுப்படி சட்டத்தை மீறவில்லை என்றும் முடிவெடுக்கலாம். ஒரு விஷயத்தைக் கற்பது என்ற அடிப்படையில் அவரின் ஆர்வம், ஆழமாக ஆய்வு செய்யும் தன்மை, ஒத்த அலைவரிசை என பல்வேறு அம்சங்கள் மாறுபடலாம். ஒருவர் செய்யும

பிற்போக்குத்தனங்களின் அவியல் - கிருஷ்ணா விரிந்தா விகாரி - அனிஷ் ஆர் கிருஷ்ணா - நாக சௌரியா, ஷிர்லி சேதியா

படம்
  கிருஷ்ண விருந்தா விகாரி இயக்கம் அனிஷ் ஆர் கிருஷ்ணா ஒளிப்பதிவு சாய் ஶ்ரீராம் இசை மகதி ஸ்வர சாகர் மரபான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன், கிருஷ்ணா. இவன் ஹைதராபாத்தில் உள்ள சொந்தக்காரரின் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு விரிந்தா இளம் பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான். அவள் வட மாநிலத்துப் பெண். அவளுக்கு உடலில் ஒரு குறைபாடு இருக்கிறது. அதைசொல்லி திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணா, அவளுக்கு சாக்கு போக்குகளை சொல்லி மணக்கிறான். திருமணத்திற்கு பிறகு இருவரின் வீட்டாருக்கும் கலாசார வேறுபாடு, பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் பிற்போக்கு தனம் காரணமாக வேறு பாடு வர தம்பதிகள் பிரிகின்றனர். இறுதியில் இவர்கள் இணைந்தார்களா என்பதே கதை. அன்டே சுந்தரானிக்கு என்ற தெலுங்குபடம் பார்த்திருப்பீர்கள். நானி நடித்து வந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருப்பார். சாதி, மதம், பெண்ணின் திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றை முற்போக்காக அணுகிய படம். அதேசமயம் அந்த சிக்கலான விஷயங்களை நகைச்சுவையாக அணுகியிருப்பார்கள். அந்த படத்தின் கதையேதான். ஆனால் அனைத்தும் இங்கே தோசையைத் திருப்பிப்போடு கணக்

பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்

படம்
காப்பா - ஷாஜி கைலாஷ்   காப்பா இயக்கம் ஷாஜி கைலாஷ் பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம். மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம். படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார். ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்கொள்

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால