இடுகைகள்

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று

ஒருவரின் முழுமையான திறனை உணரவைப்பதே கல்வி - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் ஆங்கில நூலில் இருந்து… ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழாக்க வடிவம்   வாழ்க்கை என்பது நீர்நிலை என எடுத்துக்கொண்டால், அதில் ஒருவர் நீரை வாளி மூலம் அள்ளி எடுத்தால் அந்த வாளியின் கொள்ளளவுக்கே நீர் கிடைக்கும். பெரிய பாத்திரம் வைத்து அள்ளினால், அதிக நீர் கிடைக்கும். அதன் மூலம் ஒருவர் நீர்தேவையை தீர்த்துக்கொள்ளலாம். பற்றாக்குறையை சமாளித்து வாழலாம். ஒருவர் இளமையாக இருக்கும்போது, தன்னைப் பற்றிய தேடுதலை செய்ய அதிக நேரம் கிடைக்கும். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் ஆராய்ந்து பார்க்கலாம். இந்த சமயத்தில் பள்ளி என்பது ஒருவரின் பொறுப்புகள், ஆர்வம் பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவலாம். இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் மனதில் பல்வேறு புள்ளிவிவரங்கள், தொழில்நுட்ப அறிவு என போட்டு அடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இளைஞர்களின் மனம் என்பது வளம் நிறைந்த மண் போல. அதில் பயமின்றி, மகிழ்ச்சியான வளர்ச்சிக்கு உகந்த விஷயங்கள் உருவாகி வளர வேண்டும். சுதந்திரமும் முழுமையான இயல்பையும் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம்.   எளிமையாக ஒருவர் வாழும்போதுதான் முழுமையான நிலையை கற்றுக்

தங்கத்தை கொள்ளையடித்து சென்ற நண்பனைக் கண்டுபிடித்து குடும்பத்தின் திருட்டு பழி நீக்கும் வளர்ப்புமகன் - கல்யாண

படம்
  கல்யாண சௌகாந்திகம் மலையாளம்  திலீப், திவ்யா உண்ணி, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார் முதல் காட்சியில் ஜெயதேவ் சர்மா(திலீப்), சகோதரர்கள் இருவரிடமிருந்து தப்பி ஓடுகிறார். வைத்தியர் ஒருவரிடம் வேலை செய்யும் நண்பரிடம் அடைக்கலம் தேடுகிறார். ஆனால் அவரிடம் சகோதரர்கள் வந்து ஜெயதேவைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவர் அவனைப் பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்புவதில்லை. இதனால் அவர், ஜெயதேவை தப்பிக்க வைக்க வேறு மார்க்கம் தேடுகிறார். அப்போதுதான் வைத்தியர், அடிக்கடி வணங்கும் வைத்திய குரு ஒருவரின் சீடராக நடிக்க வைக்கலாம் என முடிவெடுக்கிறார். இதன்மூலம், வைத்தியரிடம் கணக்கு வழக்கில் மோசடி செய்த பிரேமதாஸ் என்பவரும் ஜெயதேவிற்கு நட்பாகிறார். அவர், வைத்தியச் சாலையில் உள்ள வசுமதி என்ற பெண்ணை விரும்புகிறார். ஜெயதேவ், வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் பேத்தியான ஆதிரையின் பல்வேறு பிரச்னைகளை சொல்லி தன்னை நம்ப வைக்கிறார். ஆதிரைக்கும், ஜெயதேவ் தனது பிரச்னை தொடர்பாக தேடி வரும் ஆளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதுதான் மீதிக்கதை. படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்கவேண்டாம். அப்படி பார்த்தால் திலீப்பின

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்