இடுகைகள்

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

படம்
  பம்பிள் டேட்டிங் ஆப் டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி ட்ரூலிமேட்லி ஆப் காற்றில் பரவுகிறது காதல் தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.   பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான். ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகை

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது

தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

படம்
  ப்ளூ டோகாய் கஃபே சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன் ப்ளூ டோகாய் காபி சிவம் சாகி 32 துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய் இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார். டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான். இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளு

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு காவல்துற