சீதாராம் யெச்சூரி நேர்காணல்
பி.ஜே.பி, இந்து வாக்குவங்கியைக் கைப்பற்ற பிரிப்பது, உடைப்பது, உருவாக்குவது என்றே இயங்கி வருகிறது ஆங்கிலத்தில் சஞ்சய் பஸக்,நம்ரதா பிஜி அகுஜா தமிழில் ரிச்சர்ட் மஹாதேவ், வின்சென்ட் காபோ ஜவஹர்லால் நேரு பல்கலையில் தேசத்திற்கு எதிரான வாசகங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்த விவகாரம் தொடங்கிய முதல்நாளிலிருந்து அந்த கோஷங்களை எழுப்பியவர்களைக் கண்டறிந்து, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க கோரி வருகிறோம். ஆனால் எந்த கைதும் இல்லை? என்னதான் நடைபெறுகிறது? உங்களிடம் தேசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத்...