இடுகைகள்

மஹ்மூத் தார்விஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இழந்த தாய்நிலத்தை மீட்க போராடத் தூண்டும் கவிதைகள்!

படம்
    பலஸ்தீன கவிதைகள் தமிழில் நுஃமான் நூலகம் இது, சிறிய கவிதை நூல். மொத்தம் ஒன்பது பலஸ்தீன கவிஞர்கள் எழுதிய முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது. பலஸ்தீனம், இனப்படுகொலைக்கு உள்ளாகி மெல்ல அழிந்து வருகிறது. இன்று அமெரிக்கா, அழிந்த பலஸ்தீனத்தில் சொகுசு விடுதிகள், ஆடம்பர இல்லங்கள் கட்டினால் சிறப்பாக இருக்கும் என எகத்தாளமாக இனப்படுகொலையை ஆதரித்து பேசி வருகிறது. இப்படியான சூழலில் இக்கவிதைகளை நாம் வாசித்தோம் என்றால், அதன் அழுத்ததை புரிந்துகொள்ள முடியும். இனப்படுகொலை, தடுப்புக்காவல், சித்திரவதை, சிறை, பசி, பட்டினி, கல்வியின்மை, எதிர்காலம் பற்றிய இலக்கின்மை, வறுமை, போரில் மரணமடைந்த வீரர்கள், பலஸ்தீனியர்களுக்குள் உள்ள துரோகிகளால் வீழும் மக்கள் என நிறைய விஷயங்களை கவிதைகள் அழுத்தமாக பல்வேறு உருவகங்களை முன்வைத்து பேசுகிறது. பெரும்பாலும் அவற்றை ஒருமுறை வாசிக்கும்போதே முழு அரசியல், சமூக, பொருளாதார சூழலை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். பேரினவாதம் பேசுவோர், எதிரினத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என வன்ம வாதத்தை முன்வைப்பார்கள். அப்படியான கருத்தில் மஹ்மூத் தார்விஷ் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். ரொட்...

மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

படம்
            எழுத்தாளர் ஷீலா டாமி உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா? எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா? நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிக...