இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள் இன்றைய காலத்துக்கு இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசு நிறுவனங்களும் நேர்மையாக இயங்குவதில்லை. அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் நினைப்பதில்லை. அந்தளவு சட்டம், விதிமுறை, நெறிகள் என அனைத்தும் காவி நிறத்தால் மூடப்பட்டு வருகிறது. வலிமை உள்ளவர் அதாவது, அதிகாரம், பணம் கொண்டவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ஆற்றல் இல்லாத ஏழை எளியர் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே சொல்லாமல் சொல்லும் பாடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய ஒன்றிய வங்கியின் கதை அமைகிறது. இந்த வங்கி வடக்கு நாட்டிலுள்ளது. அங்கு நிறைய கிளைகளைக் கொண்டுள்ளது போல. இரண்டு காந்தங்களை எதிரெதிரே பிடித்தது போல லோகோ அமைந்திருக்கும். அதன் அர்த்தம் தொடக்கத்தில் புரியவில்லை. பின்னே அதில் கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை இழுத்து பிடித்து கவர்ந்து ஈர்க்கத்தான் என பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.  தொடக்கத்தில் எனக்கு சம்பள கணக்கை, பச்சை நிறம் கொண்ட பெருநிறுவன வங்கி என்ற வங்கியில் தொடங்கி கொடுத்தனர். அந்த வங்கிக்கு பெரியளவு ஏடிஎம் வசதிகளோ அல்லது பெரிய புகழோ, பெயரோ எதுவும...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல் பட்டியல்

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

நன்மையோ, தீமையோ தன் வாழ்க்கையை முழுமையாக வாழ முயலும் நாம்கூங் குடும்பத்தின் நோயுற்ற இரண்டாவது மகன்!

 ஹெவன்லி மார்சியல் காட் மங்கா காமிக்ஸ் பாடோ.ஐஓ நன்மை, தீமை பற்றியெல்லாம் கவலைப்படாத ஆள். தன்னை நலமாக வைத்துக்கொள்ள நிறைய அடிதடி, கொலை, சதித்திட்டங்களை செய்கிறார். இறுதியாக ஒரு கட்டத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பு ஆட்களைக் கூட கொன்றுவிட்டு தற்காப்புக்கலையில் உச்சம் அடைய முயல்கிறார். ஆனால், அவரது ரத்தக்களறியான கடந்தகாலம் தடையாகிறது. அவரை அந்நிலைக்கு அனுமதிக்க உயரிய சக்திகள் மறுக்கின்றன. இதனால் அவரின் ஆன்மா, நாம்கூங் இனக்குழுவின் நோயுற்ற பிள்ளை உடலில் புகுகிறது. அந்த பிள்ளைக்கு உடலில் 9 யின் யாங் தடை உள்ளது. இந்த நோய் அரிதானது. இப்படி உள்ளவர்கள் இருபது வயதில் இறந்துபோய்விடுவார்கள்.  உடல் பலவீனம், எலும்புகள் முறிவது, குளிரைத் தாங்க முடியாதது ஆகியவை நோயின் அறிகுறிகள்.  முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வீரனாக இருந்தவர், நிகழ்காலத்தில் பலவீனமான உடல்கொண்ட ஆண் பிள்ளையின் உடலில் இருந்துகொண்டு இயங்க முடியாமல் தவிப்பதை கதையில் சிறப்பாக காட்டியுள்ளனர். ஓவியங்கள் நன்றாக உள்ளன.  கதையில் நாயகன், முந்தைய காலத்தில் இருந்ததைப் போல கொடூரமாக தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக இருப்பதில்லை...

பத்து திசை உலகம் - ஏயு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூல் கணியம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அவரின் உரையாடல்தான் நூலை எழுதுவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. அடுத்து, டெம்பிள் மங்கீஸ் யூட்யூப் சேனலின் நிறுவனரான  திரு.விஜய் வரதராஜ் அவர்கள். அவரின் நூல் பற்றிய வாசிப்பு பகிர்தல் எப்போதும் ஊக்கப்படுத்துகிற ஒன்று. இடையறாது தான் வாசிக்கும் நூல்களைப் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார்.  நூலில், ஒருவர் வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவாலான சூழல்கள், அவரது மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, அதற்கான எதிர்வினை என பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசுகிறது. பொதுவாக நாம் நமது தினசரி செயல்பாடுகளை கவனித்தாலே அதில் எந்தளவு கொந்தளிப்பான உணர்ச்சிகளை சகித்து பொறுத்து சூழலைக் கடக்க வேண்டியிருக்கிறது என புரிந்துகொள்ள முடியும். நூலில், அப்படியான பல்வேறு சம்பவங்களை நாம் வாசித்து உணர முடியும்.  ஒருவரின் வலிகளை வாசிப்பவர் புரிந்துகொள்ள முடியலாம். ஆனால் முற்றாக அதை உணர்ந்துகொள்ள முடியாது.  நூலை வாசிக்க...   https://www.amazon.com/dp/B0FLXL14N4

பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார்.  நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.  நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!

 அன்ரிவல்டு வில்லன் மங்கா காமிக்ஸ் பேடோ.ஐஓ கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம்.  நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம்.  அந்த வகையில் நாயக...

பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?

 பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

ஆண்களின் மேலாதிக்கத்தை, சுகத்தை ஆதரித்துப் பேசும் அராபிய காமசூத்திர நூல் - நறுமணத்தோட்டம்

 நறுமணத் தோட்டம் நெஃப் சுவாஹி ஆங்கில மொழிபெயர்ப்பு - ரிச்சர்ட் பர்ட்டன் தமிழில் பெரு முருகன் இந்த நூல் அராபிய காமசூத்திரம். இதை மொழிபெயர்ப்பாளர் தமிழுக்கு மொழிபெயர்த்து முக்கிய இலக்கியப் பங்காற்றியுள்ளார். நூல் எப்படிப்பட்டது என்றாலும் அதன் வழியாக அரபு நாடுகளில் உள்ள சமூக நிலைமை, ஆண், பெண் பாகுபாடு, மேலாதிக்கம் போன்றவற்றை  அறிய முடிகிறது. அதுவே முக்கியமான விஷயம்.  நூலில் அரபு நாட்டு ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துவிடுகிறார்கள். உடல் பருமனான, இடுப்பில் மடிப்புகள் விழும் பெண்கள். இவர்கள்தான் ஆண்களுக்கு சுகத்தை தருபவர்கள். உண்மையில் பாலுறவு என்பதில் பங்குகொள்ளும் இருவருக்குமே இன்பம் பகிரப்படுகிறது.  ஆனால், இந்த நூலைப் பொறுத்தவரை முழுக்க ஆண்களுக்கான பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும், உடல் பருமனாக, யோனி அகலமாக, உடலுறவின்போது பெண் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு எழுச்சி திரும்ப திரும்ப உருவாக்கும் வகையில் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. நூல் எழுதப்பட்ட காலம் பெண்களை அடிமைகளாக வைத்து...

நாய்கள் அடிமை அல்ல சக உயிர் என உரக்கச்சொல்லும் கட்டுரைகள் - பின்தொடரும் பிரம்மம்

 பின்தொடரும் பிரம்மம் ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே நாய்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமான தொடர்பை, அன்பை பகிர்பவை. இந்த கட்டுரைகள் வழியாக அவர் வளர்த்த நாய்கள், அவற்றை அவர் பெற்றது, அதன் வழியாக கிடைத்த அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. இதில் நவீன் என்ற அவரது நண்பரது நாய் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  நாய்களை வளர்ப்பது பற்றிய அன்பையும் அக்கறையையும் நூல் வழியாக பெற முடியும். பல்வேறு கட்டுரைகளிலும் நாயை எப்படி வளர்ப்பது, பழக்க வழக்கங்களை மாற்றுவது, கனிவோடு நடத்துவது ஆகியவற்றைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நாயை துன்புறுத்துபவர்களை அக இருள் வன்முறையாளர் என கூறுகிறார். நாயின் பழக்கவழக்கங்களை அடித்து திருத்த முடியாது என சில சம்பவங்கள் வழியாக விளக்குகிறார். அவர் தனது வீட்டில் டாபர்மேன், லாப்ரடார் என இரு இன நாய்களை வளர்க்கிறார். பின்னாளில் பயணிக்கும் பிரச்னைகள் எழவே நாய் வளர்ப்பதை கைவிடுகிறார்.  நாய் வளர்ப்பது, பசுவை வளர்த்து பால் பெறுவது போன்றதல்ல. அது ஆத்மாவின் தேவைக்கானது என கூறுகிறார். கறுத்தம்மா என்ற காட்டில் வாழும் வேட்டையாடி உண்ணும...

பாயக் காத்திருக்கும் ஓநாய் - அப்பாஸ் கியாரோஸ்தமி

 பாயக் காத்திருக்கும் ஓநாய் அப்பாஸ் கியாரோஸ்தமி மொழிபெயர்ப்பு மோகனரங்கன் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்தமி எழுதியுள்ள கவிதை நூல். நூலை தமிழில் மோகனரங்கன் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பலவும் தனிமை, அடையாள சிக்கல், காலம், விரக்தி, அன்பு, பிரிவு என பல்வேறு உணர்வுகளை மிகச்சிறிய சொற்களில் கூறமுயன்றுள்ளன. வாசிக்கும்போது உங்களுக்கு அவை சிறந்த சொற்கள் என நம்பமுடியும் அளவுக்கு கவிதைகள் தாக்கம் ஏற்படுத்துகின்றன.  நூலை வெளியிட்ட பதிப்பகம் கவிதைகளை தொடர் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. நல்ல முயற்சி. சிறப்பான மொழிபெயர்ப்பு காரணமாக கவிதைகள் சிறிய சொற்களிலும் கூர்மை மழுங்காமல் உள்ளன. அவை சொல்லவரும் பொருளை உறுதியாக உரைக்கின்றன 'சொர்க்கத்தை சென்றடைய ஒருவர் நடக்கவேண்டும் நரகத்தின் பாதையில்' என்ற கவிதையை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டலாம்.  இயற்கை அழிவது பற்றிய அக்கறை குரலை எழுப்பும் கவிதைகள் உள்ளன. பிரிவை சொல்லும் கவிதைகளில் 'நின்றுபோனது கடிகாரம்' என்ற கவிதை வரிகளில் இருந்து மீளவே முடியவில்லை. இனி எப்போது சந்திப்போம் என ஆண் கேட்கிறான். அவள், இனி எப்போதுமி...

பொய் சொல்வது எதனால்?

 மூளை, ஒருவர் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்கிறதா? மூளை, ஒருவரின் ஆளுமையை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதை பாதிக்கும் விதமாக பொய்கள் கூறப்பட்டால் அதை முதலில் ஏற்காதுதான். ஆனால், தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் குற்றவுணர்ச்சி குறைந்து அதை ஏற்றுக்கொண்டுவிடும். வலதுசாரி மதவாத கட்சி உறுப்பினர்கள், இப்படி பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்தி தாங்கள் சொல்வது தங்களது நன்மைக்கு என கூறிக்கொள்கிறார்கள். இதனால்தான் விமான விபத்து நடந்தால் கூட அந்த இடத்தில் நின்று இன்ஸ்டா ரீல்ஸ் போட முடிகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. தாங்கள் செய்யும் செயல் யாரையும் காயப்படுத்தாது என அவர்களாகவே நம்பிக்கொள்கிறார்கள். வலதுசாரி மதவாதிகளின் உலகம் முழுக்க கடந்தகாலத்தில் இருப்பது. அவர்கள் வேற்றுமதம் அல்லது எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதை வைத்து பிழைப்பு செய்வார்கள்.  மூளைக்கு தொடக்கத்தில் பொய் சொல்லும்போது தடுமாற்றம் இருக்கும். பொய்யை உடல் ஏற்று ஒத்துழைக்காது. எனவே, பொய் சொல்லும்போது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரில் உள்ளவர் எளிதாக அறியலாம். உடல் அசை...

ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

படம்
  psychology  mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர்.  கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...

துரோகம் செய்த இளவரசனை பழிவாங்க மறுபிறப்பெடுத்து கடந்த காலத்தில் நுழையும் ஈட்டி மாவீரன்!

படம்
 ரிடர்ன் ஆப் தி அன்ரிவல்டு ஸ்பியர் நைட் காமிக்ஸ் மங்காஓவ்ல்.காம் ஜோஸ்வா சாண்டர்ஸ் ஆக்னஸ் என்பதுதான் நாயகன் பெயர். தொடக்க காட்சியில் அவர், முதல் இளவரச் மூலமாக சதி செய்து கொல்லப்படுகிறார். வாழ்க்கை முழுக்க அவருக்காக போராடி உழைத்து சண்டை போட்ட ஜோஸ்வா, அவருடைய ஆற்றலின் மீதான பயம் காரணமாக சுற்றியுள்ளவர்களால் துரோகம் செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறார். இறக்கும்போது அவர் யோசிப்பது. நடந்த விஷயங்களை மாற்ற முடிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான். எனவே, அவரின் ஆன்மா பின்னோக்கி செல்கிறது.  ஜோஸ்வா, ஆக்னஸ் என்ற அவலோன் நாட்டு படைத்தளபதிகளில் ஒருவரின் மகன். வைப்பாட்டி மகன். பணிப்பெண்ணை ஆக்னஸ் உறவுகொள்ள ஜோஸ்வா பிறக்கிறான். வைப்பாட்டி மகன் என்பதால், அவனை அதிகாரப்பூர்வ வீட்டில் துவேசிக்கிறார்கள். ஆக்னசுக்கு அதிகாரப்பூர்வ திருமணம் மூலம் பாபெல் என்ற மகன் உண்டு. உண்மையில் அவன் ஆக்னஸ் மகனா இல்லையா என்பது கதையில் முக்கிய ட்விஸ்ட். ஜோஸ்வா, குதிரை தொழுவத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மாவும் அங்கேதான் இருக்கிறாள். இருவரையும் ஆக்னசிடம் வேலை செய்யும் நைட் எனும் வீரர் படையில் உள்ளவர்கள் கேலி சித்திரவதை செய்கி...

ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?

படம்
  உளவியல்  கேள்வி பதில்கள் அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அ...

அதிகாரத்திற்கு பணிதல் இயல்பானதுதானா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குற்றவாளிகளை ஆவணப்படுத்துதல் என்றால் என்ன? ஒரு கொலைக்குற்றம் நடைபெறுகிறது. அதை செய்தவர் குறிப்பிட்ட பாணியைக் கையாள்கிறார். அதிலுள்ள உளவியல், நிலப்பரப்பு, குண இயல்பு ஆகியவற்றை சேகரித்து ஊகித்து எழுதி வைப்பதே ஆவணப்படுத்துதல் ஆகும். அதாவது புரோபைலர். என்பிசி என்ற தொலைக்காட்சியில் புரொபைலர் என்ற தொடர் வெளியானது. குற்றவாளிகளின் அடையாளங்களை ஆவணப்படுத்துதல் பற்றி ஏராளமான தகவல்களை செயல்பாடுகளை இத்தொடர் கொண்டிருந்தது. அதன் வழியாக புகழ்பெற்றது. இது அறிவியல் பூர்வமான முறையா என விவாதம் இன்றுமே நடைபெறுகிறதுதான். பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்க குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் முறை பெரிதும் உதவுகிறது.  குற்றவாளியின் மனம் என்பது இருக்கிறதா? குற்றங்களை ஒருவரது முன்னோர் செய்திருக்கலாம். சில தலைமுறைகள் அப்படியே செய்து வந்திருக்கலாம்.அதற்காக இப்போதுள்ள அத்தலைமுறையினரை சிறையில் அடைத்தால் எப்படி இருக்கும்? குற்றமனம் என்பதை அந்த வகையில் ஆவணப்படுத்தி கூற முடியாது. மனநிலை குறைபாடுகளை ஆவணப்படுத்தும் நூல்கள் உள்ளன. அவற்றை வாங்கிப்படித்து தெளிவு பெறலாம். எப்போதுமே சமூக ...