இடுகைகள்

இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!

 நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்! தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.  கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா...

நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்

  நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.  தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது.  நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவ...

மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?

 மார்க்சியமும் இலக்கியமும் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் கட்டுரைகள் இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார்.  மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது? மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப...

தினசரி வாழ்க்கையின் அங்கதத்தை விவரிக்கும் கட்டுரைகள்!

படம்
      நகுமோ லேய் பயலே செல்வேந்திரன் கட்டுரை நூல் எழுத்தாளர் செல்வேந்திரன், இலக்கிய வட்டாரங்களில் புகழ்பெற்றவர். வாசிப்பது பற்றிய நூலை எழுதி தொடக்கநிலை வாசகர்களிடையே கவனம் பெற்றவர். நகுமோ லேய் பயலே என்ற நூல், முழுக்க அவரது தினசரி வாழ்க்கை அனுபவத்தில் அடையாளம் கண்ட நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள் உள்ளன. அவற்றில் தீவிர இலக்கியம் சாராத கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை அனைவருக்குமானது. இலக்கிய வட்டார அங்கதம் என்பது அங்குள்ள கிசுகிசு, வயிற்றெரிச்சல், பொறாமை, இன்பம், துன்பம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அரசியல் காமெடியை, அதிலுள்ள குத்தல், பகடி புரியாமல் பார்ப்பவருக்கு அதை விளக்கி சொன்னால் நன்றாக இருக்காது அல்லவா? எனவே, மேற்படி இலக்கிய அங்கதத்தை இலக்கியம் படைப்போருக்கு விட்டுவிடலாம். சாதாரணமாக படித்தாலே உங்களுக்கு அதிலுள்ள நகைச்சுவை புரிபட்டுவிடும். தனிப்பட்ட இலக்கியவாதிகளின் உடல், மனம், குணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு சிரிப்பவர்கள் சிரிக்கலாம். அல்லாவிட்டாலும் புன்னகைக்க ரசித்துப் படிக்க நிறைய இடங்கள் உண்டு. முதல் கட்டுரையிலிருந்...

அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

படம்
  அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர். வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் ...

பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

படம்
                நேர்காணல் எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்? இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது. இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் ...

அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!

படம்
              சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள். சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். 1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அட...

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறர...

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்க...

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார...

திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்

படம்
  எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் சு வேணுகோபால் எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆங்கில திரைப்பட உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும், அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை   எழுதி எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.   தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம் அணைக்க தயாராக இருக்கிறார்கள்.  இயக்குநர்கள் ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம். எழுத்தாளர் இமையம் ‘’ஒரு நாவலின் எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின்...

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மகத்தான இலக்கிய எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்!

படம்
  ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அவரின் பல்வேறு நாடகங்கள்,கதைகளை வைத்து ஆங்கிலப் படங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது பார்க்கப்போவது அவரைப்பற்றித்தான்.  1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஷேக்ஸ்பியர் பிறந்தார். ஜான் மற்றும் மேரி ஷேக்ஸ்பியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ட்ராபோர்ட் கிராமர் பள்ளியில் படித்தார். தனது பதினெட்டு வயதில் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சூசன்னா, ஜூடித் , ஹாம்னட் என்பதுதான் பிள்ளைகளின் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதற்குள்ளாகவே அவருக்கு கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருந்தது.  இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் ஜூலியஸ் சீசர், ஐந்தாம் ஹென்றி, ஓத்தெல்லோ, மெக்பத், ஆகியவை முக்கியமானவை. நகைச்சுவை நாடகங்களான ஏஸ் யு லைக் இட், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், காதல் நாடகங்களான ரோமியோ ஜூலியட், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகியவையும் முக்கியமானவை.  ஷேக்ஸ்பியர் கிளாசிக்கான எழுத்தாளர். இன்றும் கூட அவர் தே...

சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

படம்
  விக்டர் ஹியூகோ விக்டர் ஹியூகோ இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான்.  இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார்.  ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார்.  பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் ட...

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவ...

வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி மனோரஞ்சன் பியாபாரி மேற்கு வங்க எழுத்தாளர் உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே? இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.  ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா? நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்ப...