சீனாவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள்!
சிறந்த சுற்றுலா கிராமங்கள் - சீனா ஷிதி அன்ஹூய் என்ற பகுதியில் ஹூவாங்சன் என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 970 ஆண்டுகள் பழமையானது. 2000ஆவது ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய இடம் என்ற பட்டியலில் இடம்பிடித்தது. ஹூய்சு கலாசார அடையாளம் கொண்ட கோவில்கள், கட்டுமானங்கள் கிராமத்தில் காணப்படுகின்றன. இவை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்டவை. யுகுன் கிராமம் ஸெஜாங் என்ற மாகாணத்தில் அன்ஜி என்ற இடத்தில் கிராமம் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் மாசுபாடு அடைந்து உள்ளூர் நிர்வாகத்தால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அழகிய நீர்நிலைகள், மலைத்தொடர்களைக் கொண்ட இடம். ஹூவாங்லிங் கிராமம் வூயுவான் என்ற இடத்தில், ஜியாங்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. சமவெளியில் இருந்து 1,260 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிராமம். இங்குள்ள மக்கள் மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தினசரி பயன்பாட்டுப் பொருட்களை மூங்கிலில் உருவாக்கி வருகிறார்கள். வரலாற்று ரீதியாக அறுநூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு செய்யப்படும் வேளாண்மை முறையும் தனித்துவமானது. ஸக்கானா கிராமம் கல் பெட்டி என தி...