இடுகைகள்

கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...

கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!

படம்
  பாதுகாப்பு மனநிலை தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும். பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார். வயிறு சொல்லும் அறிவுரை சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரிய...

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

காதலை, அன்பை சுரண்டலுக்கு பயன்படுத்தும் பெண்களை கொள்ளையடிக்கும் புத்திசாலி!

படம்
  புத்திவந்தா கன்னடப்படம் உபேந்திரா, சலோனி, பூஜாகாந்தி, லஷ்மி இயக்குநர் ராம்நாத் இசை விஜய் ஆன்டணி தமிழில் வந்த நான் அவன் இல்லை என்ற ஜீவன் நடித்த படத்தை கன்னடத்தில் உப்பி நடித்திருக்கிறார். ஐந்து பெண்களை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதோடு, கல்யாணம் செய்து வைத்தால் காமத்தையும் அனுபவித்து எஸ்கேப் ஆகி, பிடிபட்டபிறகு நீதிமன்ற கூண்டில் கூட நான் அவன் அல்லா என்று சொல்லி வாதிடுவதே கதை. படத்தின் கிளைமேக்சை மாற்றியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது. இறுதியாக நீதிபதியின் மகளான பூஜாகாந்தி, நாயகனை துணை சேர்கிறார். அது கொஞ்சம் காமிக்கலாக இருக்கிறது. கல்யாண மன்னன், கல்யாண ராணி என பூந்தி பத்திரிகையில் விளக்கமாக எழுதுவார்களே அதுவே. பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். கல்யாண மன்னன் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை விரிவாக காட்டுகிறார்கள். விஜய் ஆன்டணி பின்னணி இசையில் சோபிக்கவில்லை. ஆனால், தமிழ் பாடல்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். பாடல்களை கன்னடத்தில் எழுதிவிட்டார்கள் என்பதால் ரசிப்பதில் பிரச்னை இல்லை. வெளிப்பகட்டுக்கு மயங்கி பேராசைப்படும் பெண்கள். அவர்களை பஞ்சாமிர்தம் என்ற உபேந்திர...

வட இந்திய வணிகரிடமிருந்து நூறு கோடு கள்ளப்பணத்தை கொள்ளையடிக்க துடிக்கும் நால்வர்!

படம்
      நூறு கோடி தெலுங்கு சேட்டன் குமார், ராகுல், ஏமிஎலா இயக்கம் விராட் சக்ரவர்த்தி இசை சாய் கார்த்திக் பணமதிப்புநீக்கத்தை அடிப்படையாக வைத்து நிறைய கிரைம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் நூறு கோடி. மற்றபடி படத்தில் சொல்வதற்கு வேறு எந்த சிறப்பான விஷயங்களுமில்லை. வட இந்திய வணிகர் பெரும் சொத்துக்காரர். ஆள் கருப்பாக இருக்கிறார். அவரை சேட்டு என்கிறார்கள். பட்ஜெட் காரணமாக சேட்டை தென்னிந்தியாவிலேயே பிடித்துவிட்டார்கள் போல. அவருக்கு ஓரிரவில் திடீரென பினாமியிடமிருந்து போன். வருமான வரித்துறை ரெய்டுக்கு வருகிறார்கள் என. இதனால், அவர் ரகசியமாக சுவற்றில் ஒளித்து வைத்திருந்த பணத்தை சுத்தி வைத்து உடைத்து திறந்து நூறுகோடி பணத்தை எடுத்து அதை கோணிப்பையில் கட்டி வேறு இடத்திற்கு மாற்ற முனைகிறார். அப்படி மாற்ற முயலும்போது, அவரது பணம் திடீரென வைத்த இடத்தில் இருந்து காணாமல் போகிறது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோகிறார். கொலைப்பழி அவரது இளம்காதலி மீது விழுகிறது. காதலி அங்கிருந்து தனது தோழி வீட்டுக்கு தப்பியோடுகிறார். இளம் காதலி, சேட்டின் பினாமி, போலீஸ் இ...

வணிகத்திற்காக நடந்த போர்!

படம்
    பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...

காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!

படம்
              காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை! சத்தீஸ் மாநிலத்திலுள்ள ராய்பூர் விமானநிலையம். இங்கு ஆதிவாசிகளின் கலையை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் சிலைகள், ஓவியங்கள் உள்ளன. ஆனால், நிஜத்தில் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மீது மாநில, ஒன்றிய அரசுக்கு அக்கறை உள்ளதா என்றால் கிஞ்சித்தும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆதிவாசி மக்கள் காவல்துறை, மத்திய ரிசர்வ் படையினரால் தாக்கப்பட்டு, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கும், அரசுக்குமான போர் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல, பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள்தான். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் பழங்குடி முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் பதவி ஏற்றார். அந்த நொடி முதலே நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல், ஆதிவாசி மக்களை கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் அமைதி பேச்சுவார்த்தை என்று வினோதமான சொல்லாடலை ஊடகங்கள...

கொள்ளையர்களின் நகையை திருடி ஊரிலுள்ள கடனை அடைக்க முயலும் YSR தொண்டன்!

படம்
  குபேர்லு சிவாஜி, அலி, கிருஷ்ண பகவான் அருங்காட்சியம் ஒன்றை மும்பை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த நகையை விவேகானந்தா காலனி என்ற இடத்தில் பதுக்கிவைத்துவிட்டு, கொள்ளைக்கூட்ட தலைவனது தம்பி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோகிறார். அந்த நகைகள் யாருக்கு கிடைத்தது கொள்ளைக்கூட்டத்திற்கா, காவல்துறைக்கா என்பதே கதை.  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி என்ற அரசியல் தலைவருக்கான முகஸ்துதியாக எடுக்கப்பட்ட படம். படத்தில். தன் குடும்பத்தை கவனிக்காமல் ஊருக்காக உழைப்பவராக சொத்துக்களை மக்களுக்காக இழப்பவராக நாயகன் வருகிறார். அவருடைய மாமா அலி. இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போகிறார்கள். வீடுகட்டித்தரும் மோசடி திட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்காக ஏற்கெனவே நிறைய சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள். மீதியிருப்பது வீடு மட்டுமே. மோசடி செய்ததால் குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்டாவிட்டால் அவர்களது ஒரே சொத்தாக உள்ள வீடும் பறிபோகும் நிலையில் நகரத்திற்கு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். நாயகனும் அலியும் பணம் சேர்த்தார்களா இல்லையா என்பது இன்னொ...

பெற்றோரால் அடித்து துன்புறுத்தப்படும் சிறுவன், தற்காப்புக்கலை கற்று கொள்ளைக்காரனாக மாறும் கதை!

படம்
  நைன் ஹெவன்ஸ் ஸ்வார்ட் மாஸ்டர்  மாங்கா காமிக்ஸ் 70-- ரீட்மாங்காபேட்.காம் சிறந்த வாள் வீரனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இயோன் ஜூக்கா. அம்மா பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். முதல்மனைவியை விட இரண்டாவது மனைவி மீது காதல் கொண்ட அப்பா, மனைவி இறப்புக்கு காரணம் மகன்தான் என அவனை வெறுத்து ஒதுக்குகிறார். வெறுப்பும் விரக்தியும் அவரை நோயுறச்செய்கிறது. இதனால் இயோன், அவரது முதல் மனைவியான சித்தியிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிக்கிறார். அடித்து உதைக்கப்படுகிறார். கழித்து கட்டப்பட்ட உணவை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய கலைகளை அவர் அடைத்து வைக்கப்பட்ட அழுக்கு அறையில் கற்கிறார். மொத்தம் பத்து ஆண்டுகள் இப்படி பயிற்சியில் போகிறது. இறுதியாக கலைகளைக் கற்றுக்கொடுத்த கண்ணாடி, தேர்ச்சி பெற்றவுடன் அவனை வெளியே வழியனுப்பி வைக்கிறது. இதுபற்றி அவனது சித்தி அறிவதில்லை. குடும்ப கலையைக் கற்க தனது மூத்த மகனை, கணவரின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.  இயோன் உயிர்தப்பி ஓடி காட்டுக்குள் மயங்கி விழுகிறான். அங்கு அவனை கொள்ளையர்கள் குழு கண்டெடுத்து தங்களோடு வேலை செய...

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு...

பணத்திற்காக வயதானவர்களை அடித்துக் கொல்லவும் தயங்காத கொடூரன் - ஆலன்

படம்
  ஆலன், ஆப்பிரிக்க அமெரிக்க தொடர் கொலைகாரர்களில் ஒருவர். இந்தியன் போலிஸ் பகுதியில் கொலைகளை செய்து பழகியவர் சும்மா இருப்பாரா? தனக்கான பலவீனமான இரையைத் தேடிக்கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு, ஓபல் கூப்பர் என்ற 85 வயது பெண்மணியின் வீட்டில் கொள்ளையடிக்கப் புகுந்தார். ஓபல் என்ற அந்தப் பெண்மணியை அடித்துக் கொன்றார். இதற்காக   குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்திற்கு தண்டனை 21 ஆண்டுகள். இந்த குற்றத்தை ஆலன் செய்தபோது அவரின் வயது 24. பிறகு பிணை கிடைக்க 1985ஆம் ஆண்டு வெளியே வந்தார். வந்தவர் இந்தியன் பொலிஸ் பகுதியில் இருந்த கார்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அமைதியாக இருந்தார் என்றால் வருந்தி திருந்தியதாக அர்த்தமில்லை. 1987ஆம் ஆண்டு, மேமாதம் 18 அன்று, 73 வயது பெண்மணி வீடு புகுந்து தாக்கப்பட்டார். இறப்பில் இருந்து சற்றே அதிர்ஷ்டம் இருந்து பிழைத்தார் என்றுதான் கூறவேண்டும். இரண்டு நாட்கள்தான். அடுத்த குற்றம் நடைபெற்றது. அதில் லாவர்னே ஹாலே என்ற பெண்மணி மாட்டினார். ஆனால் குற்றச்சம்பவத்தில் இவருக்கு கிடைத்த அடிகளும் குத்துக்களும் அவரை உயிரோடு வாழ விடவில்லை. 87 வயதான பெண்...

12.மோசடி நிரந்தரம், முறைகேடு ஒரு சந்தர்ப்பம் - மோசடி மன்னன் அதானி

படம்
  ஆதி குழுமம், அதானி குழுமத்திற்கு நிலக்கரியை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். நீண்டகாலமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளராக உள்ளது. ஆதி குழுமத்தின் முதலீட்டாளர் பெயர், உட்கர்ஷ் ஷா. இவர், கௌதம் அதானியின் முப்பதாண்டு கால நண்பர் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை தகவல் கூறுகிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி, ஆதி குழுமத்தின் வருவாய், 9 மில்லியன் டாலர்களாகும். மொத்த லாபம் 97 ஆயிரம் டாலர்கள் என்ற தகவல், நிதி தொடர்பான ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்கள், ஆதி குழுமத்திற்கு 87.4 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி விசாரித்ததில் பணம் கடன் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இத்தனைக்கும் கடன் கொடுத்த பல நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. ஆதி குழுமத்தின் வருமானம், லாபம் அடிப்படையில் அந்த நிறுவனம், பிற நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றதே தவறான நடவடிக்கை. பொருளாதார ஆலோசகர் எவரும் கடன் வாங்கும் யோசனையை ஏற்கவே மாட்டார்கள்.   ஆதி குழுமம், வாங்கிய கடனைக் கட்ட900 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அப்படி கடினமாக உழைத்தாலு...