இடுகைகள்
டெஸ்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள் பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான். டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்...
விரில் என்ற அற்புத சக்தியூட்டும் ஆதாரம்- மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி விரில் என்றால் என்ன? எழுத்தாளர் எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் எழுதிய நாவலில் இடம்பெற்ற மர்ம ஆற்றல் ஆதாரத்தின் பெயர்தான் விரில். தி கமிங் ரேஸ் என்ற நாவலில் சூழலில் உள்ள மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி வலிமையான ஆயுதம் ஒன்றை தயாரிக்க நினைப்பார்கள். அப்படியான மர்ம ஆற்றல் ஆதாரமே விரில். இப்படி எழுதிய எழுத்தின் பின்னால் எந்த அறிவியலும் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் கற்பனையை வைத்து நிறைய வேதிப்பொருட்களை இஷ்டப்படி கலந்து தயாரித்து சந்தையில் விற்றார்கள். அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. இப்போதைக்கு சந்தையில் போவ்ரில் என்ற பொருள் சந்தையில் கிடைக்கிறது. இறைச்சியிலிருந்து பெறப்படும் பொருள் இது. 1870ஆம் ஆண்டு தொடங்கி போவ்ரில் விற்பனையாகி வருகிறது. தொடக்க காலத்தில் இதன் பெயர் ஜான்ஸ்டன் ஃப்ளூய்ட் பீஃப். குழம்பில் வாசனைக்காக சேர்த்தனர். வெந்நீரைக் கலந்து சூடான பானமாக குடித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பயன்பாடு கொண்ட இறைச்சி உணவு போவ்ரில். வார்டென் கிளிப் என்றால் என்ன? நிக்கோலா டெஸ்லா, வார்டென் கிளிப் என்ற இ...
தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன. லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான். பெரும்பாலான இ...
எலன் மஸ்க் எப்படி சிந்திக்கிறார் என்பதை கண்டுபிடிப்போம் வாங்க!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எலன் மஸ்க் எந்தெந்த சமூக வலைத்தள கணக்குகளை தொடர்கிறார்? சுனக், மேக்ரான், மோடி, வான் டெர் லியான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரச குடும்பம் ஆகிய கணக்குகளை பின்தொடர்கிறார். இதன் அர்த்தம், அவர் அவற்றை பின்தொடர்கிறார் அவ்வளவுதான். இங்கு வெளியிடப்படும் அனைத்து கருத்துகளை ரீட்விட் செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நானும் இருக்கிறேன் என்று கூறுகிறார். மற்றபடி இந்த கணக்குகளை அவர் எப்போதாவது எட்டிப்பார்க்கிறாரா என்று கூட தெரியாது. பிபிசி செய்திகளை பின்தொடர்கிறார். அதேசமயம் இதுவரை தனது ட்விட்களில் அதை எந்த கண்டனமும் செய்ததில்லை என்பதையும் நினைவுகூர்கிறேன். டெஸ்லா கார்கள் விற்பனை, பங்கு விலை உயர்வு பற்றிய சந்தோஷமான கருத்துகளை எலன் கவனிக்கிறார். அவற்றை பகிர்கிறார். அவரைப் பொறுத்தவரை நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதை அதன் உரிமையாளர் எப்படியான மனநிலையில் செய்வாரோ அதேபோன்றதுதான் இதுவும் என கூறலாம். பாலியல் கல்வியை அரசியல்மயப்படுத்துவது, ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய கருத்துகள், கோவிட் தடுப்பூசி பற்றிய கருத்துகள் ஆகியவற்றை பற்றிய விஷயங்களை எலன் மஸ்க் தனது ட்விட்டர் க...
அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது. மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது. பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம். ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட...
வாகனத்துறையை மாற்றியமைத்த செயற்கை நுண்ணறிவு!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் – வேலையை பாதிக்குமா? 2005ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் பிகின்ஸ் ஆங்கிலத் திரைப்படத்தில், நாயகன் அதிநவீன கணினியைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் பேட்மொபைலை கட்டுப்படுத்துவார். தனது குரல் மூலம் அதனை இயக்கி செயல்படுத்துவார். அறிவியல் புனைகதை படங்களில் இந்த படம் முக்கியமானது. நடைமுறையில், 2023ஆம் ஆண்டில் கூட மெஷின் கன்களை, புவிஈர்ப்புவிசைக்கு எதிராக பயன்படுத்துவது கடினமானது. இன்றுவரையில் கூட இந்த தொழில்நுட்பம் உருவாகி வளரவில்லை. செயற்கை நுண்ணறிவு பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களிலும் ஓட்டும் வாகனங்களிலும் கூட செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்த வகையில் எதிர்காலத்தில் நீங்களும் டிஜிட்டல் பொருட்களை பேட்மேன் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கி முறையில் கார்களை குரலைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அப்படித்தான் இன்று கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களின் தலையீடு இன்றி, ஸ்டீயரிங், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை டெஸ்லா, கடிலாக் ஆகிய கார்கள் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. இதற்கு இந்த நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை தங்களது கா...
எல்இடி விளக்கின் வரலாறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்இடி விளக்கு ஆற்றலை சேமிக்கும் விளக்கு -LED விளக்கை யார் கண்டுபிடித்தது என ரூபி வாய்ப்பாட்டில் பார்த்தால் அன்றைக்கு அனைவரும் நம்பிய அறிவியலாளரான எடிசனைக் கூறுவார்கள். ஆனால் அவரே அவரது உதவியாளராக இருந்த நிகோலா டெஸ்லாவின் அறிவை பயன்படுத்தி துரோகம் செய்துதான் தன்னை நிலைநிறுத்தினார். இதற்கு எடிசன் கடைசிவரை பல்வேறு அரசியல் சதிகள் செய்துகொண்டே இருந்தார். எனவே இதுபற்றி முழுமையாக அறிய கிழக்கு டுடேவில் ராம் எழுதும் நிகோலா டெஸ்லா தொடரை வாசித்துக்கொள்ளுங்கள். சாதாரணமாக பல்பு என்றால் பிலிப்ஸ் குண்டு பல்பு அனைவருக்கும் நினைவு வரும். உருண்டையான பல்பில் நடுவில் டங்க்ஸ்டன் இழை இருக்கும், மின்சாரம் அதில் பாயும்போது ஒளிரும். இரண்டே நிமிடங்களில் பல்பின் கண்ணாடி கை பொறுக்க முடியாத வெப்பத்தை அடைந்துவிடும். இன்று அந்த பல்பு விடைபெற்றுவிட்டது. அதே சைசில் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்ள எல்இடி வந்துவிட்டது. குண்டு பல்புகளை பயன்படுத்தும்போது அதிக மின்னாற்றல் செலவாகும். கிடைக்கும் வெளிச்சம் குறைவு. மேலும் அதன் அருகில் நாம் உட்கார்ந்து வேலை செய்வது கடினம். இரவில் சூரியன் வந்துவிட்...
2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நாம் இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சிகள் என்று பட்டியல் போட்டாலும் இவை நடக்கும் என்பது வானிலை மையம் மழை வரும் என்று சொல்வது போலத்தான். வரலாம், வராமலே போகலாம். அனைத்து சம்பவங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இது பொதுவான நிகழ்ச்சிபற்றிய தொகுப்புதான். எனவே, நிகழ்ச்சிகள் நடந்தே ஆகவேண்டும் என மனதிற்குள் ஃபிக்ஸ் ஆகாதீர்கள். ஜனவரி 1 இனிமேல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இல்லை. எனவே, இங்கிலாந்திற்குள் வரும் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனின் கண்காணிப்புக்கு உட்பட்டே வரும். இதனால் நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் உணவுத்தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். நடக்குமா இல்லையா என்று தெரியாது. இனிமேல் இங்கிலாந்து தனித்தே செயல்படவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நிறைய சோதனைகளை எதிர்கொள்ளும்படி சூழல் அமையலாம். ஜனவரி 17-30 தேதி வரையில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தியாவில் குடியரசுத்தலைவரின் மாளிகை, இந்தியாவின் கேட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் சென்ட்ரல் விஸ்டா கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை குடிய...
சிறந்த தொழிலதிபர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிறந்த தொழிலதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டகால திட்டம் . இவரின் டெஸ...
எலன் மஸ்க் - இந்த ஆண்டின் சிறந்த மனிதர் (2021)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எலன் மஸ்க் எலன் மஸ்க், எல்லோருக்கும் பிடிக்கிற தொழிலதிபர் கிடையாது. சிலர் கோமாளி என்பார்கள், சிலர் ஜீனியஸ் என்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உயரத்துக்கு கொண்டு செல்பவர்களில் எலன் மஸ்கை தவிர்க்கவே முடியாது. எலன் மஸ்க், ட்விட்டரில் போடும் பல்வேறு பதிவுகளை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவார்கள். கேலியாக, கிண்டலாக, மூர்க்கமாக என பலவிதங்களில் எழுதுவது உண்டு. கிரிப்டோகரன்சியை டெஸ்லா ஏற்கும் என்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் சும்மா என்று சொல்லி தனது தொழிற்சாலைகளை இயக்கப்போகிறோம் என்று அறிவித்தது, என பல்வேறு விஷயங்களில் எலன் வேற லெவல்தான். இந்தளவு நம்மூரில் யார் இருக்கிறார் என்று யோசித்தால் கொஞ்சம் அருகில் வருபவர் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மட்டுமே. இந்த கட்டுரை எலனின் நிறுவனங்களைப் பற்றி பேசும் பொறுப்பைக் கொண்டது. தொடங்கலாமா? பேபால் ஆன்லைனில் பணம் கட்டும் சேவை 1.5 பில்லியன் டாலர்களுக்கு நிறுவனத்தை விற்றார் எலன். எலன் தொடங்கிய இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனம் எக்ஸ்.காம். இது ஒரு ஆன்லைன் வங்கி. 1999ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தொடங்...
டைம் இதழின் உலகின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021! - கண்டுபிடிப்பாளர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021 ஜென்சென் ஹூவாங் என்விடியா நிறுவன இயக்குநர் 2003ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் கணினி விளையாட்டுகளை விளையாடுவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறது. இவர் சிப் தயாரிப்புகளை நுட்பமாக்கி, அதில் செயற்கை நுண்ணறிவு சமச்சாரங்களை கூர்மைப்படுத்தினார். இதன் விளைவாக இன்று கணினியின் தொழில்நுட்பமும் நவீனமாகியுள்ளது. கூடுதலாக போன் தானாகவே செயல்பட்டு பதில் கூறுவது, களைகளுக்கு மட்டும் பூச்சிமருந்து தெளிப்பது, இந்த நோய்க்கு இந்த மருந்து என மருத்துவர்கள் பரிந்துரை செய்வது என பல்வேறு விஷயங்களுக்கும் சிப்களின் தொழில்நுட்பம் உதவுகிறது. இன்று உலகின் முக்கியமான தொழில்நுட்ப இயக்குநராக ஹூவாங் மாறியுள்ளார். டைம் ஆண்ட்ரூ என்ஜி எலன் மஸ்க் அமெரிக்க தொழிலதிபர் எலனை சுருக்கமாக தொழிலதிபர் என்று கூறிவிட முடியாது. இப்போதுதான் 2.9 பில்லியன் மதிப்பிலான நாசாவின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். இவரை அமேசானின் ஜெப் பெசோஸ் விமர்சனத்தில் வறுத்தெடுத்தாலும் எலனைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நான் தப்பு பண...
டீசல்கார்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு குறைவு! - ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவு பெருகலாம்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
cc எதிர்கால கார்கள் டீசல்கார்களை நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்படலாம். டீசலுக்கான வரிகள் உயர்த்தப்படலாம் இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் டீசல் கார்களின் தயாரிப்பை கைவிடுவது உறுதி. மெர்சிடிஸ் நிறுவனம், டீசல் கார்கள் முழுக்க அழிந்துவிடாது என்று கூறியிருக்கிறது. மெர்சிடிஸ் சி300 போன்ற ஹைபிரிட் கார்கள் சந்தையில் வலம் வரலாம். இதற்கு நிறைய மவுசு பெறலாம். எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா இந்த பிரிவில் சிறப்பான தலைவராக எலன் மஸ்கை கொண்டிருப்பதால் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்காக மற்றவர்கள் பின்தங்குகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்குவாரின் ஐ பேஸ் என்ற கார் இதற்கு போட்டி தரக்கூடியது. போர்ச், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறார்கள். இதில் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது. வேகம் வேகம் மணிக்கு 482 கி.மீ வேகத்தில் செல்லும் காரை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஹென்னஸி என்ற கார் நிறுவனம் இந்த வகையில் கார்களை தயாரித்து வருகிறது. ஜான் ஹென்னசி என்பவர்தான் இந்நிறுவனத்திற்...
மின்வாகனங்களை ஆளும் ராஜராஜன் - சீனா!- எப்படி ஜெயித்தனர்?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எதிர்கால த்தை நோக்கி பயணிக்கும் சீனா! சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துரித வேகத்தில் பெருமளவு எண்ணிக்கையில் மின்வாகனங்களைத் தயாரித்து வருகின்றன. வெப்பமயமாதல் பிரச்னையோடு உலக அளவில் மாறும் டிரெண்டுகளுக்கு ஏற்ப சீனா தன்னை வேகமாக தகவமைத்து வருகிறது. கடந்த ஆண்டில் 9,84,000 கார்களை சீனா விற்றுள்ளது. இது உலகளவில் விற்ற மின்வாகனங்களில் விற்பனையில் பாதிக்கும் அதிகமாகும். சீனாவின் ஜியான் பகுதியைச் சேர்ந்த பைட் ஆட்டோ, 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது மொபைல் போன்களுக்கான பேட்டரிகளைத் தயாரித்தது. பின்னர் மின்வாகனங்களின் விற்பனையில் இறங்கியது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் விற்ற மின்வாகனங்களின் எண்ணிக்கை 2,48,000. பாரிஸ் சூழல் ஒப்பந்தப்படி, 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு காற்றிலுள்ள கார்பன் மாசைக் குறைக்கும் திட்டத்தை சீனா வகுத்தது. இதற்காக, மின்வாகனத் தயாரிப்பாளர்களுக்கு வரிச்சலுகை அளித்து உதவுகிறது சீன அரசு. மேலும் 3,42,000 இடங்களில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டுகளையும் அமைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சார்ஜிங் பாயிண்டுகளின் எண்ணிக்கை 67,000 தான். ...
தடுப்பூசிகள் நம்மை நோயிலிருந்து காக்கிறதா?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
goodreads Vaccine Science Revisited: Are Childhood Immunizations As Safe As Claimed? (The Underground Knowledge Series #8) by James Morcan (Goodreads Author) , Lance Morcan (Goodreads Author) , Elisabet Norris (Foreword) நீங்கள் கல்வியாளரோ, பத்திரிகை ஆசிரியரோ, டாக்டரோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் தடுப்பூசி பற்றிய இந்நூல் அதுகுறித்த கவனத்தை உங்களிடம் ஏற்படுத்தும். தடுப்பூசிகளின் தயாரிப்பு, அது அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையும் இதில் பேசப்படுகின்றன. புலனாய்வு முறையில் தடுப்பூசிகள் எப்படி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை ஆசிரியர் வி ளக்கி அதிர்ச்சியை தருகிறார். Goodreads The Electric War: Edison, Tesla, Westinghouse, and the Race to Light the World (Gilded Age #1) by Mike Winchell (Goodreads Author) மின்சாரத்தை யார் கண்டுபிடித்தது என்றால் என்ன பதிலைக் கூறுவீர்கள்? ஆனால் அக்காலத்தில் அப்போட்டியில் தாமஸ் எடிசன், நிக்கோலா ...