இடுகைகள்

பொறுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!

      பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்! லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும். நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூ...

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்...

நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது!

படம்
giphy மிஸ்டர் ரோனி நாம் மகிழ்ச்சியை இழக்கும் வயது எது? கல்யாணம் செய்துகொள்ளும் வயது என சீரியசாக காமெடி செய்யக்கூடாது. பொதுவாக நிறைய பொறுப்புகள் இந்தியர்கள் ஏற்கிறார்கள். இதனால் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆளாகி அறுபது வயதிலேயே இதயம் வெடித்து சாகிறார்கள். ஒகே இதனை மாரடைப்பு என வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு காரணம் மன அழுத்தம். இந்த பிரச்னைகள் தொடங்கும் வயது 47. வளர்ந்த நாடுகளில் 48 என்கிறது ஆய்வு. இந்த வயது தொடங்கி ஐம்பது, அறுபதுகளில் மெல்ல தூக்கமும் குறையத்தொடங்கும். உங்கள் வாயில் நிறைய புலம்பல்களும் கேட்கத் தொடங்கும். இதுபற்றி ஆராய்ந்த மருத்துவர் டெரங்க் செங், மகிழ்ச்சி என்பது யு வடிவத்தை ஒத்தது என்கிறார். இதுபற்றி 2015ஆம் ஆண்டு ஒரே வயது கொண்டவர்களை ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுபற்றி மருத்துவர் டீன் பர்னட், “மனதில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் இளமையில் இறந்துவிடுகிறார்கள். காரணம், இளம் வயதில்  நிறைய பொறுப்புகள் கிடையாது. நாற்பது மற்றும் ஐம்பது வயதுகளில் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. இளம்வயது...