இடுகைகள்

போட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பத்து ரூபாய்! - 1page story

  மீண்டும் பத்து ரூபாய் ! அண்ணாச்சி , மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர் , சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான் . பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான் . அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர் , கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான் . வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான் . உடனே , நடந்து சென்று , கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான் . பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர் . வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான் . பிள்ளைகள் ஞாபகம் வர , உள்ளே நுழைந்தான் . ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு , பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான் . ஐநூறு ரூபாயைக் காணவில்லை . கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது . சங்கருக்கு உள்ளூர பீதியானது . கடையில் இருந்து வெளியே வந்தவன் , பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான் . பர்ஸில் எந்த கிழிசல் , ஓட்டையும் இல்லை . அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே ? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான் . ...

ஏழை நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து நன்மதிப்பை பெறும் சீனாவின் உத்தி!

படம்
        வரவேற்பு கிடைக்குமிடத்தில் வணிகத்தை நடத்தி வெற்றி பெறும் சீனா! சீனாவுக்கு அமெரிக்காவை அசைத்துப் பார்த்து முதலிடத்தை பெறும் லட்சியம் உண்டு. தென்சீனக்கடலை அதன் ராணுவக்கப்பல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இதெல்லாம் கடந்து, உள்நாட்டில் வணிகம் வளர்ச்சியில் சுணக்கம் கண்டவுடன், இரண்டாயிரத்திலேயே அயல்நாடுகளை நோக்கி சீன நிறுவனங்களை செல்லுமாறு அந்த நாட்டு அரசு கூறிவிட்டது. அரசு கூறியதை அரசு, தனியார் நிறுவனங்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சவுதி அரேபியா, மலேசியா, வியட்நாம், எகிப்து, மொராகோ, கஜகஸ்தான், இந்தோனேசியா, அர்ஜென்டினா, செர்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வணிகம் செய்யத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கை அமெரிக்கா தடை செய்தாலும் கூட அதைப்பயன்படுத்தி சீனா பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தை கொண்டு சென்றுள்ளது. அந்த நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் வறுமையாக உள்ள நாடுகளில் தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன. இப்படி செய்வதால் சீனாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளா...

பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

படம்
            வினோதரச மஞ்சரி பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது! சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது  அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவ...

மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள்

படம்
            மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள் என்எம் கிரிக்கெட் மைதானம் அகமதாபாத், இந்தியா 1982ஆம்ஆண்டு திறக்கப்பட்டது. ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேர் அமர்ந்து விளையாட்டைக் காணலாம். தொடக்கத்தில் இதன் பெயர், மோட்டெரா என பெயர் வைக்கப்பட்டது. பிறகு வாழும் பரமாத்மாவான அரசியல்வாதி பெயருக்கு மாற்றப்பட்ட பெருமைக்குரிய மைதானம். 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி, இந்த மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் கோல்கத்தா, இந்தியா 1864ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொலோசியத்திற்கு சவால்விடும் அளவுக்கு பெரியது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். 1987ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2016ஆம்ஆண்டு டி20 இறுதிப்போட்டி ஆகியவை நடைபெற்றன. எஸ்விஎன் சர்வதேச மைதானம் ராய்ப்பூர், இ்ந்தியா 2008ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சத்தீஸ்கரில் உள்ள இம்மைதானத்தில் அறுபத்தைந்தாயிரம் பேர் உட்காரலாம். 2023ஆம் ஆண்டு இந்தியாவின் ஐம்பது கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. க்ரீன்ஃபீல்ட் மைதானம் திருவனந்தபுரம், இந்தியா 2015ஆம்...

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது!

படம்
  jenson huang nvidia ceo வயது 61 என அவரே சொன்னால்தான் தெரிகிறது. கறுப்பு ஜெர்கினும், ஷூக்களுமாக உற்சாகமாக பேசுகிறார். அவரோடு பேசும்போது அவரை நாம் நேர்காணல் செய்கிறோமா அல்லது அவர் நம்மைப் பற்றி விசாரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. அந்தளவு பேச்சில் பல்வேறு விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஏஐ சிப்களை உருவாக்கி வரும் என்விடியா முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று. கூகுள், அமேசான், மெட்டா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்களுக்கு கடும்போட்டியை சந்தையில் அளித்து வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்யும் இயக்குநர், எந்த மேடையிலும் சோர்ந்து அமர்ந்திருந்தது இல்லை. அவரிடம் பேசினோம்.  நீங்கள் பத்திரிகையாளர் ஆக விரும்பினீர்களா? ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்.  என்ன காரணத்திற்காக? அடோப்பின் நிறுவனர் சாந்தனு நாராயண், நான் மதிக்கும் முக்கியமான வணிக தலைவர்களில் ஒருவர். அவர் பத்திரிகையாளராள ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில், அந்த வேலை வழியாக கதைகளை சொல்ல விரும்பினார்.  வணிக்கத்திற்கு கதை சொல்வது முக்கியம் என்று கூறவருகிறீர்களா? ஆமாம், நிறுவனத்தின் நிலைப்பாடு, கலாசார உருவாக்கம் ஆ...

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொ...

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில...

திறமையான வீரர்களுக்கு ஓய்வு அவசியம் தேவை! - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

படம்
  ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் நேர்காணல் இந்தியாவுக்கு விளையாட வந்துள்ள ஆஸ்திரேலிய அணிகளில் தற்போதைய அணி, இதுவரை வந்து விளையாடியதில் மிகவும் பலவீனமான அணியாக உள்ளதா? எப்படி சொல்கிறீர்கள்? முன்னர், இந்தியாவில் விளையாடுவதற்கு வந்த ஆஸி. அணியைப் பார்த்தாலே வேறுபாடு தெரியும். அதற்காக முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னே போகவேண்டாம். எனக்குத் தெரிந்து இப்போது வந்து விளையாடும் அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது இங்கு நான் கூறுவது திறமையைப் பற்றியல்ல. அவர்களின் மனநிலையைப் பற்றி… முந்தைய அணி வீரர்களைப் போல இவர்களால் களத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த அணி, ஆஸியைப் போல இல்லை. நாங்கள் விளையாடிய ஆஸி. அணியைப் போல இல்லை என்று கூறுகிறேன். அணியில் என்ன போதாமை இருக்கிறது என கூறுகிறீர்களா?ஆ ஆஸி அணி, எப்போதும் ஒரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்னரே பல்வேறு திட்டங்களைத் தீட்டி வைத்திருப்பார்கள். விளையாடும் நாட்டின் தட்பவெப்பநிலை பற்றிய தீர்க்கமான அறிவு ஆஸி அணிக்கு உண்டு. இதனால்தான் அவர்கள் பிற அணிகளை விட அதிக வெற்றிபெற்றவர்களாக இருக்...

புகழ்வெளிச்சம் எப்போதும் ஆபத்தானது! - எர்னோ ரூபிக், க்யூப் கண்டுபிடிப்பாளர்

படம்
  ”க்யூபை எப்படி உருவாக்கினேன் என்றே எனக்கு தெரியாது!” ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் உருவாக்கினார்.   1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார்.  1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார். க்யூப்பை உருவாக்கியபோது தனது அம்மாவின் வீட்டில் இருந்தார். ஜியோமெட்ரிக் வடிவங்களின் மீது ஆர்வம் கொண்ட எர்னோ ரூபிக், பல்வேறு வடிவங்களில் க்யூபை செய்து பார்த்தார். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. பிறகுதான், உருவாக்கிய அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அனைத்தும் ஒன்றுக்கு...

வேலூரின் தனித்துவமான பாடிபில்டர்! - சங்கீதா

படம்
  வேலூரில் உள்ள மார்க்கெட்டில் சுமைகளை தூக்குவதுதான் சங்கீதாவின் ஒரே வேலை. சட்டை, பேண்ட் போட்டு வேலைக்கு தயாராக இருக்கிறார். தினசரி இப்படி வேலை செய்தால்தான், வீட்டில் உள்ள இரு குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். 35 வயதான சங்கீதாவை விட்டு கணவர் விலகிப் போய்விட்டார்.  தினக்கூலியாக இப்படி வேலை பார்த்தாலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதுதான் சங்கீதாவின் முக்கியமான லட்சியம். அண்மையில் இங்கு நடைபெற்ற பெண்களுக்கான பாடி பில்டர் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்.  நான் பேண்ட் சர்ட் போட்டிருப்பதை பார்த்து நிறையப் பேர் எதற்கு இந்த உடை என்று கேட்டிருக்கிறார்கள். எனது வேலைக்கு இது உதவியாக இருக்கிறது. நான் நேர்மையற்ற எந்த விஷயத்தையும் செய்யவில்லை. நான் இப்போது பாடிபில்டர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, என்னை விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்டுகிறார்கள் என்றார் சங்கீதா.  ஜிம்மில் சங்கீதாவிற்கு பயிற்சி கொடுப்பவர், குமரவேல் என்ற ஜிம் மாஸ்டர். இவர் கொடுத்த ஊக்கத்தில்தான் சங்கீதா போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். பாடிபில்டிங் என்பது அதிக செலவு பிடிக்கும் துறை. பயிற்சி மட...

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்...

மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ

படம்
            நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலி...

நிறுவனத்தை குடும்பத்தினர் நடத்துவதை விட தகுதியுள்ளவர்கள் நடத்தவேண்டும்! - சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல்

படம்
                சுனில்பார்தி மிட்டல் ! ஏர்டெல் நீங்கள் டெலிகாம் சார்ந்து மட்டும்தான் செயல்படுகிறார்கள் . பிற நிறுவனங்கள் போல பல்வேறு சேவைகளை வழங்கும் எண்ணம் இல்லையா ? பிற நிறுவனங்கள் வழங்காத பல்வேறு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது . நாங்கள் அமேசான் , நெட்பிளிக்ஸ் , ஜீ 5 நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளை வழங்குகிறோம் . எங்களிடம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் கிடையாது . பெரிய ஸ்டூடியோ கிடையாது என்பது உண்மைதான் . ஒருமுறை ஏடிஅண்ட்டி டைம் வார்னர் நிறுவனங்கள் இணைந்தபோது , அதன் இயக்குநரிடம் பேசினேன் . எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் வரப்போகின்றன . அப்போது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நிறுவனம் தேவை என்று கூறினார் . இப்படி நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது . ஆனால் அந்நிறுவனம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது . ரிலையன்ஸ் நிறுவனம் 2 ஜி தேவையில்லை என்று கூறிவருகிறதே ? நாங்கள் இப்போது 3 ஜி விவகாரத்தில் உள்ளோம் . மெல்ல மக்களும் 4 ஜி சிம் கார்டுகளை வாங்கிவருகிறார்கள் . 2 ஜியிலிருந்து மக்...