இடுகைகள்

கார்டியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்டியன் - ஊக்கம் தரும் மனிதர்கள் 2024 - புகைப்படங்கள்

படம்
 

கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024

படம்
      கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024 மகளின் நோயை விளக்க புத்தகம் எழுதிய தாய்! டோன்யே ஃபாலுகி எகேசி நைஜீரியாவைச் சேர்ந்தவர் லோலா சோன்யின். இவர் உய்டா புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞரான இவர் குழந்தைகளுக்காக ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளராக டோன்யே என்ற எழுத்தாளரை அடையாளம் காட்டினார். டோன்யே, தனது ஒன்பது வயது மகள் சிமோனுக்காக நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது மகளுக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. இதுபற்றிய நூல்கள் இல்லாத நிலையில், தாயே மகளுக்காக, மகளின் நோயைப் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இவரின் நூல்களை உய்டாபுக்ஸ் வெளியிட்டு வருகிறது. டோன்யேவின் வீட்டிக்கு வந்த டவுன் சிண்ட்ரோம் சிகிச்சையாளருக்கு, நோயை எப்படி விளக்குவதென தெரியவில்லை. ஏதேனும் நூல்கள் கிடைக்குமா தேடி சோர்ந்து போயிருக்கிறார். உகோ அண்ட் சிம் சிம் - வாட் இஸ் டவுன் சிண்ட்ரோம் என்ற தலைப்பில் இரு பிரதிகளை அச்சிட்டிருக்கிறார். பிறகு, ஐந்தாயிரம் பிரதிகளை அச்சடித்து விற்றிருக்கிறார். பிறகுதான் உய்டோ பதிப்பக உதவி கிடைத்திருக்கிறது. என்னுடைய குழந்தையின் நிலையை அறி...

ஐஸ்லாந்தின் திமிங்கில வேட்டை தடையால் உருவாகும் மாற்றம்!

படம்
  திமிங்கில வேட்டைக்குத் தடை! ஐஸ்லாந்து நாட்டின், ஃபேக்ஸாபிளோய் விரிகுடா பகுதி. இங்கு, படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றும்போதே வழிகாட்டி, திமிங்கில இறைச்சியை தவிருங்கள். அதனை பாதுகாக்க முயன்று வருகிறோம் என்று கூறிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான திமிங்கில வேட்டையை நிறுத்தவேண்டும் என ஐஸ்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   ஜப்பான் நாடு, சில ஆண்டுகளாக திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது. பிறகு, 2019ஆம் ஆண்டு வணிகரீதியான திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக, ஐஸ்லாந்து நாட்டு திமிங்கில இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அரசின் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் ஸ்வாண்டிஸ் ஸ்வாவர்ஸ்டோட்டிர், ”திமிங்கிலப் பாதுகாப்பே முக்கியம். பொருளாதாரப் பயன் முக்கியமல்ல” என்று  நாளிதழில் எழுதியுள்ளார்.  இதெல்லாம் தாண்டி சூழல் அமைப்புகள், திமிங்கில வேட்டையைத் தடுக்க 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.   ஐஸ்லாந்தில் , 1600 ஆம் ஆண்டிலிருந்தே திமிங்கில வேட்டை நடைமுறையில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தில் நுழைந்த அமெரிக...