இடுகைகள்

தமிழ் சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவிழாவில் இளம்பெண்ணின் இடுப்பைக் கிள்ளி, அவளது குடும்பத்தை ஆபத்தில் தள்ளும் நாயகன்!

படம்
      மிளகா நட்ராஜ், பூங்கொடி இயக்கம் ரவி மரியா படத்தில் இசை, பாடல்கள் எல்லாமே சுமார்தான். குறைந்த பட்ஜெட் படம். படத்தின் கதைதான் முக்கியமானது. அலங்காநல்லூர் அழகர் என்ற நாயகன் பாத்திரம்தான் படத்தில் நாயகன், வில்லனும் கூட அவன்தான். இதில் என்ன வேடிக்கை என்றால், அவர் செய்த ஒரு செயலால் நாயகியின் குடும்பமே பாதிக்கப்படுகிறது. ஆனால், அதை நாயகன் அறியாமல் இருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பிரச்னையே அவரின் கையில் வந்துவிழுகிறது. மிளகாய் மண்டிக்காரரான அவர், பிரச்னையை அவரது வழியில் காரசாரமாக சண்டை போட்டு தீர்த்து வைப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் முரண், அதற்கான வித்தை நாயகனே செய்திருக்கிறான் என்பது மட்டுமே சற்று ஆர்வமூட்டுகிறது. மற்றபடி சினிமா ஒரே டெம்பிளேட்டில் பயணித்து முடிகிறது. எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநர் என்பதாலா என்னவோ தெரியவில்லை. நாயகியின் (பூங்கொடி) இடுப்புதான் கதைக்களம். பின்புறமாக இடுப்பை பல்வேறு குளோசப் காட்சிகளில் காட்டுகிறார்கள். அலங்காநல்லூர் அழகர், மிளகாய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆப்பம், சோடா, பருத்திப்பால், பண்டு பாத்திரங்கள் விற்கும் ...

வங்கி மோசடியில் சிக்கி வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள ஓடும் இளைஞன்! ஜருகண்டி

படம்
ஜருகண்டி இயக்கம்: ஏ.என். பிச்சுமணி இசை: போபோ சஷி ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் சொத்துக்களை பிறரின் சொத்துக்களாக கணக்கு காட்டி வங்கியில் லோன் பெற்றுத்தருகிறது  ஒரு சமூக விரோத கும்பல். இவர்களின் பிடியில் ஜெய்யும் அவரது நண்பரும் சிக்குகிறார்கள். லோன் வாங்கிக்கொடுத்து அதற்கான கமிஷனையும கொடுத்துவிட்டு ஜில் ஜில் டிராவல்ஸ் தொடங்குகிறார் ஜெய். கடன் வாங்கிக்கொடுத்த அவரது நண்பருக்கு நான்கு நாட்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நடந்த திருட்டுத்தனம் தெரியும். எனக்கு பத்து லட்சம் ஷேர் கொடுத்தால் மூச் காட்டமாட்டேன். இல்லைன்னா, இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையை அழிச்சிடுவேன் என மிரட்டுகிறார்.  இதற்கான பணம் தேடி அலையும்போது, இளம்பெண் ஒருவரை ரோபோ சங்கர் கடத்தி கொண்டு வந்தால் பணம் தருவதாக சொல்கிறார். இதை நம்பி ஜெய்யும் அவரது நண்பரும் அப்பெண்ணை கடத்த, விவகாரம் பெரிதாகிறது. அந்த பெண் திடீரென பத்து லட்சரூபாய் படத்துடன் எஸ் ஸாக ஜெய்க்கு பிபி எகிறுகிறது. யார் அந்த பெண், அவரை எதற்காக ரோபோ சங்கர் கடத்த சொல்லு...

கீ - தந்தை மகன் பாசம் மட்டுமே காப்பாற்றுகிறது

படம்
கீ காளீஸ் மனதில் நிற்பது கதை, இரும்புத்திரை படத்தின் கதையைப் போல செல்கிறது. ஆனால் அப்பா - மகன் பாசம்தான் மனதில் நிற்கிறது. சுவாரசியம் வில்லனின் கதாபாத்திரம். பிறரை ஆட்டிவைப்பதும், உயிருக்கு அவர்கள் கெஞ்சுவதும் அவரை கடவுளாக மாற்றுகிறது. சலனமான மனது, உறுதியில்லாத மனிதர்களை உடைத்து உலகை விட்டே எறியும் உணர்ச்சிகளைக் களைந்த வில்லன் சுவாரசியம். தற்கொலை முயற்சிகளுக்கான ஸ்கெட்ச், பயமுறுத்துகிறது. கதை நாயகன் ஜீவா மீண்டும் கல்லூரி செல்கிறார். அதை நாம் ஏற்கமாட்டோம் என்பதாலோ என்னமோ காலேஜ் காட்சிகள் குறைவு. பெரும்பாலும் ஜாலியாக போனில், கணினியில் நோண்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் அதிகம். மைனஸ் மேலே சொன்ன விஷயங்களை தவிர்த்து எல்லாமே போதாது ரகம்தான். காளீஸூக்கு முதல் படத்தில்  திரைப்படமாக்கம், வசனம் என அனைத்தும் செய்து இருக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் அடப்போய்யா என சொல்ல வைத்திருக்கிறார். இசையை தேட வேண்டியிருக்கிறது. நாயகி பற்றி சொல்ல ஏதுமில்லை. உருப்படியான விஷயம் ராஜேந்திர பிரசாத். தெலுங்கு ராவுகாரு பிரமாதமாக நடித்து நம் மனதில் இ...