இடுகைகள்

எலக்ட்ரிக் கார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அ...

எலக்ட்ரிக் வாகனப் புரட்சி எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா?

படம்
எலக்ட்ரிக் வாகனப் புரட்சி அமெரிக்காவில் இருந்து தொடங்கும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சீனாவிலிருந்து தொடங்கும் என்பதுதான் உண்மை. எப்படி? 2018 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 23 மில்லியன் கார்கள் விற்றுப்போயுள்ளன. இன்றும்கூட சீனாவில் கார்களே இல்லாத குடும்பங்களும் அங்கு உண்டு என்பதால் வாகனச்சந்தை இன்னும் விரிவாக அனேக வாய்ப்புகள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு முதலாக எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அங்கு உயரத்தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 1.1 மில்லியன் கார்கள் அங்கு விற்றுள்ளன. 55 சதவீத கார்கள் உலகமெங்கும் விற்றுபோயுள்ளன என்றால் அதைவிட மூன்று மடங்கு எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை சீனர்கள் வாங்கியுள்ளனர். இதன் போட்டியாளரான அமெரிக்காவில் 3 லட்சத்து 58 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்றுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கார் பேட்டரிகளின் விலை சரசரவென குறைந்ததுதான். 2021 ஆம் ஆண்டு  உலகின் 70 எலக்ட்ரிக் கார் பேட்டரிகளை சீனாவே தயாரிக்கும் என அறிக்கை கூறியுள்ளது. சீன அரசு இதற்காக பல்லாயிரம் கோடி டாலர்களை இத்துறைக்கு மானியமாக அளித்துள்ளது. இதனால் பல்வேறு கார் கம்பெனிகள் ...