இடுகைகள்

நாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்கள் அடிமை அல்ல சக உயிர் என உரக்கச்சொல்லும் கட்டுரைகள் - பின்தொடரும் பிரம்மம்

 பின்தொடரும் பிரம்மம் ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே நாய்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமான தொடர்பை, அன்பை பகிர்பவை. இந்த கட்டுரைகள் வழியாக அவர் வளர்த்த நாய்கள், அவற்றை அவர் பெற்றது, அதன் வழியாக கிடைத்த அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. இதில் நவீன் என்ற அவரது நண்பரது நாய் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  நாய்களை வளர்ப்பது பற்றிய அன்பையும் அக்கறையையும் நூல் வழியாக பெற முடியும். பல்வேறு கட்டுரைகளிலும் நாயை எப்படி வளர்ப்பது, பழக்க வழக்கங்களை மாற்றுவது, கனிவோடு நடத்துவது ஆகியவற்றைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நாயை துன்புறுத்துபவர்களை அக இருள் வன்முறையாளர் என கூறுகிறார். நாயின் பழக்கவழக்கங்களை அடித்து திருத்த முடியாது என சில சம்பவங்கள் வழியாக விளக்குகிறார். அவர் தனது வீட்டில் டாபர்மேன், லாப்ரடார் என இரு இன நாய்களை வளர்க்கிறார். பின்னாளில் பயணிக்கும் பிரச்னைகள் எழவே நாய் வளர்ப்பதை கைவிடுகிறார்.  நாய் வளர்ப்பது, பசுவை வளர்த்து பால் பெறுவது போன்றதல்ல. அது ஆத்மாவின் தேவைக்கானது என கூறுகிறார். கறுத்தம்மா என்ற காட்டில் வாழும் வேட்டையாடி உண்ணும...

விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆபத்தான நாய் இனங்கள் எவை? பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது. நாய்கள் ஊளையிடுவது எதற்காக? அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும். மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன? மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது. குரைக்காத நாய் இனம் எது? பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம். விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது? நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினை...

அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!

படம்
      ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள் இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன. இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை. இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு...

விலங்குகளின் குணநலன்கள் என்ன?, நம் கண்களால் பார்க்க முடிந்த தொலைவு? - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              ஈத்தாலஜி என்பது என்ன? எதைப்பற்றியது? கிரேக்க மொழியில் இருந்து உருவான சொல் ஈத்தாலஜி. ஒருவரின் செயல், நடத்தை, அறம் ஆகியவற்றைக் குறிப்பது. தற்போது, விலங்கியல் பக்கம் நகர்ந்து விலங்கின் நடத்தை என்பதாக மாறிவிட்டது. 1872ஆம் ஆண்டு டார்வின், தி எக்ஸ்பிரஷன் ஆப் தி எமோஷன் என்ற நூலை எழுதினார். மனிதர்களின் உணர்வு வெளிப்பாட்டுத்தன்மை, விலங்குகளின் நடத்தைக்கு அடிப்படையாவதுஎப்படி என ஆய்வு செய்து எழுதியிருந்தார். 1950களில் விலங்குகளின் நடத்தை எப்படி மாறுகிறது என கான்ராட் லோரன்ஸ் என்பவர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அதில், விலங்குகளை தூண்டிவிடும் இயல்பு கொண்டதாக இனப்பெருக்க கால துணையின் நடனம், வாசனைகள் உள்ளன என கண்டறிந்தார். இப்போதும் தேனீக்கள், எறும்புகளைப் பார்த்தால் உலகில் அவை மட்டுமே உள்ளது என எண்ணுவதைப் போல குழுவாக எதிலும் மூக்கை நுழைக்காமல் வேலை செய்துகொண்டிருக்கும். விலங்குகள் தனியாக செயல்படும்போது உற்பத்தி திறன் கொண்டவையாகவும், குழுவாக இருக்கும்போது பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் கூடுவதையும் ஆராய்ச்சிகள் காட்டின. இனக்குழுவின் நன்மைக்காக தன்...

நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!

படம்
  சோல் ஆஃப் பிளேட்ஸ் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி.  படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்....

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆ...

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - தரவிறக்க இணைய இணைப்பு

படம்
  ஆதிகாலத்தோழன் மின்னூலின் அட்டைப்படம் நாய்களைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவே. காரணம் அவை நமக்கு கட்டுப்பட்டவை. உத்தரவைக் கேட்டு நடக்கும் உயிரினம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அதன் மூளையில் என்ன நடக்கிறது, மனிதர்களோடு இணைந்து சகித்து வாழ்வது, ஏறத்தாழ குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல அதீத நட்புணர்வு காட்டுவது என இதன பின்னணியில் உள்ள விஷயங்களை ஆதிகாலத் தோழன் நூல் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இந்த நூலை வாசித்தவர்கள், தங்களது நாய்களை கவனித்து வளர்ப்பதோடு, அதனைப் புரிந்துகொள்ளவும் முயல்வார்கள் என்பது உறுதி. https://www.amazon.in/dp/B0CDM2JZG1 இந்த நூலின் சில அத்தியாயங்கள் சப்ஸ்டாக் வலைத்தளத்தில் கிடைக்கும். அதில் இணைந்து வாசியுங்கள்.நன்றி!

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில் விரைவில்.....

படம்
 

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள...

ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

படம்
  பார்டர் கோலி நாய் இனம் டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.   இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம். டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது. உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித ...

காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

படம்
  நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும். போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும். தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதி...

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களை...

நாயின் உளவியல் பற்றி அறிய விருப்பமா? - சப்ஸ்டாக் தளத்தில் இணையுங்கள்!

படம்
  நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குதான் நாய். பெரும்பாலானவர்கள் நாயை தங்கள் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். இந்த சூழலில், நாயின் உளவியல் பற்றி அறிவது அவசியம். என்னதான் இருந்தாலும் உயிருள்ள பிராணி அல்லவா?  இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் சப்ஸ்டாக் தளத்தில் வாரம்தோறும் வியாழனில் வாசிக்கலாம். தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் செய்தி மடல் உங்களுக்கு கிடைக்கும். நன்றி! anbarasushanmugam.substack.com

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில...

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று ...

நாயின் குண இயல்புகள்!

படம்
  ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அதன் அடிப்படையான பண்பை மாற்ற முடியாது எலி வளை தோண்டுவதையோ, பாம்பு எலியை பிடித்து உண்ண வேட்டைக்கு செல்வதையோ, தவளை, நிலம் நீர் என இடம் மாறி செல்வதையோ தடுக்க முடியாது. இதைப்போலவே நாய் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, புதிய இடங்களை அடையாளம் அறிவதில் ஆர்வம் காட்டுவது   ஆகியவற்றை எப்போதும் செய்துகொண்டே இருக்கும். ஆனால், இன்று தனது நாய் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டுமென நாயை கட்டுப்படுத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால், நாய் தனது சுதந்திரமும் இயல்பும் பறிபோனதால் சாப்பிடாமல் மனச்சோர்வுக்கு உள்ளாகும். மெல்ல உரிமையாளரின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும். அதன் அடிப்படை குண இயல்புகளே மாறும்.   எனவே, நாயை அதன் இயல்புக்கு மோப்பம் பிடிக்கவோ தரையை பிறாண்டவோ அனுமதிக்கலாம். குழி தோண்டுவதை வீட்டில் தோட்டம் இருந்தால் செய்யவிடலாம். பிறரின் இடத்தில் செய்தால் நிலைமை களேபரமாகும். பொது பூங்காக்களில் நாயை சற்று சுதந்திரமாக இருக்குமாறு விடலாம். கழுத்தில் காலர் மாட்டில் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை. பிறரை கடிக்கும் குணம் கொண்ட நாய்கள் என்றால் அதை பூங...

தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

படம்
  ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ் ரிங் மாஸ்டர்   ரிங் மாஸ்டர் இயக்கம் – ரஃபி திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு   கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.   படம் முழுக்க   காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள். லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்...

இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

படம்
  இந்திய  நாயினங்கள்  தியடோர் பாஸ்கரன்   காலச்சுவடு  மின்னூல்  இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான்.  கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர்.  இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு ...

கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

படம்
  பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான்.  வீட்டுக்குள் இருந்தாலே போதும்.... கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை.... வியாபாரம் வேண்டாமே? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர...