முயற்சியும், பயிற்சியும் செய்தால் எழுத்தாளராக மாறமுடியும்!
ரைட்டிங் தட் கெட் நோட்டிஸ்டு எஸ்டெல் எராஸ்மஸ் இந்த நூல் பொது வாசகர்களுக்கானது அல்ல. வளரும், துறையில் ஏற்கெனவே உள்ள எழுத்தாளர்களுக்கானது. நூலை எழுதியுள்ள எழுத்தாளர் எஸ்டெல், பல்வேறு பதிப்பகங்கள், பெண்கள் பத்திரிகைகள், நாளிதழ்களில் பணியாற்றி பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது சப்ஸ்டாக், பிளாக், வலைத்தளத்தளங்கள், பாட்காஸ்ட் ஆகியவற்றை நடத்தி வருகிறார். புதிய தலைமுறையினருக்கு எழுதுவது பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார். நீங்கள் அவருடைய வலைத்தளத்திற்கு சென்று, மின்னஞ்சலுக்கு பதிவு செய்தால் கூட இலவச நூலை தரவிறக்கிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார். நூல் தரவிறங்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் முயலுங்கள். எழுத்தாளர் பயணிதரன் என்பவர் கூட இப்படி மின்னஞ்சலில் இணைபவர்களுக்கு புத்தகப் பரிசு ஒன்றை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், வலைத்தளத்தில் சேர்ந்தபிறகும் கூட அவரது இலவச பரிசு இன்னும் வந்து சேரவில்லை. புதிய வாசகர்களைப் பிடிக்க இப்படியான தூண்டில்களை போடவேண்டும்போல. நூலில், எஸ்டெல் எப்படி எழுதவேண்டும், எடிட்டர்கள் கூறுவதைப் புரிந்துகொள்வது, நேரத்திற...