இடுகைகள்

பொருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது. வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளித...

குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

படம்
  லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்   ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.   இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை. நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை   வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞ...

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் பயன்படுத்தும் சொற்கள், பொருள்

படம்
  டாப்/டாமினன்ட்/டாம்/டாமே (Top, Dominant, Dom, Domme) சூழலைக் கட்டுப்படுத்துபவர், இவர் கட்டளைகளை சப்மிசிவ் நிலையில் உள்ளவர்களுக்கு கூறுவார். இந்த நிலையில் உள்ள பெண்களுக்கு டாமே என்று பெயர். இவர்கள் முழுநேரமாக டாமினன்ட் நிலையில் இருப்பவர்கள் அல்ல. மாஸ்டர் /மிஸ்ட்ரஸ் (Master / Mistress ) டாமினன்ட்/ சம்மிசிவ் உறவில் ஒருவர் முழுமையாக முழுநேரமும் இருந்தால் அவர்களில் கட்டளைகளை வழங்குபவரை மாஸ்டர் என்றும் அதற்கு அடிபணிபவரை மிஸ்ட்ரஸ் என்றும் அழைப்பார்கள். ஒன்றாக வாழும் தம்பதியர் பிடிஎஸ்எம் முறையை எப்போதும் கடைபிடிப்பவர்களை இப்படி கூறலாம். பாட்டம் / சப்மிசிவ் (Bottom, submissive) பிறரால் கட்டுப்படுத்தும் மனிதரைக் குறிக்கும் வார்த்தை. பிறருக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியாக மகிழ்ச்சியை பெறுபவர். ஸ்லேவ் (Slave) சப்மிசிவ் என்ற கூறிய நிலையின் ஆழமான பகுதி. ஸ்லேவ் என்பவர் மாஸ்டர் அல்லது டாமினன்ட் நபரால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்படுபவர். தங்கள் உரிமைகளை, தேவையை முழுக்க கைவிட்டுவிட்டவர் என்று பொருள் கொள்ளலாம். எஜமானர் மகிழ்ச்சி அடைந்தால் அடிமை மகிழ்ச்சி அ...

சூழல் சொற்கள்! - அறிய வேண்டிய ஆங்கிலச் சொற்களும், அதன் பொருளும்!

படம்
  பொருள் அறிவோம்! Abrupt Climate change காலநிலையில் உடனடியாக நடைபெறும் மாற்றம் அல்லது விளைவு Adaptation புதிய மாறிவரும் இயற்கை சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வது Adaptive Capacity எதிர்கால காலநிலை மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன். இத்திறன் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தது.  Aerosols வளிமண்டலத்தில் உள்ள சிறு துகள்கள் அல்லது நீர் திவலைகள். இவை சூரிய வெப்பத்தை ஈர்க்கின்றன. எடு.கடல் உப்பு, எரிமலை சாம்பல், தூசி Afforestation காடுகள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்கி வளர்ப்பது https://19january2017snapshot.epa.gov/climatechange/glossary-climate-change-terms_.html

சூழல் சொற்களுக்கான அர்த்தம் அறிவோம்!

படம்
  அருஞ்சொல் Albedo சூரியனின் கதிர்வீச்சு பொருளின் மீது அல்லது பரப்பின் மீது எந்தளவு படுகிறது என்பதைக் குறிக்கும் அளவு. வானியலில் அதிகம் பயன்படுகிறது.  Alternative Energy சூரியன், காற்று, நீர் ஆகிய இயற்கை வள ஆதாரங்களிலிருந்து பெறும் ஆற்றல் Anthropogenic மனிதர்களின் செயல்பாட்டால் இயற்கையில் ஏற்படும் மாறுதல் அல்லது பாதிப்பு. பொதுவாக, மனிதர்களால் உருவாகும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.  Atmosphere பூமியின் வளிமண்டலம். காற்றிலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் உள்ளிட்ட வாயுக்களைக் குறிப்பிடுகிறது.  Atmospheric Lifetime வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் பல்லாண்டுகள் இயக்கத்தில் இருக்கும். எடு. கார்பன் டை ஆக்சைட்  அப்சார்ப்ஷன் (Absorption) உறிஞ்சுதல். ஒரு பொருள் இன்னொரு பொருளை தனக்குள் ஈர்த்துக்கொள்வது. எ.டு. கரிம எரிபொருட்களால் உருவாகும் நைட்ரஜன் டையாக்சைட், சூரிய ஒளியில் நீலநிற ஒளியை ஈர்ப்பது. ஆசிட் (Acid) பிஹெச்  அளவுகோலில் எண் 7க...

வேகமாக வாசிப்பது என்பது உண்மையா?

படம்
தெரிஞ்சுக்கோ! எனக்குத் தெரிந்த நண்பர் இதழியில் துறையில் பணியாற்றுகிறார். மாதம் அறுபது எழுபது நூல்களை படித்து முடிப்பவர். அவர் எப்படி படிக்கிறார் என்பதை நான் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்படி வாசிப்பது பற்றியும், அவரது அறிவுத்திறன் பற்றியும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் படித்த விஷயங்களை நிறைய முறை அவரது நிறுவனத்தில் அமல்படுத்தி சாதித்திருக்கிறார். எப்படி இப்படி சிலரால் மட்டும்  வேகமாக படிக்க முடிகிறது. இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நிறைய படிக்கும் முடிவெடுப்பது முக்கியம். அப்போதுதான் படிக்கும் வேகம் கைகூடும். அதற்காக மூளை இயல்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை முழுமையாக படிக்காமலேயே உங்களுக்கு அதுதான் என தெரிந்துவிடும். பின் எதற்கு, அதனைப் படிக்கவேண்டும்? இதனை சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிலர் இப்படி வேகமாக படிப்பவர்கள் ஒன்றும் விவேகானந்தர் போல கிடையாது என்று வாதிடுகிறார்கள். உலகளவில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நிமிடத்திற்கு 200 முதல் 400 வரையிலான வார்...