இடுகைகள்

தன்னம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி குழந்தைகள் கேலி சித்திரவதையில் ஈடுபடுவது எதற்காக? உளவியல் ரீதியாக சில குழந்தைகள் எதிர்பார்த்த அங்கீகாரம், அன்பு கிடைத்திருக்காது. கோபம், ஆக்ரோஷன், வன்முறை மூலம் தங்களுக்கான புகழை, பெருமையை அடைய முயல்கிறார்கள் இதன்பொருட்டே கேலி சித்திரவதையை தொடங்குகிறார்கள். பள்ளிகளில் மாணவிகளில் சிலரும் இதுபோல கேலி சித்திரவதையை செய்து புகழ்பெற முயல்வதுண்டு. அதெல்லாமே வெட்டிப்பெருமைதான். மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர் இப்படி பிறரை கேலி சித்திரவதை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஏற்க கூடாது. முறையாக புகார் அளித்து பாதிக்கப்படுபவர்களை காக்க முயலவேண்டும். இதன் வழியாக கேலி சித்திரவதை குறையும்.  குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்? சில பெற்றோர்கள் குழந்தையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்பவர்களுக்கு சுய நம்பிக்கை, துணிச்சல், தைரியம் இருக்காது. தன்னம்பிக்கை குறைவாக, கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள். இப்படியானோரை பள்ளியில் கேலி சித்திரவதை குழு அடையாளம் கண்டு அடித்து துன்புறுத...

அதிகாரமும், பணபலமும் கொண்ட இனக்குழுக்களை தூக்கிப்போட்டு மிதிக்கும் தொன்மை தற்காப்புக்கலை ஆன்மாவைக் கொண்ட இளைஞன்!

படம்
      தி ஆன்சியன்ட் சோவரின் ஆப் எடர்னிட்டி காமிக்ஸ் ஃபெய் குய்ஃபெங் என்பவர் ரிஃபைனர் எனும் மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் திறமை பெற்றவர். இவரின் ரேங்க் ஒன்பது. இந்த நிலைக்கு ஒருவர் செல்வது கடினம். இப்படி புகழ்பெற்றவராக இருந்தவர், ஒரு பெண்ணின் ஒருதலைக்காதலால் ஏற்பட்ட தகராறில் சிக்குண்டு காணாமல் போகிறார். தற்காப்புக்கலை, மாத்திரைகளை தயாரிப்பது சார்ந்து நிறைய கண்டுபிடிப்புகளை செய்தவர். அவரின் சீடர் யாங் டி அந்தளவு திறமையானவர் அல்ல. குய்ஃபெங்கின் ஆன்மா, திடீரென லீ குடும்ப வாரிசு ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. அவர்தான் கதையின் நாயகன். இவருக்கு உடலில் தற்காப்புக்கலையைக் கற்க முடியாதபடி பிரச்னைகள் இருக்கின்றன. அதை ஃபெங் குய்ஃபெங்கின் ஆன்மா உணர்ந்து சரி செய்கிறது. நாயகன் லீ படிக்கும் தற்காப்புக்கலை பள்ளியில், குய்ஃபெங்கின் நினைவாக பெரிய சிலை ஒன்றை வைத்திருக்கிறார்கள். இப்போது நாயகன் லீக்கு உள்ள பொறுப்பு, தன்னை வலிமையாக்கிக்கொள்வது மட்டும்தான். அதற்காக அவன் மாத்திரைகளை தயாரிக்கும் சங்கத்திற்கு செல்கிறார். அங்கு ஒருவரைப் பார்க்கிறான். அவன், தரக்குறைவாக பேசுகிறான். அவனிடம் லீ சொல்வ...

சேகரவீராசாமியின் தன்னம்பிகை கதை! - ச.அன்பரசு

படம்
வீல்சேர் டென்னிஸ்  - சேகர் வீராசாமியின் தன்னம்பிக்கை கதை! - ச . அன்பரசு கடந்த டிசம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடந்த தபேபுயா ஓபன் வீல்சேர் டென்னிஸ் போட்டியின் ஃபைனல் . சேகர் வீராசாமி மற்றும் பாலச்சந்தர் இருவீரர்களுக்குமிடையேயான அனல் பறக்கும் நீயா , நானா ? சர்வீஸ்களால் பார்வையாளர்கள் கண்ணிமைக்கவும் மறந்து போனார்கள் . பாலச்சந்தரின் தவறுகளை பயன்படுத்திக்கொண்ட சேகர் , ஃபோர்ஹேண்ட் சர்வீஸ்களால் அநாயசமாக வென்றபோது எழுந்த கரகோஷங்கள் அவரின் ஆயுள் வலிகளையும் ஒரு நிமிடம் மறக்கவைத்தது . டென்னிஸ் கோர்ட் தாண்டிய வலிகளையும் சுமந்துதான் சேகர் தபேபுயா ஓபனில் சொல்லியடித்தார் . பின்னே , அர்ப்பணிப்பான விளையாட்டை விளையாட சேகர் தன் இடது காலையே வெட்ட நேர்ந்ததை விட வேறு வேதனை என்ன வேண்டும் ? தினக்கூலியான சேகரின் தந்தைக்கு , அவரை பள்ளிக்கு பசிக்காமல் சோறிட்டு அனுப்பக்கூட இயலாத வறுமை . வயிற்றை அமைதிபடுத்த பத்து வயதிலேயே வெள்ளி விளக்குகளுக்கு பாலீஷ் செய்யும்வேலையில் சேர்ந்தார் சேகர் . அப்போது அவரின் நண்பர் டென்னி...