இடுகைகள்

தந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட்  என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன.  தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன்.  அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரி...

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

ஜப்பானிய கூலிப்படையிடமிருந்து அமரத்துவ பொக்கிஷங்களை காக்கப் போராடும் நாயகன்!

படம்
  ஃபாக்குயின் - லாஸ்ட் லெஜண்ட் சீன திரைப்படம் ஐக்யூயி ஆப் ஒரு மணிநேர திரைப்படம் சீன கலாசாரத்தில் பிரிட்டிஷார், ஜப்பானியர்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இன்றும் கூட சீனாவில் ஜப்பானியர்களை தங்களது தீவிர எதிரியாக நினைக்கும் குடிமக்கள் அதிகம். இதற்கு முக்கியமான காரணம், ஜப்பானியர்கள் சீனாவில் போரிட்டு செய்த ஆக்கிரமிப்புகளும், அக்கிரமங்களும்தான். அதை இந்த தொடரும் பிரதிபலிக்கிறது்.  சீனத்தின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த கல்லறை உள்ளது. அதிலுள்ள பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஜப்பானிய ஆட்கள் முயல்கிறார்கள். அதை சீன நாட்டைச் சேர்ந்த நாயகன் சாமர்த்தியாக தடுத்து அனைவரையும் கல்லறையில் பிணமாக்குகிறான். ஜப்பானியர்கள் எதற்கு சீனாவில் உள்ள ஏதோ ஒரு கல்லறையைத் தேடி வரவேண்டும்? இங்குதான் அமரத்துவம் தரும் கனிகளைக் கொண்ட யுன்சி என்ற மரம் உள்ளது. அதற்காகத்தான் பேராசை கொண்ட மனிதர்கள் வேறு நாட்டுக்கே பயணம் செய்து வருகிறார்கள். பொக்கிஷங்களைக் கொள்ளையிட முயல்கிறார்கள்.  படத்தில் நாயகன் எந்திர புதிர் அமைப்புகளை திறக்கும் சூட்சுமம் கற்றவன். அவனது நண்பன், கதவுகளை திறக்கும் வழிமுறைகளை அறிந்தவன். தோழி, மல...

தந்தை - மகன் உறவில் உள்ள இடைவெளிக்கு உண்மையான காரணம்!

படம்
  அப்பா, மகன் உறவு என்பது சினிமாக்களில் வருவதைப் போல எளிதானது அல்ல. சொத்துக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்காக ஒருவர் பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தந்தைகள் பெரும்பாலும் மகன்களோடு நெருக்கமாக பழகுவதில்லை. பெரும்பாலும் இருவருக்கும் இடையிலான உறவில் மௌனமே உள்ளது. ஆண்களின் உறவு சிக்கல்கள் பற்றி பெரிதாக உளவியலாளர்கள் கவலைப்பட்டது இல்லை. ஆனால், பிரெஞ்சு - கனடா நாட்டு உளவியலாளர் கய் கார்னியு என்பவர், இதில் கவனம் குவித்து அப்சென்ட் ஃபாதர்ஸ் லாஸ்ட் சன்ஸ் என்ற நூலை 1991ஆம் ஆண்டு எழுதினார். உளவியலாளர் தன்னுடைய அப்பாவுடனான உறவை முன்னுதாரணமாக வைத்துத்தான் ஆய்வு செய்து நூலை எழுதி வெளியிட்டார்.  பெண் பிள்ளைகளை விடுங்கள். அவர்கள் தங்கள் அழகு, செயல் என ஏதாவது வகையில் பிறரிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்றவர்களிடமிருந்தே அங்கீகாரம், பாராட்டு கிடைப்பதில்லை. அந்த வகையில் மகன்களுக்கு தங்கள் தந்தையிடமிருந்து மனப்பூர்வமான பாராட்டு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் கூட அதற்கு வெகு காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  ஏன் தந்தை மகனை மனப்...

சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

படம்
  பீட்டர் கர்டன் ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது. குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார். ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் க...

தந்தையும் மகனும் சேர்ந்து கொலைகார இணையராக மாறிய வினோதம்!

படம்
  ஜோசப், மைக்கேல் அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். 1936இல் பிறந்தார். சிறுவயதில் ஆஸ்திரிய அகதிகளான ஸ்டீபன், அன்னா கலிங்கர் ஆகியோருக்கு   தத்து கொடுக்கப்பட்டார். பெற்றோரால் கடுமையாக அடித்து துவைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர். 1944ஆம் ஆண்டுமூத்த சிறுவர்களால் கத்தி முனையில் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக கையில் கத்தி வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்து கைத்தொழில் மன்னனாக மாறினார். பதினேழு வயதில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவுமூலம் பத்து குழந்தைகள் பிறந்தன.பிறகு, ஜோசப்பின் மனைவி இன்னொருவரோடு இணைந்து வாழச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகுதான் ஜோசப்பிற்கு விபத்து ஏற்பட்டது. அதில், தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு சோதனை செய்து பார்த்து, சைக்கலாஜிகல் நெர்வஸ்   டிசார்டர் என்ற பிரச்னையைக் கண்டுபிடித்தனர்.   தனது பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த திருமணம் பற்றி கவலைப்பட்டவர், திருமணத்தை செய்வோம் ஆண்டவன் அனுகிரகிப்பான் என மணம் செய்துகொண்டார். தான் வாழ்ந்த வீட்டையோ என்ன காரணத்தாலோ தீ வைத்தார். அதற்கு காப்பீடாக 1,600 டாலர்கள் கிடைத்தது....

மகளின் காதலனின் மேல் தந்தைக்கு உருவாகும் அதீத வன்மம்! தனா 51

படம்
  தனா 51 சுமந்த், சலோனி அஸ்வானி, முகேஷ் கண்ணா இயக்குநர் சூரிய கிரண் இசை சக்ரி  தனா போலீஸ் ஆகவேண்டும் என துடிக்கும் இளைஞர். தினத்தந்தி ஸ்டைலில், வாலிபர். அந்த முயற்சியில் இருக்கும்போது கமிஷனர் அந்த ஊரிலுள்ள ரௌடிகளை பிடிக்க தனாவை ரௌடி போலீஸ் ஆக வற்புறுத்துகிறார். தனாவும் அதன் உள்ளர்த்தம் அறியாமல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இறுதியில் அவரது வாழ்வை அழிக்கும் சூழ்ச்சி புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கிறது. காதலும் அவரது கையை விட்டு போய்விட்டது. இந்த சூழலில் அவர் என்ன செய்கிறார், கமிஷனரை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தின் சுமந்தின் எனர்ஜிக்கு எதுவுமே ஈடு கொடுத்து நிற்பதில்லை. செய்யும் விஷயங்களை யோசிக்காமல் செய்வது போல தெரிந்தாலும் அதன் பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதுதான் தனாவின் பலம். இப்படி இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றாலும் அங்கு நடக்கும் ராக்கிங், சீர்கேடுகளை தட்டி கேட்டு உதைத்து திருத்துவது தனாவின் வாடிக்கை.  இப்படி இருக்கையில் அந்த கல்லூரியில் புதிதாக படிக்க வருகிறாள் லட்சுமி. தனா செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த...

வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

படம்
  கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட் ஜென்னி பியர்சன் ஓவியம் டேவிட் ஓ கானல் அஸ்பார்ன் புக்ஸ் ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை.  ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட் கேரி பால்சன் மேக்மில்லன்  பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை.  கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ்  சாம் கோப்லேண்ட் ஓவியம், சாரா ஹோம் கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க...

முரடன், சாமுராய், துறுதுறு பெண் என மூன்று பேரும் இணைந்து சாமுராயைத் தேடிச்செல்லும் பயணம்! - சாமுராய் சம்புலு - அனிமேஷன்

படம்
                  சாமுராய் சம்புலு அனிமேஷன் தொடர் இருபத்தி ஆறு எபிசோடுகள் குருவைக் கொன்றுவிட்டு சுற்றும் சாமுராய் வீரனும் , ரைகு தீவில் வளர்ந்த குற்றவாளி ஒருவனும் நண்பர்களாகி , இளம்பெண் ஒருவளுக்கு அவளது தந்தையைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள் . தொடரின் டைட்டிலிலேயே ஜின் என்ற சாமுராய் வீரன் எப்படி , முகன் என்பவன் எப்படி , இவர்களை தனது பாதுகாவலர்களாக கொண்டு தந்தையைத் தேடும் ஃபு என்ற பெண்ணின் குணம் எப்படி என சொல்லிவிடுகிறார்கள் . இருபத்தி ஆறு அத்தியாயங்களில் சிறுகதை போல ஒரு கதையைச் சொல்லுகிறார்கள் . இவற்றில் ஜின் , முகன் என இருவருமே தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொண்டு சண்டைபோடுகிறார்கள் , நகைச்சுவை செய்கிறார்கள் , காதலிக்கிறார்கள் , தங்களை நிழல் போலத் தொடரும் இறந்தகாலத்தை நினைத்து வருந்துகிறார்கள் , புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் . இரண்டு ஆண்கள் , ஒரு பெண் என்றால் முக்கோண காதல் இருக்குமே என்றால் அதில்தான் வேறுபாடு காட்டுகிறார்கள் . முகன் , காசு கொடுத்தால் எதையும் செய்யும் முரடன் . அதிகம் யோசித்து செயல்ப...

கோடைக்கால டூரில் டிராகுலா குடும்பத்தை தீர்த்துக்கட்ட பிளான் போடும் வான்ஹெல்சிங் குடும்ப வாரிசு! - ஹோட்டல் டிரான்சில்வேனியா 3

படம்
              ஹோட்டல் டிரான்சில்வேனியா 3   Director: Genndy Tartakovsky Produced by: Michelle Murdocca Writer(s): Genndy Tartakovsky, Michael McCullers டிராகுலா இம்முறை பஸ்சில் மனிதர்களுடன் தன்னை மறைத்து சென்றுகொண்டிருக்கிறார் . அவரைத் தவிர்த்து பிற நண்பர்கள் எல்லோருமே வேறுபட்ட உடல் வடிவைக் கொண்டவர்கள் . இதனால் மக்கள் பயந்துவிடுவார்கள் என தங்களை மறைத்து பயணிக்கிறார்கள் . அப்போது அங்கு வரும் வான்ஹெல்சிங் குடும்பத்தின் தாத்தா , அவர்களை பழிகொண்டு குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட நினைக்கிறார் . ஆனால் மனிதர்களால் டிராகுலாக்களை கொல்ல முடியாது என்பதை ஏற்காமல் அவர்களை வேட்டையாடத் துடிக்கிறார் . இதனால் டிராகுலா தன் நண்பர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் தள்ளிவிட்டு அவரை எதிர்கொண்டு வெல்கிறார் . அதாவது அப்படி நினைத்துக்கொண்டு தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் .    பல நூறு ஆண்டுகளாக மனைவி இல்லாமல் வாழ்ந்துவிட்டதால் அவருக்கு தனிமை விரக்தியைத் தருகிறது . இதைக் கவனித்த அவரது மகள் அவருக்கு கோடை கால டூர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார் ....

பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு

படம்
                லூடோ இயக்கம் , கதை , திரைக்கதை ஒளிப்பதிவு , தயாரிப்பு அனுராக் பாசு இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள் . ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . நான்கு கதைகள் . நான்கு ஜோடிகள் . அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது . இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை . அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு ( பங்கஜ் திரிபாதி ). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார் . இவர்தான் கதையின் மையப்புள்ளி . இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு . சட்டுவின் வலது கரமாக விளங்கியவன் . அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான் . இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது . மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிற...