இடுகைகள்

கல்யாண் ராம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரவுடிகளை அசாத்திய துணிச்சலோடு பந்தாடும் கல்லூரி மாணவன்!

படம்
  அசாத்யுடு - கல்யாண் ராம், தியா அசாத்யுடு தெலுங்கு கல்யாணம் ராம், தியா   கல்லூரியில் படிக்கும் பார்த்துவுக்கு ஒரு செயலை செய்தால் அதன் முன்பின் என்ன நடக்கும் என்பது தெரியும். இதனால் அடுத்தவர்களின் பிரச்னையில தானாக சென்று தலையிட்டு அதை முடித்து வைக்க தயங்குவதில்லை. இவனது குணத்தால் பெத்த ரவுடியின் தம்பியை தன்னியல்பாக அடித்து கொல்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறை உதவியுடன் எப்பபடி கையாள்கிறான். ரவுடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியொருவனாக அசாத்திய துணிச்சல் கொண்ட மனிதனாக எப்படி உதவுகிறான் என்பதே கதை. கல்யாண் ராமின் படங்களில் கொஞ்சமேனும் கதைக்காக மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்ப்பதில் அந்தளவு சலிப்பு ஏற்படுவதில்லை. இதற்காக அவரது அத்தனை படங்களும் சிறப்பானவை என்று கூற முடியாது. இந்த படத்தில் பார்த்து என்ற பாத்திரத்தின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஒரு இளம்பெண்ணை ராக்கிங் செய்து அவளை பாலியல் வல்லுறவு செய்ய துரத்துகிறார்கள். கல்லூரி தலைவரின் மகன் என்று தெரிந்தும் அவனை அடித்து உதைத்து பெண்ணைக் காப்பாற்றுகிறான் பார்த்து. இதன் விளைவா...

மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!

படம்
  ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி ஹரே ராம் கல்யாண்ராம் 1,2, பிரியாமணி இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை. ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார்.   நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர...