மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?
மார்க்சியமும் இலக்கியமும் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் கட்டுரைகள் இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார். மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது? மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப...