இடுகைகள்

நன்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் எழுத்துருக்கள் பிரச்னை!

படம்
  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம்.  தளத்தில் பதிவேற்றிய சில கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் சரிவர வரவில்லை. எழுத்துகள் அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தன. இதற்கு காரணம், நான் பயன்படுத்தும் புதிய இணைய உலாவியி்ல் தமிழ் எழுத்துரு பிரச்னை. எங்கு எதில் பிரச்னை என கண்டறியவே நேரம் நிறைய செலவானது. எனவே, பிழை பொறுக்கவும். திரு. சீனிவாசன் (கணியம் நிறுவனர்) அவர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று பிரச்னையை சரிசெய்ய முயல்கிறேன். கணினி அதிக நினைவக சேமிப்பு கொண்டதல்ல என்பதால், செயல்களை வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கொண்டே செய்யமுடிகிறது.  குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கும்போதெல்லாம், உடனே தனது பணிச்சுமை கடந்து உதவியை வழங்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கு இப்பதிவு வழியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். 

மொழிபெயர்ப்பு கட்டுரை - நன்றி அறிவியல் பலகை இதழ்

படம்
       

நன்றி வாசகரே!

    முத்து காமிக்ஸ் வெளியிட்ட ஜானி நீரோ காமிக்ஸ் பற்றி, வாசகர் டிஸ்கவர் பூ தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பொதுவாக இப்படியான விமர்சனங்கள், கருத்துகள் கோமாளிமேடைக்கு வருவது அரிதானது. உண்மையை எழுதியதற்காக மிரட்டல் கடிதங்கள், இலவச நூல் தளங்களிலிருந்து நூல்களை சர்வாதிகாரமாக நீக்குவது போன்றவற்றையே பத்தாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறோம். அத்தி பூத்தாற்போல வந்த வாசகர் டிஸ்கவர் பூவுக்கு நன்றி. நீங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனத்தை படித்திருக்கிறீர்கள். ஆனால், காமிக்ஸை வாங்கி வாசிக்கவேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. அது முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனத்திற்கு பெரிய ஆதரவாக, உதவியாக அமையும்.  கோமாளிமேடை குழு

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறா...