போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!
போபால் அழிவின் அரசியல் மருதன் கிழக்குப் பதிப்பகம் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது. நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர். ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல் என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது. நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்ட...