இடுகைகள்

சோசலிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றுலக கோட்பாடு எப்படி திரிக்கப்பட்டது என்பதை விளக்குகிற நூல்!

படம்
          மாசேதுங்கும் மூன்றுலக கோட்பாடும் சீன பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், ஆட்சியாளருமான மாசேதுங்கின் ஆதரவாளர்களால் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் மாவோவின் மூன்றுலக கொள்கை எவ்வாறு தவறாக குருச்சேவ், டெங் ஷியாவோபிங் ஆகியோரால் மாற்றப்பட்டு கூறப்பட்டது என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள தவறுகளையும் சுருக்கமாக விவரிக்கிறது. நூல் மொத்தம் ஐம்பத்தாறு பக்கங்களைக் கொண்ட சிறு நூல்தான். அதிலேயே மூன்றுலக கோட்பாடு என்றால் என்ன, அதில் மாவோ கூறியது என்ன, பின்னாளில் ஆட்சிக்கு வந்த டெங், ரஷ்யாவின் அதிபராக இருந்த குருச்சேவ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி மாற்றினார்கள் என விளக்குகிறது. கூடவே ஆசியான் அமைப்பையும் கடுமையான தொனியில் விமர்சிக்கிறது. நூலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. தலைவர்கள் கூறிய கருத்துக்கு ஆதரவான விஷயங்களை மக்கள் தினசரி உள்ளிட்ட பத்திரிகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சீன பொதுவுடைமைக் கட்சி பற்றி தமிழில் படிப்பது நன்றாக உள்ளது. அதன் நோக்கத்தை, மாவோவின் லட்சியத்தை புரிந்துகொள்ள நூல் உதவுகிறது. உலகளவில் ஐக்கிய முன்னணி என கூட...

சீனா - இந்தியா ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

படம்
      ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்? இன்றோ நாளையோ நிச்சயமாக ஆதிக்கத்தை அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடைபெறும். அது உறுதி. அப்போது அதில் யார் வெல்வது என்பதை ஒரு நாடு எந்தளவு செலவு செய்து ராணுவத்தை உருவாக்கியுள்ளது என்பதைப் பொறுத்தே கூற முடியும். இந்திய அரசு, இணையத்தின் கட்சி சார்ந்த கேலி வதைக்குழுக்களை வைத்து வெல்ல முடியாது. இந்துமத ராணுவ வீரர்கள் மட்டுமே போராடி வெற்றியைப் பெற்றுவிடுவார்களா என்றும் புரியவில்லை.   சீனா, சாங்காய் கூட்டுறவு அமைப்பில் இடம்பெற்ற நாடுகளுடன் ராணுவப் பயிற்சிகளை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கியுள்ள பயிற்சிகளின் கூடவே, மேற்கு நாடுகளின் போர்முறைகளை அறிய வேண்டுமே?  அதற்காக பாகிஸ்தானின் நட்பு உதவுகிறது. அந்த நாட்டு ராணுவத்திற்கு அமெரிக்க அரசு பயிற்சி அளிக்கிறது. இப்படியாக சீனா தன்னை ராணுவத்தில் வலிமையான நாடாக வளர்த்துக்கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சீனா - 20,35,000 இந்தியா - 14,55,550 ராணுவ பட்ஜெட் சீனா - 231.4 பில்லியன் டாலர்கள் இந்தியா - 75 பில்லியன் டாலர்கள் விமானங்கள் சீனா - 3,304 இந...

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர்! - இந்தியா - சீனா அரசியல் கொள்கைகள் ஒப்பீடு

படம்
          சீனா, அமெரிக்காவை விலக்கி முதலிடத்தை அடையும் முயற்சியில் உள்ளது. அதன் ஒழுக்கம், கட்சி கட்டுப்பாடு, அர்ப்பணிப்பான உழைப்பு குலையாத பட்சத்தில் அதை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த மேற்கு நாடுகள் முயல்கின்றன. அவர்களின் உள்மன ஆசை அப்படி இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இருநாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம். சீனாவில் மக்கள் குடியரசு ஆட்சியில் உள்ளது. இதிலுள்ள அதிகாரிகள், பிரதமர், அதிபர் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கு ஒரே கட்சிதான் உள்ளது. அந்த கட்சிதான் அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கான நிர்வாக கமிட்டியில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு இடம் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கூறவேண்டுமெனில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக உள்ளது. இதன் தாய் சங்கமாக இந்து தீவிரவாத அமைப்பு, ஆர்எஸ்எஸ் உள்ளது. கலாசார அமைப்பு என பிரசாரம் செய்துகொள்ளும் இந்த அமைப்பே, இந்தியாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவரான மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. உறுப்பினர்கள் அடிப்ப...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல்கள்

படம்
            21. சத்யமேவ ஜெயதே காந்தியைப் பற்றிய விவாத நூல் 22.பச்சை சிவப்பு பச்சை பசுமைக்கட்சியின் வரலாறு 23.நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் பௌத்தம் பற்றி கேள்வி பதில் வடிவிலான அறிமுகம் 24.சதுரங்கம் ஆடும் போர்வீரன் சீன அதிபர் ஷி ச்சின்பிங்கின் ஊக்கமூட்டும் உரைகள் 25.தேடுபொருள் யாதுமிலை கடிதங்கள் 26.மாண்வரி அல்குல் பிடிஎஸ்எம் வாழ்க்கை முறை பற்றிய நூல் 27.ஆதிகாலத் தோழன் நாயின் குண இயல்புகளைப் பற்றிய நூல் 28. நம்பிக்கை மனிதர்கள் 2020 ஊக்கமூட்டும் மனிதர்களின் கதைகள் 29. இந்தியா 75 இந்திய சாதனைகள் பற்றிய நூல் 30. சினிமா பார்வை வணிக சினிமா பற்றிய விமர்சன நூல் 31. செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் போராளி ஆசாத் எழுதிய கட்டுரைகள் 32.வாட் ஏன் ஐடியா சார்ஜி திரைப்பட பாத்திரங்கள் பற்றிய ஜாலி பார்வை 33.காந்தியின் ராமன் காந்தி பற்றிய கட்டுரை நூல் 34. நிழலின் சிறகு அறிவியல் நேர்காணல்கள் 35.விலை பேசப்பட்ட கடவுள் செய்திக்கட்டுரைகள்

முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்

படம்
சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம். எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம். நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக ...

வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!

படம்
            வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே! சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது. சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவ...

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...

சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

படம்
  ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டை ரோட் டு செஃர்ப்டம் எஃப்ஏ ஹயேக்   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்   அரசியல்   தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே. 1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆ...

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை...