இடுகைகள்

பௌத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

புத்தமதம் பற்றிய அடிப்படைக் கருத்துகளை உரை வடிவில் முன்வைக்கும் நூல்!

படம்
    ஃபண்டமென்டல் ஆஃப் புத்திசம் பீட்டர் சான்டினா இ நூல் இணையத்தில் புத்தமதம் தொடர்பான கோடிக்கணக்கான நூல்கள் இலவசமாக படிக்க கிடைக்கின்றன. அப்படி கிடைத்த நூல்களில் ஒன்று, இந்நூல். நூலில் மொத்தம் பதிமூன்று உரைகள் உள்ளன. அத்தனையும் புத்தமதம் சார்ந்து பீட்டர் சான்டினா ஆற்றியவை. இதில் புத்த மதம், அதன் அடிப்படை கோட்பாடுகள், கருத்துகள் பலவும் பேசப்படுகிறது. எழுத்து வழியாக நிறைய கருத்துகளை விளக்க முயலவில்லை. ஏனெனில் இக்கருத்துகள் அனைத்தும் பேசப்பட்டவை. எனவே, புரிந்துகொள்வதற்கு ஏற்ற உதாரணங்களுடன் சற்று எளிமையாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்த நூலை படித்தாலே புத்த மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா என்றால் ஓரளவுக்கு என்றே பதில் கூறவேண்டும். எளிமையாக பேச்சு வழக்கில் மதம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளை கூறுகிறது. அந்த வகையில் இந்நூலை தொடக்க வாசிப்பிற்கான ஒன்றாக கருதலாம். 136 பக்கங்களைக் கொண்ட எளிய நூல், வேகமாக வாசித்துவிட எண்ணுவீர்கள். ஆனால் மத நூல் என்பதால், அந்தளவு வேகமாக வாசித்து கடக்கமுடியாது. அந்தளவுக்கு முக்கியமான யோசித்து கடக்கவேண்டிய நிறைய சொற்கள் உள்ளன. துன்பம், மகிழ்ச...

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு!

படம்
                நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் மின்னூல் வெளியீடு இந்த நூலை எழுதுவதற்கான சிந்தனை, தென்கொரியக் கவிஞரான கோயுன் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது உருவானது. இணையத்தில் சற்று எளிமையான பௌத்த நூல்கள் ஏதேனும் கிடைக்குமா என தேடத் தொடங்கினேன். அப்படித்தான் தம்மிகா என்ற பௌத்த துறவியின் நூல் கிடைத்தது. அவரது நூல் ஏற்கெனவே இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் பற்றிய குறிப்பில், அவர் எழுதிய சிறிய நூல், செவ்வியல் தன்மை கொண்டது என புகழப்பட்டிருந்தது. மதம் சார்ந்த இலக்கியங்களில் செவ்வியல்தன்மை என புரிந்துகொண்டால் சரி. என்னுடைய புரிதலுக்கு ஏற்றபடி நூலை எழுதியிருக்கிறேன். பிறரோடு ஒப்பீடு செய்துகொள்ள விரும்பவில்லை. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு நூலுக்கு மொழிபெயர்ப்பு வரவேண்டும். இச்செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான், அந்த நூல் காலத்திற்கேற்ப மாறுதல்களை சமாளித்து உயிர்வாழும். இந்து, கிறித்தவம், இஸ்லாமியம் ஆகியவற்றில் இருந்து பௌத்தம் வேறுபட்டிருப்பதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர், ஓஷோ ஆகியோர் தங்களது பல நூல்களி...

நடனமாடிக்கொண்டே விழும் இலைகள் - மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
           

பௌத்தம் அறிவோம் - வழிகாட்டும் புத்தரின் நெறிகள்

படம்
புத்தர் காலமாகிவிட்ட நிலையில் அவர் எப்படி நமக்கு உதவி செய்ய முடியும்? மின்சாரத்தை கண்டறிந்த பாரடே இறந்துவிட்டார்தான். ஆனால் நாம் இன்றும் மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம். ஆன்டி பயாடிக் மருந்தைக் கண்டுபிடித்து லூயி பாஸ்டர் இன்று நம்மோடு இல்லை. ஆனாலும் கூட அவரின் கண்டுபிடிப்பு மக்களின் உயிரைக் காத்துக்கொண்டுதானே உள்ளது. ஓவியத்துறையில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிய லியனார்டோ டாவின்சி காலமாகி பல்லாண்டுகள் ஆகிறது. அவரது ஓவியங்களைக் காணும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. ஊக்கம் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறோம் அல்லவா? வரலாற்று நாயகர்களும், நாயகியரும் இறந்து பல நூறு ஆண்டுகளானாலும் கூட அவர்களின் லட்சியங்கள், நம்பிக்கை நமக்கு ஊக்கம் கொடுப்பவை. நீங்கள் கூறியதுபோல புத்தர் காலமாகி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். ஆனால், அவர் கற்பித்த கொள்கைகள், நெறிகள், கூறிய அறம், காட்டிய பாதை இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது. புத்தரின் வார்த்தைகள் பல நூறு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இறந்து பல நூறு ஆண்டுகளாயினும் புத்தருக...

புத்தர் இறந்துவிட்டார். அவர் நமக்கு எப்படி உதவுவார்?

  பௌத்தம் - கேள்வி பதில்கள் புத்தர் இறந்துவிட்டார். அவர் எப்படி நமக்கு உதவ முடியும்? பாரடே, லியனார்டோ டாவின்சி, லூயி பாஸ்டர் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்கு உதவிக்கொண்டுதானே இருக்கின்றன. அவர்களின் உழைப்பும் ஆராய்ச்சியும் பல லட்சம் பேர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அது மாறவில்லைதானே? புத்தர் இறந்து பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட அவரின் சொற்கள் இன்றைக்கும் நமது வாழ்க்கையை செழிப்பாக்க வழிகாட்ட உதவிக்கொண்டுதான் உள்ளன. புத்தருக்கு மட்டுமே இத்தகைய பெருமை உரியதாகும்.  புத்தர் கடவுளா? இல்லை. அவர் தன்னை கடவுள் என்று எங்கேயும் கூறிக்கொண்டதில்லை. அவர் இறைவனின் பிள்ளை அல்ல. அவரின் தூதரும் அல்ல. அவர் தன்னை நேர்த்தி செய்துகொள்ள முயன்ற மனிதர். நாம் அவரைப் பின்பற்றி ஒழுங்கு செய்துகொள்கிறோம்.  அவர் கடவுள் அல்லாதபோது அவரை மக்கள் வழிபடுவது எதற்காக? உங்கள் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடமெடுக்க வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிக்கிறீர்கள். தேசியகீதம் பாடும்போது, அசையாமல் நின்று அதற்கு மரியாதை தெரிவிக்கிறீர்கள். இதைப்போன்றதுதான் புத்தரை வழிபாடு செய்வது...

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல்...

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற...

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத...

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தர...

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபி...

ஷாவோலின் கோவில் பண்பாட்டை இந்தியாவில் பரப்ப ஆர்வமாக உள்ளோம்!- ஷி யோங்ஷின், ஷாவோலின் கோவில்

படம்
                  ஷி யோங்ஷின் ஷாவோலின் கோவில் சீனா இந்தியாவில் உள்ள தற்காப்புக்கலையின் மற்றொரு பிரதிதான் சீனாவில் தற்போது கற்றுத்தரும் குங்க்பூ என நினைக்கிறீர்களா ? நான் இந்த கோட்பாட்டை நம்பவில்லை . ஷாவோலின் குங்க்பூ என்பது போதிதர்மாவை தனியாக உள்ளடக்கியது அல்ல . சீனாவில் தற்காப்புக்கலைக்கென தனி பாரம்பரியம் உள்ளது . இது இந்தியாவில் பயிலப்படும் தற்காப்புக்கலைகளிலிருந்து மாறுபட்டது . எங்கள் குங்க்பூ பல்வேறு ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று மாறுபட்டு வருகிறது .    பல்வேறு நாட்டு தலைவர்களும் ஷாவோலின் கோவிலை பார்வையிட்டுள்ளனர் . இந்திய பிரதமர் மோடி இதனை பார்வையிடவேண்டும் என விரும்புகிறீரகளா ? நாங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போதிதர்மா பற்றியும் , அங்குள்ள புத்த நடைமுறைகளை அறியவும் விரும்புகிறோம் . உங்கள் பிரதமர் ஆற்றல் வாய்ந்தவராக உள்ளார் . அவர் புத்தம் பற்றியு்ம் அறிவு கொண்டவராக உள்ளார் . அவர் எங்கள் கோவிலுக்கு வருகை தருவதோடு இந்தியாவிலும் எங்கள் வளர்ச்சிக்கு உதவுவார் என நினைக்கிறேன் .  ...

காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்

படம்
            மொபியஸ் கிம் கி டுக் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார் . காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது . வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும் , குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார் . நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும் . ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது . ஆண்குறியை வெட்டுவது , அதை வாயில் இட்டு மெல்லுவது , இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது , காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது , காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது . தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது , அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்ச...