இடுகைகள்

சந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

  பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

பொருட்களின் விலையே அதன் விற்பனையை தீர்மானிக்கும் காரணி - பாயும் பொருளாதாரம்

படம்
  பாயும் பொருளாதாரம் ஆதிகாலத்தில் மனிதர்களுக்குத் தேவையாக இருந்தது உணவு, உடை, இருப்பிடம். இன்றும் கூட அதே தேவைக்காகவே பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள்தான். ஆனால், அதன் பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாளித்துவ தத்துவத்தில், அரசு பெரும் சக்தியாக இருந்து மக்களிடமிருந்து பணத்தை வரியாக பிடு்ங்கி பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிவிடுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி என ஏதேதோ பிதற்றல்கள்... மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் இன்றுவரை அப்படியே உள்ளன. கூடுதலாக, அவை பின்வரும் தலைமுறையினருக்காகவும் சேர்த்துவைக்கத் தொடங்கியுள்ளனர். நீர், காடு, வன விலங்குகள், பாறைகள்,மரம் செடி கொடிகள், மணல், எண்ணெய், தாது, எரிவாயு என அனைத்துமே தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். அவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை மழை பெய்யும்போது குட்டைகள், ஏரிகளை தூர்வாரி வைத்து சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். இதன்விளைவாக குடிநீர் பற்றாக்குறை தீரும். அப்படி இல்லையெனில், பற்றாக்குறை உருவாகும். பட்டினி, பஞ்சம் எல்லாமே இப்படி உருவானவைதான். நடப்பு காலத்தில் வணிகர்கள் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாட்டை உருவா...

பிளாக் மித் - வுகோங் உலகை கலக்கும் சீன வீடியோகேம்

படம்
      உலகை கலக்கும் சீன வீடியோ கேம் - பிளாக் மித் வுகோங் சீனாவில் இருந்து வெளிவரும் அனைத்தையும் உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியான சீனா, மாபெரும் வளர்ச்சியையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிளாக் மித் என்ற வீடியோ கேம் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியிட்ட மூன்று நாட்களில் பத்து மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் 854 மில்லியனாக உயரும் என வணிக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை இது வெறும் வீடியோகேம் மட்டுமல்ல. அவர்களின் கலாசாரமும் இணைந்துள்ளது. ஆப்ரோசெஞ்சு, பிளாக் மித் விளையாட்டை விளையாடி இரண்டு மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளார். ஏறத்தாழ அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். காத்திருப்பு வீண் போகவில்லை. விளையாட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கணினி விளையாட்டு சீன நாட்டுப்புறக்கதையான ஜர்னி டு வெஸ்ட் என்ற கதையை ஆதாரமாக கொண்டது. பல்வேறு நவீன மாற்றங்களுடன் கணினி விளையாட்டு பயனர்களின் கைகளுக்கு வந்துள்ளது. தொன்மை புனைவுகளோடு, நவீன கண்டுபி...

யாவரும் ஏமாளி புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  நூல் விரைவில் அமேஸானில் வெளியாகும்..... நன்றி!

ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

படம்
  ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள். இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.   இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த...

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள...

பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

படம்
  உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம்.  திட்டமிடுங்கள்  ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும்.  சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும்  பிராண்டிற்கு மாற்று  இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளி...

ஃபிளேவர்ட் மில்க் மார்க்கெட்டை நூதனமாக பிடித்த பார்லே அக்ரோ!

படம்
  நாடியா சௌகான், பார்லே அக்ரோ ஃபிளேவர்ட் மில்க் பிராண்டுகளை சூப்பர் மார்க்கெட்டில் அல்லது மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள பஜார் தெருவில் சீமாட்டி கூல்ட்ரிங்க்ஸ் கடையில் கூட வாங்கியிருப்பீர்கள். குறைந்தபட்சம் அதில் பிரிட்டானியா, அமுல், நெஸ்லே, ஐடிசி பிராண்டுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  ஃப்ளேவர்ட் மில்க் பொதுவாக இருபது ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில் தனிப்பெரும் நிறுவனமான ஆதிக்கம் செலுத்துவது அமுல்தான். அதற்குப் பிறகுதான் பிற நிறுவனங்கள் வரும். ரூ.20, 25, 35, 40 என விலை வரிசை போகிறது. இதை ஒரே ஒரு நிறுவனம் அண்மையில் மாற்றியிருக்கிறது. அதுதான் பார்லே. பிராண்டின் பெயர் உங்களுக்கே தெரியும் ஸ்மூத். எல்லோரும் 180 மில்லி 20 அல்லது 25, 35, 40 என சொகுசாக விலை வைக்க பார்லே சல்லீசான ரேட்டில் பிராண்டை சந்தையில் இறக்கியது. எவ்வளவு என நினைக்கிறீர்கள். 85 மில்லி. ரூ.10 தான். ஹிட்டல்ல. மாஸ், மெகா ஹிட்.  பார்லே அக்ரோவின் இயக்குநர் நாடியா சௌகான், தனது பிராண்டின் வெற்றியை எங்கே அடையாளம் கண்டார் என்பதே முக்கியமானது. சில மாதங்களுக்கு முன்னர், படல்கங்கா ஆற்றுப்பக்கம் ரிலாக்ஸ் செய்...

வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

படம்
  வாடிக்கையாளர் தான் தெய்வம்!   அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.   ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.   வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி த...

மரபான நெற்பயிர் ரகங்களை சேகரிக்கும் விவசாயி!

படம்
  கரிமங்கலம் தாலூக்காவைச் சேர்ந்த ஜே பாளையத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.  தனது நிலத்தில், நாட்டுரக பயிர்களை பயிர்செய்து வருகிறார். சிறுவயதில் தனது தாத்தா பயிரிட்ட கத்தரி செடிகளை பார்வையிட்ட நினைவு அவருக்கு இப்போதும் இருக்கிறது.  விவசாயத்தை பட்டப்படிப்பில் எடுத்து படித்தவருக்கு, வேலை எளிதாக கிடைக்கவில்லை. சரி இருக்கும் நிலத்தில் பயிர்களை பயிரிடலாம் என்று நினைத்து உழைத்த உழைப்பும் கைகொடுக்கவில்லை. எனவே, நாட்டு ரக பயிர்களைத் தேடி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு சென்றார்.  நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்பவர்களிடம் பேசினேன். அதில் நாட்டு ரக பயிர்கள் பலவும் அழிந்துவிட்டதை அறிந்தேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த நிலையை மாற்ற விரும்பினேன். நினைத்ததோடு அல்லாமல் அதற்காக உழைக்க விரும்பினார். அப்படித்தான் ஐந்து ஆண்டுகளில் 26 நாட்டு ரகங்களை சேகரித்தார்.  பழங்குடிகள் வாழும் ஊர்களான மோதுர், வத்தல்மலை, சித்தேரி, பெத்தமுகிலாலம் சென்று நாட்டு நெற்பயிர் ரகங்களை சேகரித்திருக்கிறார். இவை அதிக பராமரிப்பு கோராதவை. எளிதாக பூச்சிகளையும், நோய்களையும் சமாள...

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை சாத்தியமா?-

படம்
              இவற்றின் முக்கியமான பணி . எதிர்ப்பாலினத்தைக் கண்டுபிடித்து உறவு கொள்வதுதான் . அதற்கு ஏற்ப தன்னை தயாராக வைத்திருக்கிறது . பெண்ணின் உடல் மாத த்திற்கு ஒரு கருமுட்டையை தயாரிக்கிறது என்றால் , ஆணின் உடலில் இதற்கு ஏற்ப நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன . இதில் உடலுறவின்போது எது வெல்கிறதோ அது கருமுட்டையை அடைகிறது . பிற விந்தணுக்கள் கருமுட்டையில் உள்ள அமிலத்தில் அழிகின்றன . கருத்தடைக்கு ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அவற்றில் 15 சதவீதம் சரியாக வேலை செய்வது இல்லை . இதன் அர்த்தம் , கரு உண்டாகிவிடுகிறது என்பதுதான் . கருத்தடை என்று வரும்போது அதில் பெண்களுக்கான பொருட்களே அதிகம் , மாத்திரை , கருவிகள் , க்ரீம்கள் என ஏராளம் உ்ண்டு . பெண்களால் கருவை தடுக்க முடியும் என்ற சொன்னால் ஆண்களால் முடியாதா ? அவர்களுக்கும் கருவை தடுக்கும் மாத்திரைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது . 1960 இல் பெண்களின் ஹார்மோன் கருத்தடை மாத்திரை உருவாக்கப்பட்டது . அதன் பெயர் ஈனோவிட் . இந்த மாத்திரை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது...

சினிமா, இசை அல்லாமல் பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்! - விரிவாகும் பாட்காஸ்ட் சந்தை

படம்
                பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் ! பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மொழிகளில் பாட்காஸ்ட் (Podcast) சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது . டிவி , இணையம் வெற்றி பெற்றுள்ள நவீன காலத்திலும் பாடல்கள் அல்லாத நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்காஸ்ட் சந்தை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதிலிபி எஃப்எம் என்ற ஆப் , விவசாயிகள் வாழ்க்கை பற்றி பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டது . இதனைப் படித்துவிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தங்கள் மொழிகளில் தெரிவித்திருந்தனர் . 2014 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் பாட்காஸ்ட் சேவையை வழங்கத் தொடங்கியது . இந்த செயலியில் பதிவிடப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ரசிக்கப்பட்டு வருகின்றன . பாடல்கள் அல்லாத பல்வேறு செய்திகளுக்கான பாட்காஸ்ட் சந்தை வளர்ச்சி பெற்றாலும் வீடியோ மீதான மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது . குறிப்பாக யூடியூப்பின் வளர்ச்சி 45 சதவீதம் ( ஜூன் , ஜூலை ) வளர்ச்சியடைந்துள்ளது . நெட்பிளிக்ஸ் நிறுவனம் ...