இடுகைகள்

வினேஷ் போகத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் சீண்டலை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது, எனக்கு துப்பாக்கி சுடும் போட்டிகள் இருந்தன!- மனுபாகர்

படம்
              2024ஆம் ஆண்டு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நிறைய வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, வீரர்களை பாலியல் சீண்டல், வல்லுறவுக்கு உட்படுத்தியது என வலதுசாரி மதவாத கட்சி எப்போதும் போல நிறைய பாதகங்களை செய்தது. இதையெல்லாம் கடந்து வீரர்கள் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றவர், மனுபாகர். அதற்குப் பிறகு எவரும் வெண்கலம் என்பதையே தாண்டமுடியவில்லை. நீரஜ் சோப்ரா மட்டுமே ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார். வெண்கலம் என்பதை இந்தியாவின் பென்ச்மார்க்காக மாற்றி காட்டியவர் மனுபாகர். அரசின் கைக்கூலி ஊடகங்கள், மனுபாகருக்கும், நீரஜ் சோப்ராவுக்கு கல்யாணம் செய்து வைத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு இருவரையும் இணைத்து வினோதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரிடம் பேசினோம். திறமையை பாதுகாக்க வேண்டும் என கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்? ஒரு வீரருக்கு விளையாட்டை கற்பதற்கான நேரம் என்று ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நீங்கள் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் த...

நூறு கிராம் முதுகெலும்பு!

படம்
        நூறு கிராம் முதுகெலும்பு! மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.   என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை. இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.