இடுகைகள்

ராயல்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசின் ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம்

படம்
        ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம் கொரோனா வந்த இரு ஆண்டுகளில் பெரிய லாபம் பார்த்தது பாரத் பயோடெக் என்ற இந்திய மருந்து நிறுவனம், மக்களின் உயிர்பயத்தை பயன்படுத்தி நிறைய லாபம் சம்பாதித்தது. இதற்கு ஆளும் வலதுசாரி மதவாத கட்சியின் ஆசிர்வாதம் இருந்தது. உள்நாட்டில் அடித்துப் பிடுங்கி காசு சம்பாதித்தாலும் தடுப்பூசியை உலகளவிலான மருத்துவ அமைப்புகள், அங்கீகரிக்க மறுத்துவிட்டன. ஆனால், இந்திய அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு பத்ம பூஷன் விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியது. உண்மையில், நாட்டின் மதிப்பிற்குரிய விருது, அரசியல் காரணங்களுக்காக தனது மதிப்பை இழந்து டிவி சேனல்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் தாம்பூலப்பை போல மாறியிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், நேஷனல் இன்ஸ்டிடியூட் வைரலாஜி(என்ஐவி) என்ற எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அரசு நிறுவனம் ஒப்பந்தம்போட்டு, இணைந்து கோவாக்சினை உருவாக்கின. ஆனால் மருந்து விற்பனைக்கு வந்தபோது என்ஐவிக்கான எந்த அங்கீகாரமோ, அடிக்குறிப்போ கூட இல்லை. வலதுசாரி மதவாத அரசுக்கு வாழ்நாள...

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக...