இடுகைகள்

ஆப்பிரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’

படம்
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...

பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

படம்
      மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள் உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள். மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும...

தான்சானியாவில் நிலவிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க உதவிய சீன வேளாண்மை உத்திகள்!

      சீனா  - ஆப்பிரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தால் வலிமை பெறும் பெண்கள், குழந்தைகள்! ஆப்பிரிக்காவின் ஜாம்பியா, டான்சானியா, மலாவி ஆகிய நாடுகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டு செய்த ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பது சதவீதம் பேர் ஊட்டச்சத்து இன்றி வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவிற்கு உதவி செய்கிறோம் என வெற்றுப்பேச்சு பேசி வந்த நிலையில் சீனா செய்த உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு, சீனாவும், ஆப்பிரிக்க நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. இதன்படி சீன வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை சாந்த முறைகளை, தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவுக்கு வந்து புதிய வேளாண்மை முறைகளை வீரிய பயிர்களைப் பற்றி பயிலத் தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களின் எழுச்சியால், ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, தான்சானியாவில் சோளம், சோயாபீன்...

குரங்கம்மை தொற்று!

படம்
        எம்பாக்ஸ் - குரங்கம்மை ஆப்பிரிக்காவில் மக்களைத் தாக்கி கொன்று கொண்டிருந்த எம்பாக்ஸ் இப்போது வெளிநாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. ஸ்வீடன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எம்பாக்ஸ் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்ட நோயாளிகள் இருவருமே ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் என மருத்துவர்கள் தகவல்களை அறியத் தருகிறார்கள். 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்ட அம்மை நோய் இது. டென்மார்க் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. குரங்கம்மை என்று கூறுவதில் இனம் சார்ந்த சிக்கல் எழ உலக சுகாதார அமைப்பு, மங்கி பாக்ஸ் என்பதை எம்பாக்ஸ் என அழைக்கலாம் என்று கூறியது. 1970ஆம் ஆண்டு, பத்து வயது சிறுவனுக்கு குரங்கம்மை தாக்கியது. அந்த சிறுவன் காங்கோ நாட்டை பூர்விகமாக கொண்டவன். முன்னெச்சரிக்கை குரங்கம்மை தாக்குதல் கொண்ட நாடுகளுக்கு செல்பவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களையும் விலங்குகளையும் பார்த்த உடனே பதறி விலகி இருக்கவேண்டும். காய்ச்சல், தோலில் அழற்சி இருந்தால் உடனே மருத்துவரை ...

ஏழை நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து நன்மதிப்பை பெறும் சீனாவின் உத்தி!

படம்
        வரவேற்பு கிடைக்குமிடத்தில் வணிகத்தை நடத்தி வெற்றி பெறும் சீனா! சீனாவுக்கு அமெரிக்காவை அசைத்துப் பார்த்து முதலிடத்தை பெறும் லட்சியம் உண்டு. தென்சீனக்கடலை அதன் ராணுவக்கப்பல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இதெல்லாம் கடந்து, உள்நாட்டில் வணிகம் வளர்ச்சியில் சுணக்கம் கண்டவுடன், இரண்டாயிரத்திலேயே அயல்நாடுகளை நோக்கி சீன நிறுவனங்களை செல்லுமாறு அந்த நாட்டு அரசு கூறிவிட்டது. அரசு கூறியதை அரசு, தனியார் நிறுவனங்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சவுதி அரேபியா, மலேசியா, வியட்நாம், எகிப்து, மொராகோ, கஜகஸ்தான், இந்தோனேசியா, அர்ஜென்டினா, செர்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வணிகம் செய்யத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கை அமெரிக்கா தடை செய்தாலும் கூட அதைப்பயன்படுத்தி சீனா பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தை கொண்டு சென்றுள்ளது. அந்த நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் வறுமையாக உள்ள நாடுகளில் தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன. இப்படி செய்வதால் சீனாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளா...

ஆப்பிரிக்க கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்த முயலும் இளம்பெண் கேட் கலோட்!

படம்
  கேட் கலோட் என்ற பெண்மணி கென்யா நாட்டைச் சேர்ந்தவர். இவர்,2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமினி என்ற தகவல்தள நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், ஆப்பிரிக்காவில் உள்ள விவசாய நிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.  மண்வளம்,ஈரப்பதம், மழை ஆகிய தகவல்களை செயற்கைக்கோள் மூலம் சேகரித்து வருகிறது. கலோட்டின் நோக்கம், விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய தகவல்களை  எஸ்எம்எஸ் வழியாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் பயிர்களை கவனித்து வளர்க்கலாம், லாபம் பெறலாம். ஆப்பிரிக்க கண்டமே இதன் மூலம் லாபம் பெறும். இந்த திட்டத்தை சற்று விரிவாக பார்ப்போம்.  மொத்தம் ஆறு செயற்கைக்கோள்கள் வானில் அலைந்து திரிந்து ஆப்பிரிக்காவின் 11.7 மில்லியன் சதுர மைல் நிலப்பரப்பு பற்றிய காலநிலை தகவல்களை சேகரிக்கும். இதை வைத்து காலத்தே பயிர் செய்து, பராமரித்து லாபம் பெறலாம். வெள்ளம், பூச்சி தாக்குதல், மழை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு போன் வழியாக அனுப்பி எச்சரிக்கப்படும். ஆப்பிரிக்க கண்டமே வேளாண்மையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, அதை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும்.  உலகளவில் உள்ள வி...

நீங்கள் மட்டும்தான் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? - எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ்

படம்
  எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் நேர்காணல் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ். இவர் தனது முதல் நாவலை எழுதியபோது அதற்கு பெரும் வரவேற்பு, மாலை மரியாதையெல்லாம் கிடைக்கவில்லை. ஜான் குரோவ்ஸ் டெவில் என்பதுதான் நூலின் பெயர். இந்த நூல் பதிப்பாளர்களால் 78 முறை மறுக்கப்பட்டுள்ளது. கடும் விரக்திக்குள்ளான மார்லன், எழுதிய கையெழுத்து பிரதி, நண்பர்களின் கணினியில் இருந்த பிரதி என அனைத்தையும் அழித்தார். ஆனால் ஒரு ஒரு கணினி பிரதி மின்னஞ்சலில் தப்பி பிழைத்தது. பின்னாளில் 2015ஆம் ஆண்டு எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்க்ஸ் என்ற புனைவை எழுதி   மேன் புக்கர் பரிசை வென்றார். நூலில், இசைக்கலைஞர் பாப் மார்லியை ஒருவர் கொலை செய்ய முயல்வதை புனைவாக்கியிருந்தார். அதற்குப் பிறகு டார்க் ஸ்டார் எனும் தொடர்வரிசை நாவல்களை எழுத தொடங்கினார். பிளாக் லியோபேர்ட், ரெட்வோல்ஃப் என இரண்டு நாவல்கள் ஓடிடியில் தொடராக தயாரிக்கப்படவிருக்கின்றன. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவிற்காக வந்தவரிடம் பேசினோம். மரபான வரலாற்றை எப்படி கற்பனையான புனைவாக மாற்றுகிறீர்கள்? நான் சிறுவயதில் இருந்து பல்வேறு வகையான கதை...

வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

படம்
            காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது . ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது . அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம் . பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல . இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது . இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள் . காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள் . அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார் . தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார் . இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்ப...

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட பசுமைச் சுவர்!

படம்
  ஆப்பிரிக்காவின் பசுமைச்சுவர்!  ஆப்பிரிக்காவில் கிரேட் கிரீன் வால் (Great green wall) என்ற திட்டத்தின்படி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இத்திட்டப்படி, 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டு சகாரா பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வடக்குப்பகுதி ஆப்பிரிக்காவின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.  2030க்குள் மரக்கன்றுகளை முழுமையாக நடுவது திட்டம். இதன்மூலம், சாஹேல் எனும் அப்பகுதியில் மழைபொழிவு கூடி, வெப்பம் குறையும் என சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, டிசம்பரில் அமெரிக்க புவி இயற்பியல் மாநாடு நடைபெற்றது.  இதில், எதிர்காலத்தில் பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. பசுமை சுவர் திட்டம், வெப்பத்தை எளிதில் எதிர்கொள்ள உதவும்.   சகாராவை பசுமையாக்கும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க பருவகாலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் என சூழல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் தொடங்கும் மாதங்களில் வெப்பமான வறண்ட காற்று வீசுகிறது. வடகிழக்கு  பகுதியில் இக்காலத்தில் ஈரப்பதமான காற்று வீசுகிறது. ”சூரியனின்...

உணவுப் பழக்கத்தால் மாறும் வாழ்க்கை முறை!

படம்
  சமூக கலாசாரத்தைப் பாதிக்கும் உணவு!  ஆப்பிரிக்காவின்  சகாரா பகுதியில் வேவர் பறவைகளை (Weaver birds) வைத்து நடத்தை சூழலியல் ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். இந்தப் பறவையின் உணவு விதைகள், தானியங்கள்தான். வேவர் பறவையின் உணவுப்பழக்கம்,  பிற பறவைகளோடு இணைந்து வாழும் சமூக பழக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானியங்களை உண்ணும் வேவர் பறவைகளோடு பூச்சிகளை உண்ணும் பிற பறவைகளை ஒப்பிட்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இதுபற்றிய பற்றிய ஆய்வுக்கட்டுரை, தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது.  வேவர் பறவை, ப்ளோசிடே(Ploceidae,) எனும் இசைப்பறவை குடும்பத்தைச் சேர்ந்தது.  சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் வேவர் பறவை, திறந்தவெளியில் குழுவாக இணைந்து இரை தேடுகின்றன. ஒரே மரத்தில் குழுவாக கூடு கட்டி வாழ்கின்றன. இப்படி குழுவாக இருப்பதற்கு, வேவர் பறவையின் உணவுப்பழக்கம் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே வேவர் இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் காட்டில் வசிக்கின்றன. ஆனால் அவை இரை தேடுவதையும், மரங்களில் கூடு கட்டுவதையும் தனியாகவே ச...

இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

படம்
  ரீவைல்டிங் ஆப்பிரிக்கா கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ் ராபின்சன் சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள்.  வொய் ஷார்க்ஸ் மேட்டர் டேவிட் ஷிஃப்மேன் ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்  விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார்.  பிளாட்டிபஸ் மேட்டர்ஸ்  ஜாக் ஆஸ்பை ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார்.  எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ்  சீரியன் சம்னர்  ஹார்பர் கோலின்ஸ்  குளவிகள் பற்றி நிறைய சுவாரசிய...

155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!

படம்
சூயஸ் கால்வாய்  சூயஸ் கால்வாய் உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.  ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது.  மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது. 1859 - 1869  என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.  இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ...

சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை கண்டுபிடித்தவர்! - ஜேன் குட்டால்

படம்
  ஜேன் குட்டால் மாணவர்களுக்கான பத்திரிக்கையில் வேலை செய்தாலும் கூட இயற்கை தொடர்பான ஆய்வாளர் ஜேன் குட்டாலை, யார் அவரு, அவ்வளவு ஃபேமஸா என்று கேட்டு விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்கள். எனவே அவரைப் பற்றி பேசிவிடலாம்.  ஜேன் குட்டால் இளமையில்.. யாரு சாமி இவர்?  ஜேன் குட்டால் 1934ஆம் ஆண்டு பிறந்தவர். ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி லண்டனில் ஹாம்செட்டில் பிறந்தவரின் பெற்றோர் தொழிலதிபர் - எழுத்தாளர் என வேறுபட்டவர்கள்.  மனிதர்கள் அல்லாத விலங்குகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்பவர் ஜேன். மேலும் மானுடவியல் ஆய்விலும் பேரார்வம் கொண்டவர். சிம்பன்சிகளுக்கும் மனிதர்களுக்குமான ஆய்வில் இவரே முன்னோடி. ஜேனின் சிறுவயதில் அவரது அப்பா மார்டிமோர் ஹெர்பர்ட், சிம்பன்சி பொம்மையை வாங்கிக்கொடுத்தார். அதன் பெயர் ஜூபிலி. அந்த பொம்மை ஜேனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அந்த நாள் தொடங்கி சிம்பன்சி பற்றிய ஏராளமான விஷயங்ளை தேடி படிக்க த் தொடங்கினார்.  தனது இருபத்தாறு வயதில் தான்சானியில் உள்ள காம்பே ஸ்ட்ரீம் தேசியப் பூங்காவில் சிம்பன்சி ஆய்வில் மூழ்கினார். அறுபது ஆண்டுகள் இந்த ஆய்வை செய்தார். இதில்தான் சி...

வேறுபாடுகளை இணைக்கும் இணையம்!

படம்
  உகாண்டாவின் வடக்குப்பகுதி. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலம் கொடுமையானது. அடிக்கடி புரட்சியாளர்கள் அங்கு வந்து சிறுவர்களை கடத்திக்கொண்டு சென்று படைகளில் சேர்ப்பார்கள். டேனியல் கோமாகெச் அப்படி வீரர்கள் வரும்போது தப்பிப் பிழைத்து புதர்களில் மறைந்திருந்தவர்தான். இன்று 34 வயதாகும் அவர், தனது கல்வி தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விஷயங்களாலும் தடைபடாதபடி பார்த்துக்கொள்ள மெனக்கெட வேண்டியிருந்தது. இப்போது அவர், தனது கிராம மக்களுக்கு பாஸ்கோ எனும் வகையில் இணையத்தை வழங்கி வருகிறார். இணையம் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் இவர்.   பாஸ்கோ எனும் இணைய முறை இப்போது ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் போன் நெட்வொர்க் முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.  டேனியல் இணையத்தின் வழியில் படிப்புகளை படித்து ஆன்லைனில் வேலையைப் பெற்றுள்ளார். சமையல் ரெசிப்பிகளைக் கூட கற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கை மாற்றம் பெற்றுள்ளது. இணையம் என்பது எனது ஆசிரியர் என்றே சொல்லி வருகிறார்.  மக்களின் இனக்குழுவாக ஒன்றாக சே...